அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

செவ்வாய், 1 அக்டோபர், 2013

உடலின் தசைப்பகுதி எலும்பாக மாறும் விநோத பாதிப்புக்குள்ளான பெண் (படங்கள் இணைப்பு)

கையொன்றை இழந்த பின்னரும் வாழ்வை முழுமையாக வாழப் போவதாக சூளுரைப்பு

உடலின் தசைப்­ப­குதி எலும்­பாக மாறும் விநோத பாதிப்­புக்­குள்­ளாகி கையொன்றை இழந்த பெண்­ணொ­ருவர், தனது நிலையால் மனம் தளர்ந்­து­வி­டாது தனது வாழ்வை முழு­மை­யாக வாழ்­வ­தற்­காக திட­சங்­கற்பம் பூண்­டுள்ளார்.

அமெ­ரிக்­காவை பூர்­வீ­க­மாகக் கொண்டு பிரித்­தா­னிய எஸெக்ஸில் வாழும் அஷ்லி கர்­பியல் (31 வயது) என்­ப­வரே இவ்­வாறு திட­சங்­கற்பம் பூண்­டுள்ளார்.

அவ­ருக்கு பிப்ரோடிஸ்பிளா­ஸியா ஒஸி­பிகன்ஸ் புறொ­கி­ர­ஸிவா என்­ற­ழைக்­கப்­படும் பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது.

இத்­த­கைய பாதிப்­புக்­குள்­ளான 700 பேர் மட்­டுமே இது­வரை உலகில் அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளனர்.

தனக்கு ஏற்­பட்ட பாதிப்பால் தன்­னு­டைய கையொன்றை இழந்தும் கால் ஒன்று பாதிக்­கப்­பட்டும் வரு­கின்ற நிலையில், தனது தாடை­களை அசைக்­கக்­கூ­டிய வல்­ல­மையை இது­வரை இழக்­கப்­ப­டாமை கார­ண­மாக தான் ஒரு அதிர்ஷ்­ட­சாலி என்று அஷ்லி கூறினார்.

தனது வாழ்வை முழு­மை­யாக வாழ்­வதே தனது இலட்­சியம் என அவர் கூறினார்.

''எனக்கு ஏற்­பட்­டுள்ள நிலை­யா­னது நான் மனபலமும் வெற்­றி­ய­டை­வ­தற்­கான தீர்­மா­னமும் கொண்ட ஒருத்தி என்­பதை எனக்கு உணர வைத்­துள்­ளது. நான் எதை­யா­வது செய்ய வேண்­டு­மானால் அதற்­கான வழி­மு­றையை கண்டு பிடிக்­கிறேன். எனது உடலில் எவ்­வ­ளவு காலம் உடல் இயக்­கங்கள் இருக்கும் என்­பது தெரி­யாது. அதனால் நான் தற்­போது என்னால் இயன்ற அளவில் அனு­ப­வங்­களைப் பெற விரும்­பு­கிறேன்’’ என அவர் தெரி­வித்தார்.

2002 ஆம் ஆண்டு இணை­யத்­தளம் மூலம் அறிமுகமாக ஷவுன் கீன்லி என்பவரை திருமணம் செய்த அஷ்லி, 3 வருடங்கள் கழித்து விவாகரத்துப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக