அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

செவ்வாய், 1 அக்டோபர், 2013

இலங்கையில் ஏதேனும் ஒரு சம்பவம் நடந்தால் என்மீது குற்றம் சாட்டப்படுகிறது

இப்­ப­டித்தான் நடக்­கின்­றது. எது நடந்­தாலும் இப்­ப­டித்தான் வெள்ளை வான் என்று சொல்­வார்கள். தேனி­ல­வுக்கு அல்­லது வேறு ஏதேனும் தேவைக்­காக யாரும் சென்­றி­ருந்­தா­லும்­கூட, அத­னையும் வெள்­ளை­வா­னுடன் சம்­பந்­தப்­ப­டுத்­தித்தான் கூறு­வார்கள். இவை­யெல்லாம் வெறும் யூகக்­க­தைகள். ஏன் நாங்கள் வெள்ளை வானைப் பயன்­ப­டுத்த வேண்டும்? வெள்­ளைவான் இருந்­தி­ருந்தால், அவர்கள், ஒரு நீல வானை அல்­லது ஒரு கறுப்பு வானை ஏன் பயன்­ப­டுத்­தி­யி­ருக்கக் கூடாது? இதெல்­லாமே வெறும் பிர­சார வேலை­க­ளே­யல்­லாமல் வேறு ஒன்­று­மில்லை.

அல் -- ஜசீரா தொலைக்காட்சிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ வழங்கிய செவ்வி...

அரசாங்கத்தின் மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை. வெறும் பிரசாரத்திற்காகவே அவைகள் முன்வைக்கப்படுகின்றன என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ கூறியுள்ளார். ஐ.நா.வின் மனித உரிமைகள் பேரவையினால் தெரிவிக்கப்பட்டுள்ள பல்வேறு குற்றச்சாட்டுக்கள் மற்றும் வடமாகாண சபைக்கான தேர்தல் செயற்பாடுகள் குறித்து பொதுநலவாய அமைப்பைச் சேர்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் பற்றிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே அல் ஜசீரா தொலைக்காட்சி சேவையிடம் ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.

அல் ஜசீரா தொலைக்காட்சியின் செய்தியாளர் ஜேம்ஸ் பேய்ஸ் உடனான ஜனாதிபதியின் நேர்காணலின் கேள்வி பதில் வடிவத்தை இங்கு தருகிறோம்.

அல் ஜசீரா: இலங்கையின் தமிழ் விடுதலைப் புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையில் இடம்பெற்று வந்த கொடூரமான சிவில் யுத்தம் முடிவடைந்து நான்கு வருடங்களாகின்றன. ஆனாலும் சிறந்த எதிர்காலம், பரஸ்பர கௌரவம், நல்லெண்ணம் என்பவற்றின் மீதான நம்பிக்கைகள் நாளுக்கு நாள் அழிந்து செல்வதையே காண முடிகின்றது சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டுள்ள ஐ.நா. அறிக்கையொன்றும் இதையே சுட்டிக்காட்டுகின்றது. இலங்கையைப் பற்றிய தெளிவற்ற நம்பிக்கையற்ற ஓவியத்தையே அந்த அறிக்கை சித்திரமாகக் காட்டுகின்றது.

இராணுவம் பல இடங்களை ஆக்கிரமித்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகின்றது. அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் மௌனமாக்கப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது. அல்லது கொல்லப்பட்டிருக்கின்றார்கள் என்று அது சுட்டிக்காட்டியிருக்கின்றது. இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் போன்ற சிறுபான்மையினர் தாக்கப்படுகின்றார்கள். இவையெல்லாமே கடந்த 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டு, மீண்டும் மூன்று வருடங்களுக்கு முன்னர் மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷவின் தலைமையிலான ஆட்சியின் கீழ் நடைபெற்று வருகின்றன. ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ நாட்டை ஏதேச்சதிகாரப் பாதையில் நடத்திச் செல்பவராக ஐ.நா. கூறுகின்றது.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் முழுமையாக நிராகரித்துள்ள அரசாங்கமும், அரச ஆதரவாளர்களும் சொற்போர் ஒன்றில் ஈடுபட்டுள்ளார்கள். தமிழர் பரம்பரையில் வந்துதித்ததாகத் தெரிவிக்கப்படுகின்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவிப்பிள்ளையை, அவர்கள் ஐ.நா.வில் உள்ள பெண்புலி என்றும் வர்ணித்துப் பெயர் சூட்டியுள்ளார்கள். இதனைத் தனக்கிழைக்கப்பட்ட அவமான குற்றமாகக் குறிப்பிட்டு, நவிப்பிள்ளை கருத்து வெளியிட்டிருக்கின்றார்.

முதற் தடவையாக இவைகள் எல்லாவற்றையும் பற்றி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுடன், அல் ஜசீராவினுடனான நேர்காணல் சந்திப்பில் நாங்கள் கலந்துரையாடினோம்.

ஜேம்ஸ் பேய்ஸ்: ஜனாதிபதி மகிந்த ராஜபக் ஷ அவர்களே அல் ஜசிராவுடன் பேசுவதற்கு முன்வந்துள்ளமைக்கு நன்றி. சிவில் யுத்தம் முடிந்து நான்கு வருடங்களாகின்றன. இந்த நிலையில் உங்களுடைய நாட்டின் தற்போதைய நிலை என்ன?

ஜனாதிபதி: கடந்த நான்கு வருடங்களில் எங்களால் எங்கள் நாட்டை அபிவிருத்தி செய்ய முடிந்திருக்கின்றது. வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. அங்கு நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. யுத்தம் நடைபெற்ற வடபகுதியை எடுத்துக் கொண்டால், அங்குள்ள எல்லா உட்கட்டமைப்புக்களையும் நாங்கள் நிர்மாணித்திருக்கின்றோம். இதற்காக நாங்கள் 3 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவு செய்திருக்கின்றோம். அந்த நேரத்தில் யுத்த கைதிகளாக இருந்தவர்கள் - எங்களிடம் வந்து சரணடைந்தவர்களில் ஒரு சிலரைத் தவிர, அநேகமாக எல்லோரையுமே விடுதலை செய்திருக்கின்றோம். குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்த அந்த ஒரு சிலருக்கு எதிராக வழக்குகள் இருக்கின்றன. அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டியது நீதித்துறையின் கடமையாகும். இவர்களைத் தவிர மற்ற எல்லோரும் விடுதலை செய்யப்பட்டுவிட்டார்கள். சமூகத்தின் ஊடாக மறுவாழ்வளிக்கப்பட வேண்டும் என்பதை நான் நம்புகின்றேன். சமூகம் அவர்களுக்கு மறுவாழ்வளிக்க வேண்டும். இதில் நல்ல விளைவுகள் ஏற்பட்டிருப்பதைக் காண முடிகின்றது. ஏனென்றால் கடந்த தேர்தலில் - மாகாண சபைத் தேர்தலில் 80 வீதமான மக்கள் வாக்களித்திருக்கின்றார்கள். அவர்களுடைய அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதையே இது காட்டுகின்றது.

ஜேம்ஸ் பேய்ஸ்: நீங்கள் ஒரு சாதகமான நிலைமையைக் காட்டுகின்றீர்கள். ஆனால், உங்களுக்கு எதிராக சர்வதேசத்தினால் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. ஐ.நா. செயலமர்வில் உரையாற்றுகையில் சில நாடுகளைத் திருப்தி செய்வதற்காகவே உலகம் செயற்படுகின்றது என்று நீங்கள் கூறியிருந்தீர்கள். இதன் மூலம் நீங்கள் என்ன தெரிவிக்க விரும்புகின்றீர்கள்?

ஜனாதிபதி: சில நாடுகள் தங்களைப் பொலிஸ்காரர்களாக கருதுகின்றார்கள். அவர்கள் மற்ற நாடுகளைச் விரல் சுட்டி அதிகாரத்தைப் பாவிக்க முயல்கின்றார்கள். அந்த நாடுகளை கஸ்டத்தில் தள்ளப்பார்க்கின்றார்கள்.

ஜேம்ஸ் பேய்ஸ்: எந்த நாடுகள் மேற்கத்தைய நாடுகளா?

ஜனாதிபதி: சில நாடுகள்

ஜேம்ஸ் பேய்ஸ்: ஐ.நா. பேரவை தீர்மானங்களின்போது வாக்களித்த நாடுகளில் உங்கள் அயலவரான, பெரிய நாடாகிய இந்தியாவே, இலங்கைக்கு எதிராக பல தடவைகள் வாக்களித்திருக்கின்றதே....?

ஜனாதிபதி: நாங்கள் இந்தியாவுடன் நெருங்கிய உறவைப் பேணி வருகின்றோம். ஏனென்றால் அது எங்களுடைய அயல்நாடு. ஆனால், அவர்களுக்குப் பல அரசியல் பிரச்சினைகள் இருக்கின்றன. அதனை நாங்கள் நன்கறிவோம். அவற்றை நாங்கள் உணர்ந்திருக்கின்றோம்.

ஜேம்ஸ் பேய்ஸ்: உங்களுக்குத் தெரியும், இலங்கைக்கு எதிராகக் கடைசியாக முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனம் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நவிப்பிள்ளையிடம் இருந்து வந்துள்ளது. அவர் அண்மையில் உங்கள் நாட்டுக்கு விஜயம் செய்திருந்தார். உங்களையும் சந்தித்துப் பேசியிருந்தார். திரும்பிச் சென்றதன் பின்னர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நீங்கள் ஓர் ஏதேச்சதிகாரப் போக்கில் சென்று கொண்டிருப்பதாக அவர் கூறியிருக்கின்றார். அதைப்பற்றி என்ன சொல்கின்றீர்கள்?

ஜனாதிபதி: இது ஏன் என்று எனக்கு விளங்கவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் 19 தேர்தல்களை நாங்கள் நடத்தியிருக்கின்றோம். மாகாண சபைத் தேர்தல், பொதுத்தேர்தல் என்று பல தேர்தல்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. எனது பதவிக்காலம் 6 வருடங்கள். ஆனால் நான் அந்தக் காலம் முடிவடைவதற்கு முன்பே ஜனாதிபதி தேர்தலை நடத்தியிருந்தேன். எனவே, பொதுமக்களே அரசாங்கத்தைத் தீர்மானிக்கின்றார்கள். யார் அரசாங்கத்தை அமைப்பதென்பது அவர்களுடைய கைகளிலேயே இருக்கின்றது.

ஜேம்ஸ் பேய்ஸ்: நவிப்பிள்ளை தனது அறிக்கையில் தெரிவித்திருப்பதில் இருந்து ஒரு விடயத்தை உங்களுக்காக வாசிக்கின்றேன்....கண்காணிப்பும், துன்புறுத்தலும் இலங்கையில் மோசமாகிக் கொண்டிருப்பதாகத் தெரிகின்றது. இங்கு அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் அடிக்கடி தாக்கப்படுகின்றார்கள். நிரந்தரமாகவும் அவர்கள் அமைதிப்படுத்தப்படுகின்றார்கள்..... இதைப்பற்றி என்ன சொல்கின்றீர்கள்?

ஜனாதிபதி: இதைப்பற்றி என்ன நினைப்பது? உண்மையிலேயே இது எனக்கு விளங்கவில்லை. நாட்டுக்கு வருகி;ன்ற ஒருவர் என்ன சொல்கின்றார் என்பது விளங்கவில்லை. இது ஒரு ஜனநாயக நாடு என்பதை முதலில் நீங்கள் நினைவிலிருத்திக் கொள்ள வேண்டும். இது ஒரு சர்வாதிகார நாடல்ல. சர்வாதிகார நாடாக இருந்தால் அங்கு ஒரு சர்வாதிகாரி இருப்பார். ஆனால் இங்கு எதிர்க்கட்சிகள் இருக்கின்றன. ஜனநாயக நாடென்பதால் பல விதமான கருத்துக்கள் இங்கு இருக்கின்றன. எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை எப்போதும் தோற்கடிப்பதற்கே முயன்று கொண்டிருக்கின்றன. உள்ளூர் மட்டத்திலும்சரி, சர்வதேச மட்டத்திலும்சரி அரசாங்கத்தைத் தோற்கடிக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருக்கின்றது.

ஜேம்ஸ் பேய்ஸ்: அப்படியென்றால் நவிப்பிள்ளையைப் பற்றி என்ன கருதுகின்றீர்கள், அவரை எப்படிப் பார்க்கின்றீர்கள்?

ஜனாதிபதி: இலங்கைக்கு வருவதற்கு முன்பே அவர் தனது அறிக்கையை எழுதிவிட்டார் என்றே மக்கள் கருதுகின்றார்கள். இதனை நான் அவருக்குக் கூறினேன். அவர் என்னைச் சந்தித்தபோது எதுபற்றியும் அவர் என்னிடம் முறையிடவில்லை.

ஜேம்ஸ் பேய்ஸ்: ஆனால் அவர் இப்போது முறையிட்டிருக்கின்றாரே.... அவர் இலங்கைக்கு வந்திருந்தபோது அவர் நடத்தப்பட்ட விதம் பற்றியும் அவர் கூறியிருக்கின்றார். அரசாங்கத்தைச் சேர்ந்த சிலர், அவரை ஐ.நா.வில் உள்ள தமிழ்ப் புலிகளின் பெண்புலி என்று வர்ணித்திருந்தாக அவர் கூறியிருக்கின்றார். உங்களுடைய சகோதரர் உட்பட சில அமைச்சர்களும் அவரைப்பற்றி தனிப்பட்ட ரீதியில் கருத்து வெளியிட்டிருந்ததாக அவர் சொல்லியிருக்கின்றாரே.....?

ஜனாதிபதி: இது ஒரு ஜனநாயக நாடு என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. இங்கு ஜனநாயகம் இருக்கின்றது. அதனால் அவர்கள் எதையும் கூறலாம். என்னிடம் 58 அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவை இருக்கின்றது. உலகத்திலேயே ஒரேயொரு ட்ரொட்ஸ்க்கி கொள்கையுடைய பாராளுமன்ற உறுப்பினரும் எங்களோடு இருக்கின்றார். அவர் எனது அமைச்சரவையில் அமைச்சராக இருக்கி;ன்றார். மாஸ்கோ சார் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் இருக்கின்றார்கள். வலதுசாரி தீவிர கொள்கையுடையவர்களும் இருக்கின்றார்கள். மத தீவிர கொள்கையுடையவர்களும் இருக்கின்றார்கள். தமிழர்கள் இருக்கின்றார்கள். சிங்களவர்கள் இருக்கின்றார்கள். முஸ்லிம்கள் இருக்கின்றார்கள். இப்படி எல்லாவிதமானவர்களும் எனது அமைச்சரவையில் இருக்கின்றார்கள். எல்லாரும் ஒன்றிணைந்து செயற்படுகின்றார்கள். அவர்கள் எல்லோரையும் நான் சமாளிக்க வேண்டியிருக்கின்றது. தனிப்பட்ட முறையில் ஒரு பாராளுமன்ற உறுப்பினர், ஒரு அமைச்சர் அல்லது ஒரு அதிகாரி தனக்கு வேண்டிய எதனையும் கூறலாம்.

ஜேம்ஸ் பேய்ஸ்: நவிப்பிள்ளையைச் சந்தித்தவர்கள் அரசாங்கத்தினாலும், அரச படைகளினாலும் துன்புறுத்தப்பட்டதாகச் சொல்லப்படுகின்றதே?

ஜனாதிபதி: இல்லை. இதுபற்றி அவர் எங்களிடம் எதுவும் சொல்லவே இல்லை. அப்படி சொல்லியிருந்தால் அதுபற்றி நான் விசாரணை செய்திருப்பேன். இதுபற்றி பகிரங்கமாகக் கருத்து வெளியிடும் வரையில், அவர் எதையும் எங்களிடம் குறிப்பிடவில்லை. அவர் என்னைச் சந்தித்தபோது, இப்படி நடந்தது என்று அவர் என்னிடம் கூறியிருக்க வேண்டும். அவ்வாறு எதையும் அவர் கூறவில்லை. ஆனால் இங்கிருந்து சென்றதன் பின்னர் இதை அவர் ஏன் கூறினார் என்று எனக்குத் தெரியவில்லை. நாங்கள் அவ்வாறு எதையும் செய்வில்லை. அவ்வாறு எங்களில் எவரும் நடந்து கொள்ளவில்லை. அவ்வாறு நடந்து கொள்வதற்கான தேவையும் எங்களுக்கு இல்லை. நாங்கள் அவரை வரவிடாமல் செய்திருக்கலாமே, அதை நாங்கள் செய்யவில்லை. அவர் விரும்பியவாறு எல்லா இடங்களுக்கும் செல்வதற்கான அனுமதியை வழங்கியிருந்தோம். அவர் தனக்குத் தேவையான யாரையும் சந்திக்கலாம் என்று அனுமதித்திருந்தோமே... (நவிப்பிள்ளைக்கு) இவர்கள் இவ்வாறான விடயங்களைச் சொல்வார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அவர்களில் அனேகமானவர்கள் அரசாங்கத்திற்கு எதிரானவர்கள். ஆகவே அவர்கள் தாங்கள் விரும்பிய எதையும் அவருக்குக் கூறியிருக்கலாம். நாங்கள் அவ்வாறு அவர்கள் விரும்பியவற்றைச் சொல்வதற்குக் கூட அனுமதித்திருந்தோம். நாங்கள் நினைத்திருந்தால், அவர்கள் அவ்வாறு செய்யாமல் தடுத்திருக்கலாம். தடுத்திருக்க முடியும் இல்லையா.....?

ஜேம்ஸ் பேய்ஸ்: வடக்கில் உள்ள நிலைமைகள் பற்றி குறிப்பாக நாங்கள் இப்போது கவனிக்கலாம். வடபகுதி உட்பட சில இடங்களில் தேர்தல்கள் நடைபெற்றிருக்கின்றன. இது எதனைக் காட்டுகின்றது?

ஜனாதிபதி: நீதியும் நேர்மையுமான தேர்தல்கள் நடைபெற்றிருக்கின்றன என்பதை அது காட்டுகின்றது. வடக்கில் நாங்கள் தேர்தலில் தோற்றிருக்கின்றோம். தேர்தலுக்கு முன்பே இது எங்களுக்குத் தெரியும். முன்னர் அங்கு தேர்தல்கள் நடைபெற்றபோது அதனை பகிஸ்கரித்த சம்பவங்கள் இடம்பெற்றிருகின்றன. ஆனால் நாங்கள் நீதியும் நேர்மையுமான ஒரு தேர்தலை அங்கு நடத்தியிருக்கின்றோம்.

ஜேம்ஸ் பேய்ஸ்: நேர்மையான தேர்தல் என்று நீங்கள் சொல்கின்றீர்கள். ஆனால் அந்தத் தேர்தலைப் பற்றிய விமர்சனங்கள் இருக்கின்றனவே...?

ஜனாதிபதி: நான் மட்டுமல்ல. அங்கு சென்றிருந்த ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்த தேர்தல் கண்காணிப்பாளர்களும் அங்கு நியாயமான ஒரு தேர்தல் நடைபெற்றிருப்பதாகத் தெரிவித்துள்ளார்கள்.

ஜேம்ஸ் பேய்ஸ்: நல்லது. அங்கு சார்க் நாடுகளைச் சேர்ந்த கண்காணிப்பாளர்கள் பொதுநலவாய நாடுகளின் கண்காணிப்பாளர்களும் அங்கிருந்தார்கள். அதிகளவான இராணுவ பிரசன்னம் இருந்தது. குறிப்பிட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாக இராணுவத்தினர் செயற்பட்டார்கள். வேட்பாளர்களும், அரசியல் கட்சி ஆதரவாளர்களும் அச்சுறுத்தப்பட்டார்கள். தேவையற்ற வகையில் இராணுவத்தினர் கூடியிருந்தார்கள். ஒரு பெண் வேட்பாளர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது என்றெல்லாம் அவர்கள் சொல்லியிருக்கின்றார்கள். 'நியாயமான ஒரு தேர்தல் நடைமுறைக்குத் தடையாக இராணுவத்தின் செயற்பாடு விசேட அம்சமாக அமைந்திருந்தது' என்று குறிப்பாக அவர்கள் கூறியிருக்கின்றார்கள். இதைப்பற்றி என்ன சொல்லப் போகின்றீர்கள்?

ஜனாதிபதி: தேர்தல் முடிவுகளே இதற்குப் பதில் கூறியிருக்கின்றன. தேர்தல் முடிவுகள் என்ன? 36 ஆசனங்களில் 30 ஆசனங்களை அவர்கள் கைப்பற்றியிருக்கின்றார்கள். இத்தகைய ஒரு தேர்தல் முடிவு வரும் என்பதை நாங்கள் ஏற்கனவே அறிந்திருந்தோம். இதைப்பற்றி நான் முன்பே சொல்லியிருக்கின்றேன். சில வெளிநாட்டு செய்தியாளர்களோ அல்லது வெளிநாட்டுத் தூதுவர்களோ என்னிடம் இந்தத் தேர்தல் பற்றி என்ன நினைக்கின்றீர்கள் என கேட்டிருந்தார்கள். எனக்கு நன்றாக நினைவிருக்கின்றது. தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே நான் கூறியிருந்தேன், எங்களுக்கு ஏழுக்கும் பத்துக்கும் இடையிலான ஆசனங்கள் கிடைக்கும் என்று. ஆனால் என்னுடைய கணிப்பு பிழையாகிவிட்டது. நாங்கள் ஏழு இடங்களை மட்டும்தான் பெற்றிருக்கின்றோம்.

ஜேம்ஸ் பேய்ஸ்: பொதுமக்கள் இப்போது பேசியிருக்கின்றார்கள். (தேர்தல் மூலம் தங்களுடைய கருத்தை வெளியிட்டிருக்கின்றார்கள்.) அவர்களுடைய கருத்துக்கு நீங்கள் செவிசாய்ப்பீர்களா?

ஜனாதிபதி: அங்கு என்ன நடந்து கொண்டிருந்தது என்பதை நான் நன்கு அறிந்திருந்தேன். நாங்கள் அங்கு தேர்தலில் தோல்வியடைவோம் என்பது எங்களுக்குத் தெரியும். வடக்கை நாங்கள் உங்களுக்கே தரப்போகின்றோம் என்று ரீ.என்.ஏ. தலைவரிடமும் நான் சொல்லியிருந்தேன். யார் வெல்லப் போகின்றார்கள், தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்திருந்தும் நாங்கள் அங்கு தேர்தலை நடத்தினோம். ஏனென்றால் அங்கு நாங்கள் தேர்தலை நடத்த வேண்டும் என்பதற்காக நடத்தினோம். அவர்களும் பொறுப்புக்களை ஏற்க வேண்டும். யாரும் எதனைப்பற்றியும் விமர்சனம் செய்யலாம். இப்போது அவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கின்றார்கள். அவர்கள் செயற்படட்டும். விளைவுகளைத் தரட்டும்.

ஜேம்ஸ் பேய்ஸ்: நல்லது. அவர்கள் தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றை வெளியிட்டிருந்தார்கள். மக்கள் எதற்காக வாக்களித்துள்ளார்கள் என்பதை அவர்கள் தெளிவாகக் கூறியிருக்கின்றார்கள். வடக்கில் இருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் என்று அவர்கள் கேட்டுள்ளார்கள். அத்துடன் குறிப்பிட்ட அளவு சுய ஆட்சியையும் கேட்டிருக்கின்றார்கள். இதனை வழங்குவீர்களா?

ஜனாதிபதி: இல்லை. உங்களுக்குத் தெரியுமா, அவர்கள் முதலில் அந்த மாதிரி ஒன்றைக் கூறினார்கள். பிறகு அதனை மாற்றிக்கொண்டார்கள். இராணுவம் அவர்கள் கூறும் அளவில் அங்கு இல்லை. இராணுவத்தை வெளியேற்றுமாறு அவர்கள் கேட்க முடியாது. ஏனென்றால் ஏனைய மாகாணசபைகளும் நாடெங்கிலும் உள்ள இராணுவ முகாம்களை அகற்றுமாறு கேட்டால், நான் இராணுவத்தை எங்கே வைத்திருப்பது? யாராவது இராணுவத்தை வைத்திருப்பதற்கு வேறு எங்காவது எனக்கு இடம் கொடுப்பார்களா..?

ஜேம்ஸ் பேய்ஸ்: இப்பொழுது யுத்தமில்லை. அப்படி இருக்கும்போது பெரிய அளவில் இராணுவம் எதற்குத் தேவைப்படப் போகின்றார்கள்?

ஜனாதிபதி: நீங்கள் அப்படி நினைக்கின்றீர்கள். ஆனால் பாதுகாப்பிற்கு எங்களுக்கு இராணுவம் தேவைப்படுகின்றது. எமது பாதுகாப்புப் பற்றியும் இராணுவ பலம் எவ்வளவு இருக்க வேண்டும், எத்தனை இராணுவத்தினர் இருக்க வேண்டும் என்பதை நாங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். நாங்கள்தான் தீர்மானிக்க முடியும். இராணுவத்தை வெளியேற்றினால் என்ன நடக்குமென்று உங்களுக்குத் தெரியுமா? வியட்நாமில் யுத்தம் முடிந்தபின்னர் என்ன நடந்தது? அவர்களுடைய அணுகுமுறைகளை நாங்கள் மாற்ற வேண்டும். அவர்களுக்கும் நாங்கள் புனர்வாழ்வளிக்க வேண்டும்.

ஜேம்ஸ் பேய்ஸ்: தேவைக்கதிகமாக இராணுவத்தை வைத்திருப்பதாக நீங்கள் நினைக்கின்றீர்களா? மூன்று சிவிலியன்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்ற வகையில் இராணுவம் இருப்பதாக நம்பகமான தகவல்கள் தெரிவித்திருக்கின்றனவே.......?

ஜனாதிபதி: இல்லை. அது தவறு. அது தவறான புள்ளிவிபரம். அந்தப் பகுதியில் 8 ஆயிரம் தொடக்கம் 12 ஆயிரம் இராணுவத்தினர் மட்டுமே அங்கு இருக்கின்றார்கள்.

ஜேம்ஸ் பேய்ஸ்: நல்லது. நவிப்பிள்ளையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதை மேற்கோள் காட்டி குறிப்பிட விரும்புகிறேன். பொதுமக்களுடைய இடங்களில் இராணுவம் முகாம் அமைக்கின்றது. தனியார் காணிகள் இராணுவ முகாம்களை அமைப்பதற்காக இராணுவத்தினரால் அபகரிக்கப்படுகின்றன................

ஜனாதிபதி: (இடைமறித்து...) தனியார் காணிகள் எல்லாவற்றையும் நாங்கள் கையளித்துவிட்டோம். விமானத்தளம், துறைமுகம் இருக்கின்ற இடத்தில் மாத்திரம் நாங்கள் சில இடங்களை எடுத்திருக்கின்றோம். அதைத் தவிர ஏனைய காணிகள் எல்லாவற்றையும் கையளித்துவிட்டோம்.

ஜேம்ஸ் பேய்ஸ்: கல்வி, விவ­சா­யத்­து­றை­க­ளிலும் கூட இரா­ணுவம் ஈடு­பட்­டி­ருப்­ப­தாக (நவிப்­பிள்ளை) அவர் கூறு­கின்­றாரே....?

ஜனா­தி­பதி: என்னால் விளங்­கிக்­கொள்ள முடி­ய­வில்லை. இந்த விட­யங்கள் பற்றி அவர் எப்­படி கூற முடியும்....விவ­சாயம்.....? சரி.... அவர்கள் சாப்­பிட வேண்­டு­மல்­லவா.... அவர்­க­ளுக்கு வேறு வேலை இல்­லா­ததால் விவ­சாயம் செய்­கின்­றார்கள். அவர்கள் பாட­சா­லை­களில் சென்று கல்வி போதிப்­ப­தில்­லையே...பாட­சா­லை­களில் கடெட் பயிற்சி என்று ஒன்­றி­ருக்­கின்­றது. அவர் அதைத்தான் குறிப்­பிட்­டி­ருக்க வேண்டும்.

ஜேம்ஸ் பேய்ஸ்: நம்­ப­க­மான விசா­ர­ணைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை என்று அவர் அதி­ருப்தி தெரி­வித்­தி­ருக்­கின்றார். இறுதிப் போரின் போது இடம்­பெற்ற சம்­ப­வங்கள் பற்றி நம்­பிக்கை தரத்­தக்க வகையில் இன்­னுமே நீங்கள் விசா­ரணை நடத்­த­வில்லை என்று அவர் தனது அறிக்­கையில் முக்­கி­ய­மாகக் குறிப்­பிட்­டுள்ளார். அந்த அறிக்­கையின் அதி முக்­கிய விட­ய­மாக இது குறி­ப­பி­டப்­பட்­டி­ருக்­கின்­றது. அத்­த­கை­ய­தொரு விசா­ர­ணையை நீங்கள் நடத்த வேண்டும் என்று அடுத்த மார்ச் மாதம் வரையில் அவர் உங்­க­ளுக்கு அவ­காசம் வழங்­கி­யி­ருக்­கின்றார். இதற்கு உங்­களின் பதில் என்ன?

ஜனா­தி­பதி: முப்­பது வரு­டங்­க­ளாக யுத்தம் நடந்­தி­ருக்­கின்­றது....முப்­பது வருட யுத்தம். இறுதி யுத்­தத்தின் இறுதி நாட்­களில் நடந்­த­வைகள் பற்றி மட்­டும்தான் அவ­ருக்குத் தேவை­யாக இருக்­கின்­றது. அது ஏன்......ஏன்? அதனை என்னால் விளங்­கிக்­கொள்ள முடி­ய­வில்லை. நாங்கள் யுத்தம் நடை­பெற்ற முப்­பது வரு­டங்­க­ளையும் பார்க்க வேண்டும். அப்­போது என்ன நடந்­தது? ஹிரோ­ஸி­மாவில் என்ன நடந்­தது என்று யாரும் கேட்டால்....ஜப்­பானில் யுத்தம் நடை­பெற்­றதன் பின்னர் ஹிரோ­ஸி­மாவில் என்ன நடந்­தது என கேட்டால், அது­பற்றி யாரும் விசா­ரணை செய்யப் போகின்­றார்­களா? இந்த விட­யத்தில் நீங்கள் நியா­ய­மாக நடந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் எல்லா நாடு­களும் சம­மாக நடத்­தப்­பட வேண்டும். அந்தக் கடைசி இரண்டு தினங்­களில் என்ன நடந்­தது என்­பதை எங்­களால் சொல்ல முடியும். எங்­க­ளிடம் ஒளிவு மறை­வில்லை. மறைப்­ப­தற்கு எங்­க­ளிடம் எது­வு­மில்லை. அல் ஜசீரா அங்கு சென்­றி­ருந்­தது. அவர்கள் யுத்த முனையின் முன்னால் இருந்­தார்கள். நாங்கள் அவர்கள் அங்கு செல்­வ­தற்கு அனு­ம­தித்­தி­ருந்தோம்.

ஜேம்ஸ் பேய்ஸ்: அந்த நேரத்தில் அல் ஜசீரா வடக்கின் எல்லா இடங்­க­ளுக்கும் செல்­லக்­கூ­டி­ய­தாக இருக்­க­வில்லை.

ஜனா­தி­பதி: நாங்கள் அவர்­களை அனு­ம­தித்­தி­ருந்தோம்.

ஜேம்ஸ் பேய்ஸ்: அந்த நேரத்தில் இரா­ணுவம் பிழைகள் ஏதும் செய்­த­தாக நீங்கள் நம்­பு­கின்­றீர்­களா?

ஜனா­தி­பதி: நான் அப்­படி நினைக்­க­வில்லை. ஏனென்றால் அவர்கள் நன்கு பயிற்­றப்­பட்­டி­ருந்­தார்கள். எல்­ரீ­ரீ­யி­னரால் பணயக் கைதி­க­ளாக வைக்­கப்­பட்­டி­ருந்த மக்கள் அந்தக் கடைசி சில தினங்­க­ளாக அங்­கி­ருந்து அர­சாங்கப் பகு­திக்குள் வந்து கொண்­டி­ருந்­தார்கள். இரா­ணு­வத்­தினர் அவர்­க­ளுக்கு உதவி செய்­தார்கள். தங்­க­ளுக்­கென்று வைத­்தி­ருந்த தண்­ணீரைக் கொடுத்­தார்கள். அந்த மக்­க­ளுக்கு அவர்கள் தங்­க­ளு­டைய உணவைக் கொடுத்­தார்கள்.

ஜேம்ஸ் பேய்ஸ்: இரா­ணு­வத்­தினர் இந்த மக்கள் மீது எறி­கணை தாக்­கு­தலை நடத்­தி­னார்கள்;. வைத்­தி­ய­சா­லைகள் மீது­கூட தாக்­குதல் நடத்­தி­னார்கள் என்­றெல்லாம் சொல்­லப்­ப­டு­கின்­றதே......

ஜனா­தி­பதி: இல்லை. அவர்கள் அப்­படி செய்­ய­வில்லை. நான் அது­பற்றி விசா­ரித்தேன். அவர்கள் அவ்­வாறு செய்­ய­வில்லை.

ஜேம்ஸ் பேய்ஸ்: நீ;ங்கள்தான் ஜனா­தி­பதி, நீங்­கள்தான் பாது­காப்பு அமைச்சர் என்ற வகையில் ஒட்­டு­மொத்­த­மாக அந்தச் சம்­ப­வங்­க­ளுக்கு நீங்­களே பொறுப்பு அல்­லவா?

ஜனா­தி­பதி: ஆம். அத­னால்தான் சொல்­கிறேன். யாரும் ஏதேனும் பிழைகள் செய்­தி­ருந்தால், அவர்­க­ளுக்கு எதி­ராக நான் நட­வ­டிக்கை எடுக்­கப்­போ­கிறேன். அதற்கு ஆதா­ரங்கள் இருக்க வேண்டும். சும்மா எத­னையும் பொது­வாகச் சொல்­வதில் அர்த்­த­மில்லை. என்ன நடந்­தது. இவர் இதனைச் செய்தார், இரா­ணுவம் முழுதும் இதiனைச் செய்­தது என்று சுட்­டிக்­காட்டி கூற வேண்டும். அவ்­வாறு கூறினால், நாங்கள் அது­பற்றி விசா­ரணை செய்ய முடியும். அவ்­வாறு எந்­த­வி­த­மான முறைப்­பா­டு­களும் செய்­யப்­ப­ட­வில்லை. இவை­யெல்லாம் வெறும் பிர­சார வேலைகள். இது இலங்­கைக்கு எதி­ரான பிர­சாரம். ஏனைய நாடு­க­ளுடன் தயவு செய்து ஒப்­பிட்டுப் பாருங்கள். இலங்கை போன்ற சிறிய நாட்டைத் தனி­மைப்­ப­டுத்­தா­தீர்கள். இலங்­கையைத் துன்­பு­றுத்த முயற்­சிக்­கா­தீர்கள். அச்­சு­றுத்த முற்­ப­டா­தீர்கள். அவர்­களில் சிலர் சிறிய நாடு­தானே என்று அச்­சு­றுத்த முயற்­சிக்­கின்­றார்கள்.

ஜேம்ஸ் பேய்ஸ்: வடக்­கி­லி­ருந்து வேறு விட­யங்­க­ளுக்கு வருவோம். கடந்த பல வரு­டங்­க­ளாக பலர் காணாமல் போயி­ருக்­கின்­றார்கள். இது தொடர்பில் ஒரு விசா­ர­ணைக்­கு­ழுவை நீங்கள் நிய­மித்­தி­ருக்­கின்­றீர்கள்......

ஜனா­தி­பதி: ஆம். ஏனென்றால், கடந்த 1989 ஆம் ஆண்டு, தெற்கில் ஒரு கிளர்ச்சி ஏற்­பட்­டி­ருந்­த­போது, காணாமல் போன­வர்கள் தொடர்பில் பலதும் சொல்­லப்­பட்­டி­ருந்­தது. அறு­ப­தா­யிரம் அல்­லது நாற்­ப­தா­யிரம் பேர் வரையில் காணாமல் போயி­ருந்­த­தாக அப்­போது கூறப்­பட்­டி­ருந்­தது. காணாமல் போன­வர்கள் தொடர்பில் ஒரு விசா­ரணைக் கமிஸன் நிய­மிக்­கப்­பட வேண்டும் என்று அப்­போது நான்தான் போராட்டம் நடத்­தி­யி­ருந்தேன்.

ஜேம்ஸ் பேய்ஸ்: மீண்டும் நவிப்­பிள்ளை கூறிய விட­யத்தைக் குறிப்­பிட விரும்­பு­கிறேன். வெள்ளை வான்­களில் காணாமல் போயி­ருப்­ப­வர்கள் பற்றி நீங்கள் விசா­ர­ணைகள் நடத்­த­வில்லை என்று அவர் சொல்­லி­யி­ருக்­கின்றார். வெள்ளை வான்­களில் கடத்­தல்கள் நடை­பெற்­ற­தா­கவும், வீதி­களில் சென்­ற­வர்­கள்­கூட இந்த வெள்ளை வான்­களில் இழுத்துப் போட்டு கடத்திச் செல்­லப்­பட்­ட­தாக அவர் கூறி­யுள்­ளாரே........

ஜனா­தி­பதி: உங்­க­ளுக்கு ஒரு விடயம் சொல்ல வேண்டும். அந்த நேரத்தில் கடத்தல் தொடர்­பாக ஒரு முறைப்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது. அதில் வெள்ளை வான் வந்து 23 வய­து­டைய இளம் பெண் ஒரு­வரைக் கடத்திச் சென்­ற­தாகத் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால் கடை­சி­யாக அவரை நாங்கள் ஒரு விருந்­த­கத்தில் அவ­ரு­டைய ஆண் நண்பர் ஒரு­வ­ருடன் இருந்­ததை நாங்கள் கண்­டு­பி­டித்­தி­ருந்தோம். இப்­ப­டித்தான் நடக்­கின்­றது. எது நடந்­தாலும் இப்­ப­டித்தான் வெள்ளை வான் என்று சொல்­வார்கள். தேனி­ல­வுக்கு அல்­லது வேறு ஏதேனும் தேவைக்­காக யாரும் சென்­றி­ருந்­தா­லும்­கூட, அத­னையும் வெள்­ளை­வா­னுடன் சம்­பந்­தப்­ப­டுத்­தித்தான் கூறு­வார்கள். இவை­யெல்லாம் வெறும் யூகக்­க­தைகள். ஏன் நாங்கள் வெள்ளை வானைப் பயன்­ப­டுத்த வேண்டும்? வெள்­ளைவான் இருந்­தி­ருந்தால், அவர்கள், ஒரு நீல வானை அல்­லது ஒரு கறுப்பு வானை ஏன் பயன்­ப­டுத்­தி­யி­ருக்கக் கூடாது? இதெல்­லாமே வெறும் பிர­சார வேலை­க­ளே­யல்­லாமல் வேறு ஒன்­று­மில்லை.

ஜேம்ஸ் பேய்ஸ்: கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடை­பெற்ற ஒரு சம்­பவம், அது வடக்கில் நடை­பெ­ற­வில்லை. ஆனால் கொழும்­புக்கு அண்­மையில் நடை­பெற்­றது.... அதில் 3 பேர் கொல்­லப்­பட்­டி­ருந்­தார்கள். சுத்­த­மான குடிநீர் கேட்டு போராட்டம் நடத்­தி­ய­போது அங்கு இரா­ணு­வத்­தினர் அனுப்­பப்­பட்­ட­தை­ய­டுத்து இந்தச் சம்­பவம் நடை­பெற்­றி­ருந்­தது. அது ஒரு பிழை­யான நட­வ­டிக்­கை­யில்­லையா?

ஜனா­தி­பதி: அது­பற்றி நாங்கள் விசா­ரணை நடத்திக் கொண்­டி­ருக்­கின்றோம். நீதவான் நீதி­மன்ற விசா­ர­ணையும் நடை­பெ­றுகின்;றது. இந்த விட­யத்தில் என்ன நடந்­தது என்­பதைக் கண்­ட­றி­வ­தற்­காக விசா­ர­ணைக்­கு­ழு­வொன்றும் அமைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. அந்த விசா­ர­ணைகள் தொடர்­பான அறிக்­கைகள் இன்னும் எனக்குக் கிடைக்­க­வில்லை.

ஜேம்ஸ பேய்ஸ்: உங்­க­ளு­டைய ஆத­ர­வா­ளர்கள் கூட இது­பற்றி அக்­க­றையும் கரி­ச­னையும் வெளி­யிட்­டி­ருக்­கின்­றார்கள். வடக்கில் யுத்த காலத்தில் தமிழ் மக்கள் நடத்­தப்­பட்­ட­து­போல, மாச­டைந்த நீருக்கு எதி­ராக ஆர்ப்­பாட்டம் நடத்­திய நிரா­யு­த­பா­ணி­க­ளான சிங்­கள மக்கள்...பெரு­ம­ள­வி­லான பௌத்த மதத்தைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள், சிறு­வர்­க­ளையும் அரச அதி­கா­ரிகள் நடத்­தி­யி­ருக்­கின்­றார்கள் என்று கூற வேண்­டி­யி­ருக்­கின்­றது என்று ஜெனி­வாவில் இருந்த ஐநா­வுக்­கான உங்­க­ளு­டைய முன்னாள் தூது­வர்­கூட குறிப்­பிட்­டி­ருக்­கின்­றாரே......? அதுவும் உங்­க­ளு­டைய முன்னாள் தூதுவர் கூறி­யி­ருக்­கின்­றாரே......

ஜனா­தி­பதி: ஆம். எங்­க­ளு­டைய தூது­வர்தான். என்­னு­டைய காலத்தில் இருந்­த­வர்தான். எங்­க­ளுக்குத் தெரியும். அவர் இப்­போது அரச சார்­பற்ற நிறு­வனம் ஒன்றின் உறுப்­பினர். அதுவும் சக்தி வாய்ந்த ஓர் அரச சார்­பற்ற நிறு­வனம். எனவே, அவர்கள் தங்­க­ளுக்­கென்ற கருத்­துக்­களைக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இதைத்தான் நான் கூறினேன் இந்த நாட்டில் உள்ள ஜன­நா­யகம் என்று. அவர்கள் எதையும் சொல்­லலாம். ஏன், இந்த முழு விட­யமும், எங்­க­ளையும் குழப்­பத்தில் ஆழ்த்­தி­யி­ருந்­தது. நாங்கள் முழு ஆட்­க­ளையும் உட­ன­டி­யா­கவே இடம் மாற்றம் செய்­துள்ளோம். அது­பற்­றியும் நாங்கள் விசா­ரணை செய்து கொண்­டி­ருக்­கின்றோம். அவர்கள் குற்றம் செய்­தி­ருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்டால், நாங்கள் அவர்­க­ளுக்குத் தண்­டனை வழங்­குவோம். குற்­ற­வா­ளி­களைப் பாது­காக்கப் போவ­தில்லை.

ஜேம்ஸ் பேய்ஸ்: மற்­று­மொரு முக்­கி­ய­மான அக்­க­றைக்­கு­ரிய விடயம்.....சிறு­பான்மை மதத்­த­வர்கள் மீது நடத்­தப்­ப­டு­கின்ற தாக்­கு­தல்கள். முறை­யி­டப்­பட்­டுள்ள இந்தத் தாக்­கு­தல்­களைத் தடுத்து நிறுத்­து­வ­தற்­காக நீங்கள் என்ன நட­வ­டிக்­கை­களை எடுத்­தி­ருக்­கின்­றீர்கள்?

ஜனா­தி­பதி: சில சம்­ப­வங்கள் இடம்­பெற்­றி­ருந்­தன. தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டி­ருந்­தன. அவற்றின் பின்­ன­ணியை நீங்கள் பார்க்க வேண்டும். ஏன் அவர்கள் தாக்­கப்­பட்­டார்கள்? இப்­போது பாருங்கள் அந்தப் பெண் பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்தார். அதுவும் ஏழு வய­து­டைய சிறுமி மீது பாலியல் வல்­லு­றவு நடத்­தப்­பட்­டி­ருந்­தது. இயல்­பா­கவே எவரும், அவ­ரகள் எந்த இனத்தைச் சேர்ந்­த­வ­ராக இருந்­தா­லும்­சரி, எந்த மதத்தைச் சேர்ந்­த­வர்­க­ளாக இருந்­தாலும் சரி, அவர்­களை, அவர்கள் தாக்­கு­வார்­கள்­தானே..... அந்தச் சிறு­மியின் உற­வி­னர்கள் மற்றும் அதைப்­பற்றி கேள்­விப்­பட்­ட­வர்கள் அனை­வரும் குழம்பிப் போனார்கள். எனவே, இந்தத் தாக்­கு­தல்­க­ளுக்குப் பின்­ன­ணியில் இந்த மாதி­ரி­யான சம்­ப­வங்கள் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன. எல்லா சம்­ப­வங்­க­ளுக்கும் ஒரு பின்­னணி இருக்­கின்­றது. ஏனென்றால், இங்­குதான் முஸ்­லிம்கள், இந்­துக்கள், கத்­தோ­லிக்­கர்கள், கிறிஸ்­த­வர்கள் எல்­லோரும் தங்­க­ளு­டைய மதங்­களைப் பின்­பற்றி வசிக்­கின்­றார்கள். பல மதங்­க­ளையும் சேர்ந்­த­வர்கள் எந்­தப்­பி­ரச்­சி­னை­க­ளு­மின்றி, தங்கள் மதங்­களை ஒரே­யொரு நாடா­கிய சிறி­லங்­காவில் மட்­டும்தான், இவ்­வாறு பின்­பற்றி வாழ்­கின்­றார்கள் என்று நான் நினைக்­கிறேன்.

ஜேம்ஸ் பேய்ஸ்: முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான 227 சம்­ப­வங்கள் பற்றி நவிப்­பிள்ளை குறிப்­பிட்­டி­ருக்­கின்­றாரே....

ஜனா­தி­பதி: இவை­யெல்லாம் அர்த்­த­மில்­லாத கதைகள். அப்­படி ஏதேனும் இருந்தால் அந்தப் பட்­டி­யலை என்­னிடம் தாருங்கள். அதைப்­பற்றி நான் ஆராய்ந்து பார்க்­கின்றேன். இவை­யெல்லாம் மிகைப்­ப­டுத்­தப்­பட்­டவை. சில சம்­ப­வங்கள் நடை­பெற்­றி­ருந்­தன. அதுவும் தனிப்­பட்­ட­வர்கள் சம்­பந்­தப்­பட்ட சம்­ப­வங்கள். வேறு சில நாடு­களில் இவ்­வாறு நடை­பெற்­றி­ருந்தால், அந்த நாடு­களின் பெயர்­களை நான் குறிப்­பி­டப்­போ­வ­தில்லை. இரா­ணுவ சிப்பாய் ஒருவர் வீதியில் கொல்­லப்­பட்­டதன் பின்­ன­ணியில் 109 பள்­ளி­வா­சல்கள் அடித்து நொறுக்­கப்­பட்­டன. அவற்றில் அர­சாங்கம் சம்­பந்­தப்­பட்­டி­ருக்­க­வில்லை. ஏனென்றால் அவை­யெல்லாம் தனிப்­பட்­ட­வர்கள் சம்­பந்­தப்­பட்ட சம்ப­வங்­க­ளாகும். இலங்­கையில் ஏதேனும் ஒரு சம்­பவம் நடந்­து­விட்டால் உடனே என்­மீது குற்றம் வந்­து­விடும். வேறு நாடு­களில் நடப்­ப­வை­யெல்லாம் தனிப்­பட்ட சம்­ப­வங்கள். இங்கு நடந்தால் அர­சாங்­கத்தின் மீது குற்றம் சுமத்­தி­வி­டு­வார்கள்.

ஜேம்ஸ் பேய்ஸ்: உங்­க­ளு­டைய ஊடக சுதந்­திரம் எப்­படி இருக்­கின்­றது?

ஜனா­தி­பதி: வார இறுதி பத்­தி­ரி­கை­களைப் பார்த்­தீர்­க­ளானால் ஊட­கங்கள் எவ்­வ­ளவு சுதந்­தி­ர­மாக இருக்­கின்­றன என்­பதை அறிந்து கொள்­வீர்கள்.

ஜேம்ஸ் பேய்ஸ்: கடந்த 2005 ஆம் ஆண்­டி­லி­ருந்து 30 ஊட­க­வி­ய­லா­ளர்கள் கொல்­லப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். எவ­ரா­வது தண்­ட­னைக்­குள்­ளாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றார்­களா.........?

ஜனா­தி­பதி: அந்தப் எண்­ணிக்கை பிழை­யான எண்­ணிக்­கை­யென்று எண்­ணு­கிறேன். சம்­ப­வங்கள் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன. அவை பற்றி நாங்கள் விசா­ரணை செய்து கொண்­டி­ருக்­கின்றோம். அதில் தனிப்­பட்ட பிரச்­சி­னைகள் இருக்­கின்­றன. கொல்­லப்­ப­ட­வில்லை. சம்­ப­வங்கள் என்று குறிப்­பிட விரும்­பு­கிறேன்.

ஜேம்ஸ் பேய்ஸ்: ராஜ­பக்ச குடும்­பத்­தினர் முக்­கி­ய­மான அரச பத­வி­களில் இருக்­கின்­றார்கள். அதைப்­பற்றி நான் கேட்­க­லாமா? ஏனென்றால் உங்­க­ளு­டைய சகோ­த­ரர்கள் எல்­லோரும் முக்­கிய பத­வி­களை வகிக்­கின்­றார்கள். மற்­ற­வர்­க­ளு­டைய குடும்­பங்­களைச் சேர்ந்­த­வர்கள் அவ்­வா­றில்­லையே.....

ஜனா­தி­பதி: அவர்கள் மக்­களால் தெரிவு செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றார்கள். அது என்­னு­டைய குற்­ற­மில்­லையே.....

ஜேம்ஸ் பேய்ஸ்: நீங்கள் எவ்­வ­ளவு காலத்­திற்கு இந்தப் பத­வியில் இருக்கப் போகின்றீர்கள்?

ஜனா­தி­பதி: அது மக்­க­ளு­டைய கைகளில் தங்­கி­யி­ருக்­கின்­றது. அவர்கள் நினைத்தால் நாளையே என்னை இதி­லி­ருந்து அனுப்­பலாம். நாளை­யில்லை. அடுத்தத் தேர்­தலில் அவ்­வாறு அவர்கள் செய்­யலாம். அடுத்த தேர்தல் வரையில் அவர்­களால் எதுவும் செய்ய முடி­யாது.

ஜேம்ஸ் பேய்ஸ்: உங்­க­ளு­டைய எதிர்­காலக் கன­வென்ன?

ஜனா­தி­பதி: நாட்டை வளப்­ப­டுத்தி மக்­க­ளையும் வள­முள்­ள­வர்­க­ளாக்­கு­வது. அதனைச் செய்­யலாம் என்று நான் எண்­ணு­கிறேன். ஏனென்றால், இந்த நான்கு வரு­டங்­களில் எங்­க­ளு­டைய பொரு­ளா­தாரம் வளர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது. அது மேலும் வளர்ச்­சி­ய­டையும் என்று எதிர்பார்க்­கின்றோம். வேலை வாய்ப்­பின்மை குறைந்­தி­ருக்­கின்­றது. கல்­வியில் வளர்ச்சி ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. எழுத்­த­றிவு வீதம் 98 வீத­மா­கி­யி­ருக்­கின்­றது. நாடு வளர்ச்­சி­ய­டை­வ­தற்­காக நாங்கள் நிறைய செய்­தி­ருக்­கின்றோம்.

ஜேம்ஸ் பேய்ஸ்: இந்த சாத­னைகள் பற்­றி­யெல்லாம் நீங்கள் கூறு­கின்­றீர்கள். ஆனால் உங்கள் மீது வைக்­கப்­ப­டு­கின்ற விமர்­ச­னங்கள் பற்றி என்ன சொல்லப் போகின்­றீர்கள்........முக்­கிய பிர­மு­க­ரா­கிய இலங்­கையர் ஒரு­வரை நான் சந்­தித்தேன். உரி­மை­களைப் பாது­காக்­கத்­தக்க வகையில் நியா­ய­மான விதி­மு­றை­களைக் கொண்ட அர­சி­ய­ல­மைப்­புடன் கூடிய ஜன­நா­யக நாடாக இந்த நாடு திகழ்ந்­த­தா­கவும், இப்­போது அது ஒரு குடும்ப விவ­கா­ர­மாக மாறி­யி­ருக்­கின்­றது என்று கூறினார்.....

ஜனா­தி­பதி: அவர்்கள் தான் இந்த நாட்டை குடும்ப விவ­கா­ர­மாக்கப் பார்க்­கின்­றார்கள். அத­னால்தான் அப்­படி கூறு­கின்­றார்கள். இந்த ஒரு விமர்­ச­னத்­தைத்தான் அவர்கள் செய்ய முயற்­சிக்­கின்­றார்கள். அவர்கள் எங்கள் மீது சேறு பூச முயற்­சிக்­கின்­றார்கள். ஆனால் மக்கள் எங்­க­ளுக்கு ஆத­ர­வாக இருக்­கின்­றார்கள். நாட்டு மக்கள் எங்­க­ளுடன் இருக்­கின்­றார்கள். நாங்கள் நியாயமானவர்கள் என்று அவர்களுக்குத் தெரியும். அப்படியில்லாவிட்டால் அவர்கள் என்னை வீட்டுக்கு அனுப்பியிருப்பார்கள். கடந்த 1936 ஆம் ஆண்டிலிருந்து எங்களுடைய குடும்பம் அரசியலில் ஈடுபட்டு வந்திருக்கின்றது. நாங்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றோம். ஏனென்றால் நாங்கள் மக்களோடு இருக்கின்றோம். நாங்கள் நியாயமானவர்கள் என்று அவர்கள் நன்கறிவார்கள். நாங்கள் நேர்மையானவர்கள் என்று அவர்களுக்குத் தெரியும். சொல்வதைத்தான் நாங்கள் செய்வோம் என்பதும் அவர்களுக்கத் தெரியும்.. எங்களால் செய்ய முடியாததை செய்ய முடியாது என்று நாங்கள் கூறுவோம் என்பதும் அவர்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் எங்களுடன் இருக்கின்றார்கள். எங்களுக்கு வாக்களிக்கின்றார்கள். இல்லாவிட்டால் அவர்கள் எங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள். முதல் தடவை 2005 ஆம் ஆண்டு நான் ஒரு லட்சம் வாக்குகளுடன் வெற்றி பெற்றேன். இரண்டாம் முறை 2011 ஆம் ஆண்டு 1.8 மில்லியன் (பதினெட்டு லட்சம்) பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றிபெற்றேன். மக்கள் எவ்வாறு நடந்து கொள்கின்றார்கள் என்பதை இதிலிருந்து நீங்௦கள் அறிந்து கொள்ளலாம். நீங்கள் எப்போதும் மக்களுடன், இருந்தால், மக்களுக்கு நேர்மையாக இருந்தால் அவர்கள் எப்போதும் உங்களை நம்புவார்கள். இதனை மாகாண சபைத் தேர்தல் முடிவுகளிலிருந்தும் நீங்கள் தெரிந்து கொள்ள முடியும். எனவே, நாங்கள் திறம்பட செயற்பட்டிருக்கின்றோம் என்று எண்ணுகிறேன்.

ஜேம்ஸ் பேய்ஸ்: ஜனாதிபதி ராஜபக் ஷ அவர்களே எங்களுடன் அல் ஜசீராவுடன் பேசியதற்கு உங்களுக்கு எமது நன்றிகள்

(முற்றும்)
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக