அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

செவ்வாய், 1 அக்டோபர், 2013

பதற்றத்தைக் குறைத்தால் அழகாகலாம்

சிலரை பார்த்தால் குளிர்­சா­த­னப்­பெட்­டியில் வைத்த அப்பிள் பழம் போல எப்­போதும் பொலி­வாக இருப்­பார்கள் இன்னும் சிலரோ எப்போதும் தூங்கி வழிந்த முகத்­துடன் இருப்­பார்கள்.

இப்­படி இருப்­ப­வர்­க­ளுக்கு சுறு­சு­றுப்பும் மிஸ் ஆகி தான் இருப்­ப­தோடு அவர்­களின் அழகும் காணமல் போய்த்தான் இருக்கும். இவ்­வாறு அழகை வைத்து அமெ­ரிக்க ஆராய்ச்­சி­யா­ளர்கள் ஆய்வு ஒன்று மேற்­கொண்­டனர்.

அந்த ஆய்வு இயற்கை அழகு யாருக்கு கிடைக்கும் என்ற கோணத்தில் அமைந்து இரு ந்­தது. 500 க்கும் மேற்­பட்ட இளம் ஆண்கள், பெண்கள் இந்த ஆய்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டனர். அவர்­க­ளிடம் அவர்கள் தினமும் மேற்­கொள்ளும் செயல்­களில் இருந்து கேள்­விகள் கேட்­கப்­பட்­டன. ஆய்வின் முடிவில் அடிக்­கடி பதற்­ற­மாக இருப்­ப­வர்­களை காட்­டிலும் பதற்றம் ஆகாமல் எதையும் இல­கு­வாக எடுத்­துக்­கொள்­ப­வர்கள் பொலி­வா­கவும் அழ­கா­கவும் இருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. இது பற்றி ஆய்­வா­ளர்கள் கூறும்­போது அழ­குக்கும் மன­திற்கும் நிறை யவே தொடர்பு இருக்­கி­றது.

இந்த மனதை இயற்­கை­யாக அதா­வது பதற்றம் இன்றி வைத்­துக்­கொண்டால் முகமும் அழ­காக இருக்கும். என்று தெரி­வித்­தனர். என்ன நீங்­களும் பதற்­ற­மான பார்ட்டி என்றால் இப்­பவே உங்கள் பதற்றத்தை தூக்கி எறிந்து விடுங்கள். இல்லையெனில் அழகு உங்களிடம் இருந்து போயே போய்விடும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக