அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 16 அக்டோபர், 2013

வடமராட்சியில் நாகர் படையின் மிரட்டல் கடிதம்!

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வடமராட்சி பொறுப்பாளர் ரங்கன் உட்பட அக்கட்சியின் உள்ளூர் பிரமுகர்களுக்கு நாகர் படை என்கிற அமைப்பால் படுகொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.

தேர்தல்களில் அரச சார்பான கட்சிகளில் வேட்பாளராக நிற்றல், ஆதரவுப் பிரசாரம் செய்தல் மற்றும் அக்கட்சிகளை வளர்த்தல் போன்றன மரண தண்டனைக்கு உரிய குற்றங்கள் என்று மிரட்டல் கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

இருப்பினும் தமிழர்கள் என்கிற காரணத்தால் இத்தடவை மன்னிக்கப்படுகின்றார்கள் என்றும் இனி வரும் காலங்களில் அதிகப்படியான மரண தண்டனைதான் வழங்கப்படும் என்றும் இதில் உள்ளது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக