அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வெள்ளி, 4 அக்டோபர், 2013

மண்டையோட்டின் அரைப்பகுதியை இழந்த நபருக்கு புரட்சிகர அறுவைச்சிகிச்சை மூலம் புதுவாழ்வு

புல்வெட்டும் உபகரணமொன்றால் மோதுண்டு விபத்துக்குள்ளாகி தனது மண்டையோட்டின் அரைப்பகுதியை இழந்த நபரொருவருக்கு முப்பரிமாண அச்சிடும் முறைமையைப் பயன்படுத்தி செயற்கை மண்டையோட்டை வெற்றிகரமாக பொருத்தி போலந்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

குட்னா நகரைச் சேர்ந்த மைக்கல் லெஸியோவ் (31 வயது) என்ற மேற்படி நபர், இரு வருடங்களுக்கு முன் தனது வீட்டிற்கு வெளியில் புல்வெட்டிக் கொண்டிருக் கையில் நகர்ந்து கொண்டிந்த புல்வெட்டும் உபகரணம் அவரை மோதித் தள்ளி அவரது தலையின் மேலாக நகர்ந்தது.

இந்நிலையில் மைக்கேல் லெஸியோவின் மண்டையோடு சேதமடைந்து மண்ணாலும் புல்லாலும் நிரம்பிய நிலையில் லொட்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.

இந்நிலையில் அந்த மருத்துவனையின் நரம்பியல் சத்திரசிகிச்சைப் பிரிவின் தலைவர் மருத்துவர் பாவேல் கொலஸா தலைமையிலான மருத்துவர்கள் இரு வருடங்களைச் செலவிட்டு மைக்கல் லெஸியோவின் மண்டையோட்டின் இழந்த பகுதிக்கான எலும்புப் பகுதியை மீள உற்பத்தி செய்வதற்கான முப்பரிமாண அச்சிடும் முறை மையை விருத்தி செய்துள்ளனர்.

இதனையடுத்து அவர்கள் மேற்படி பொலிபுரோபைலீனால் உருவாக்கப்பட்ட மண்டையோட்டுப் பாகத்தை மைக்கேல் லெஸியோவுக்கு வெற்றிகரமாக பொருத்தியுள்ளனர்.

இந்த முப்பரிமாண அச்சிடும் முறைமை மூலம் உருவாக்கப்பட்ட மண்டையோட்டின் பாகம் மைக்கேல் லெஸியோவின் சொந்த மண்டையோட்டையொத்த தோற்றப்பாட்டை அளித்து அவருக்கு புதுவாழ்வைத் தந்துள்ளது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக