காலை வேளையில் நகரின் மத்தியில் வீதியைத் துளைத்துக்கொண்டு பாரிய நீர்மூழ்கிக் கப்பலொன்று வெளித்தள்ளியிருப்பதை கண்டு மக்கள் திகைப் படைந்த சம்பவம் இத்தாலியின் மிலான் நகரில் இடம்பெற்றுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் வியாழக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
வீதியில் வெளித்தள்ளி கொண்டி ருந்த நீர்மூழ்கிக் கப்பலால் மக்கள் திகைப்படைந்து நிற்க, அங்கு வந்த மீட்புப் பணியாளர் குழுவொன்று நீர்மூழ்கிக் கப்பலின் மீது ஏறி உள்ளேயிருந்த மாலுமிகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடு பட்டது.
இதனால் அங்கு கூடியிருந்தவர்களுக்கு திகைப்பு மென்மேலும் அதிகரித்தது.
எனினும் சில நிமிடங்களிலேயே அது போலியான நீர்மூழ்கி கப்பலின் கட்டமைப்பு என்பதும் அதில் சிக்கியிருந்த மாலுமிகளும் மீட்புப்பணிக் குழுவினரும் போலியான வர்கள் என்பதும் அவர்களுக்கு தெரிய வந்தது.
இத்தாலியை அடிப்படையாகக் கொண்டியங்கும் காப்புறுதி நிறுவனமான யூரோப் அஸிஸ்டன்ஸ் இட் நிறுவனத்தால் 'உங்கள் உயிரை பாதுகாத்துக் கொள்ளுங்கள்' என்ற தலைப்பிலான பிரசார நடவடிக்கைக்காகவே இந்த போலியான நீர்மூழ்கிக்கப்பல் உருவாக்க ப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக