தனது அளவுக்கதிகமான பருமன் காரணமாக தனக்கென விமானத்தில் இரு ஆசனங்களை பதிவு செய்த நபரொருவருக்கு, இரு வேறு வரிசைகளில் தனித்தனி ஆசனங்களை வழங்கி விமான சேவையொன்று அவரை அதிர்ச்சியில் ஆழ்த்திய சம்பவம் அயர்லாந்தில் இடம்பெற்றுள்ளது.
518 இறாத்தல் நிறையைக் கொண்ட லெஸ் பிறைஸ் என்ற மேற்படி நபர், 280 இறாத்தலுக்கு அதிகமான நிறைகொண்டவர்கள் இரு ஆசனங்களை தமக்கென பதிவு செய்ய வேண்டும் என விமான சேவை விதிகள் வலியுறுத்துவதை கவனத்திற்கொண்டு விமானத்தில் தனக்கென இரு ஆசனங்களை முன்பதிவு செய்திருந்தார்.
அயர்லாந்திற்கு விஜயம் செய்திருந்த அவர் தனது சொந்த இடமான தென் வேல்ஸுக்கு திரும்பும் முகமாக மேற்படி விமான ஆசனப் பதிவை மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில் சட்டக் காரணங்களுக்காக பெயர் வெளியிடப்படாத குறிப்பிட்ட விமான சேவை, அவருக்கு 17 ஆம் மற்றும் 19 ஆம் வரிசைகளில் இரு வேறு ஆசனங்களை வழங்கி அவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக