அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

அமெரிக்கா எவ்வளவோ முயன்றும் மன்மோகன் போன், இமெயிலை ஏன் ஹேக் செய்ய முடியலை?

டெல்லி: அமெரிக்கா உலக நாடுகளின் தலைவர்களின் செல்போன் மற்றும் இமெயிலை ஹேக் செய்த போதிலும் அதனால் பிரதமர் மன்மோகன் சிங்கின் செல்போன் மற்றும் இமெயிலை மட்டும் ஹேக் செய்ய முடியவில்லை.

வெள்ளை மாளிகை, பென்டகன் மற்றும் மாநில அரசு துறை அதிகாரிகள் அளித்த தொலைபேசி மற்றும் செல்போன் எண்களை வைத்து அமெரிக்க உளவாளிகள் உலகின் 35 நாடுகளின் தலைவர்கள் பேசியதை ஒட்டுக் கேட்டுள்ளனர் என்று தி கார்டியன் நாளிதழ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க அரசின் ரகசியங்களை வெளியிட்ட எட்வர்ட் ஸ்நோடன் அளித்த தகவல்களின் மூலம் தான் அமெரிக்கா ஒட்டுக் கேட்ட விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது குறித்து அறிந்த ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் கடும் கோபத்தில் உள்ளார்.

இந்நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் இது குறித்து கவலை அடையவில்லையா என்று கேட்டதற்கு அவரது செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,பிரதமர் செல்போன் பயன்படுத்துவது இல்லை.

மேலும் அவருக்கு என்று சொந்தமாக இமெயில் கணக்கு இல்லை. அவரது அலுவலகம் இமெயிலை பயன்டுத்தும், அவர் சொந்தமாக பயன்படுத்துவதில்லை. அதனால் எதைப்பற்றியும் கவலை இல்லை என்றார்.

Thatstamil
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக