அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

கொழும்பிலிருந்து யாழ் நோக்கி பயணித்த பஸ் தீக்கிரையானது! (படங்கள்)

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி நேற்றிரவு (26) பயணித்த தனியார் சொகுசு பஸ் ஒன்று தீக்கிரையாகியுள்ளது.

வெள்ளவத்தையிலிருந்து சென்ற அதிசொகுசு தனியார் பஸ்ஸே தீக்கிரையாகியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சிலாபம், மாதம்பே பகுதியில் உள்ள 67ஆம் வளைவில் இந்த பஸ் தீக்கிரையாகியுள்ளது.

தீ அனர்த்தம் ஏற்படும் போது குறித்த பஸ்ஸில் சுமார் 25 பயணிகள் இருந்தபோதிலும், பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

இயந்திரக் கோளாறு காரணமாக பஸ் தீப்பற்றிக்கொண்டுள்ளதாக பொலிஸாரின் முதல்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.


Share |
   
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக