அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 25 நவம்பர், 2013

விண்டோஸ் 7 டாஸ்க் பாரில்...

விண்டோஸ் 7 டாஸ்க் பாரில் நமக்குத் தேவையான ஐகான்கள் மட்டும் இதில் அமையும்படி செட்டிங்ஸ் அமைக்க முடியுமா?

முடியும். கடிகாரம், வால்யூம் கண்ட்ரோல் (ஸ்பீக்கர்) நெட்வொர்க் செயல்பாடு தெரிவிக்கும் ஐகான், பவர் அளவு மற்றும் ஆக் ஷன் சென்டர் ஐகான் ஆகியவற்றை நாம் விரும்பினால் வைத்துக் கொள்ளலாம். இதற்குக் கீழே குறித்துள்ளபடி செயல்படவும்.

1. டாஸ்க்பாரின் வலது பக்கம் மேலே காட்டியபடி ஓர் அம்புக் குறி இருக்கும். இதன் அருகில் மவுஸின் கர்சரைக் கொண்டு செல்லவும். அப்போது "Show hidden icons” என்று காட்டப்படும்.

2. இந்த பட்டனில் கிளிக் செய்து "Customize” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

3. இப்போது "Notification Area Icons” என்ற கண்ட்ரோல் பேனல் விண்டோ காட்டப்படும்.

இந்த விண்டோவின் கீழாக, "Turn system icons on or off” என்று ஒரு ஆப்ஷன் கிடைக்கும்.

இதில் கிளிக் செய்தால், விண்டோ "Turn system icons on or off” என மாற்றம் பெறும். இங்கே, “Clock”, “Volume” (the speaker), “Network”, “Power”, and “Action Center” ஆகிய சிஸ்டம் ஐகான் அருகே கிளிக் செய்து அதனை "On” அல்லது "Off” என அமைக்கவும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக