அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 25 நவம்பர், 2013

லேப்டாப் கீ போர்ட்..

லேப்டாப் கீ போர்ட் பயன்படுத்துகையில், கர்சர், கன்னா பின்னாவென்று எங்கெங்கோ செல்கிறது. ஏன்?

முதன் முதலாக லேப்டாப் பயன்படுத்துபவர்கள் அனைவரும் சந்திக்கும் சிக்கலான பிரச்னை இது. தீர்வு மிக எளிதான ஒன்றாகும். முதலாவதாக,

https://code.google.com/p/touchfreeze/downloads/detail?name=TouchFreeze-1.1.0.msi

என்னும் இணைய தளம் சென்று டச் ப்ரீஸ் TouchFreeze என்னும் சாப்ட்வேர் அப்ளிகேஷனை டவுண்லோட் செய்து, லேப்டாப் கம்ப்யூட்டரில் பதிந்து கொள்ளவும். இந்த சாப்ட்வேர், நீங்கள் டைப் செய்திடத் தொடங்கியவுடன், டச் பேடினைச் செயல் இழக்கச் செய்திடும். டைப் செய்வதை நிறுத்தியவுடன், டச் பேட் செயல்படும். எனவே, எந்தப் பிரச்னையும் இன்றி டைப் செய்திடலாம்.

சில லேப்டாப் கம்ப்யூட்டர்களில், டச் பேடின் இயக்கத்தினை நிறுத்த, சிறிய அளவிலான பட்டன் தந்திருப்பார்கள். இதனை இயக்கியும் இந்த பிரச்னையிலிருந்து விடுபடலாம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக