அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 25 நவம்பர், 2013

விண்டோஸ் 8 ல் Bing Smart Search

விண்டோஸ் 8.1 பதிப்பில் Smart Search என்ற அருமையான டூல் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எளிமையாகவும், விரைவாகவும் நமக்கு வேண்டிய பைல்களையும், புரோகிராம்களையும் தேடிப் பெறலாம்.

விண்டோஸ் திரையில், வலது பக்கம் இழுத்தால் அல்லது மவுஸைக் கொண்டு இயக்கினால் கிடைக்கும் Charms Barல் முதலில், Settings என்பதில் கிளிக் செய்திட வேண்டும். தொடர்ந்து Devices, Start, Share and Search எனச் சென்றால் இந்த டூல் கிடைக்கும்.

இந்த Search charmனை, Bing Ads பிளாட்பார்மில் இணைத்தும் பெறலாம். இது கம்ப்யூட்டரில் மட்டுமின்றி, இணையத்திலும் தேடிப் பெறும் வாய்ப்புகளைத் தருகிறது. இது ஒரு சிலருக்கு நல்ல டூலாகவும், மற்ற சிலருக்குத் தேவையற்ற எரிச்சல் தரும் வழியாகவும் உள்ளது.

எனவே, இந்த Bing Ads டூல் குறித்து முடிவெடுத்து செட் செய்திட வழி தரப்பட்டுள்ளது. PC settings கிளிக் செய்து, இடது பக்கமாக, Search & Apps என்பதில் கிளிக் அல்லது டேப் செய்திடவும்.

இங்கு என்ற பிரிவில் ஒரு ஸ்லைடர் கொடுக்கப்பட்டிருக்கும்.

இதனைப் பயன்படுத்தி, இந்த டூலை on (இயக்க நிலை) அல்லது off இயக்கமில்லா நிலையில் வைக்கலாம்.

இது குறித்து மேலும் அறிய www.eightforums.com என்ற முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும்.

இந்த இணைய தளத்தில், விண்டோஸ் 8 சிஸ்டம் குறித்த மேலும் பல தகவல் குறிப்புகளையும், டிப்ஸ்களையும் காணலாம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக