அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 25 நவம்பர், 2013

ஷார்ட் கட் கீ உருவாக்க

விண்டோஸ் 7 கம்ப்யூட்டரில் ஸ்லீப் நிலையில் வைத்திட, ஷார்ட் கட் கீ உருவாக்கி, அதனை டெஸ்க்டாப்பில் வைத்து இயக்க முதலில் நோட்பேடினைத் திறக்கவும்.

ஸ்டார்ட் மெனு (Start Menu) கிளிக் செய்து, பின்னர் அக்சஸரீஸ், நோட்பேட் (Accessories then Notepad) எனச் செல்லவும்.

நோட்பேட் கிடைத்தவுடன், அதில் கீழே தரப்பட்டுள்ள வரிகளை டைப் செய்திடவும்.

@echo off
powercfg -h off
rundll32.exe powrprof.dll,SetSuspendState 0,1,0
powercfg -h on

இதன் பின் பைல் (File) சென்று, கிடைக்கும் விரிமெனுவில் Save As என்பதில் கிளிக் செய்திடவும். "Save as type” என்பதில் கிளிக் செய்து, அதன் கீழ் விரி மெனுவினைப் பெறவும்.

இங்கு All Files என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் "File name:” என்னும் பாக்ஸில், பைலுக்குப் பெயராக, sleep.cmd எனக் கொடுக்கவும்.

இப்போது, டெஸ்க்டாப்பில், ஒரு ஐகான் கிடைக்கும்.

இந்த ஐகானில் டபுள் கிளிக் செய்தால், அது உங்கள் கம்ப்யூட்டரை நீங்கள் விரும்பும் வகையில், ஸ்லீப் மோடில் வைக்கும்.

ஸ்லீப் மோடில் வைக்காமல், ஹைபர்னேட் மோடில் வைக்கப்பட்டால், இந்த ஷார்ட் கட் புரோகிராமினை, நீங்கள் அட்மினிஸ்ட்ரேட்டராக இயக்க வேண்டும்.

இதற்கு அந்த புரோகிராம் ஐகானில், ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் "Run as Administrator” என்பதனைத் தேர்ந்தெடுத்து, டபுள் கிளிக் செய்திட வேண்டும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக