அமெரிக்க வீதிகளில் அதிகமான கார்களும், மக்களும் நடமாட்டம் இருக்கும் நாள் எது என்று கேட்டால், இன்றைய 'கருப்பு வெள்ளி தினம்; (Black Friday) என்று சொல்லிவிடலாம். அமெரிக்காவில் நன்றி கூறும் நாள் (Thanks Giving) என்று நவம்பர் மாதம் கடைசி வியாழக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. நண்பர்களும் உறவினர்களும் தங்கள் நன்றியை பகிர்ந்து கொள்ளவும், குடும்பத்தினருடன் உற்சாகமாக செலவிடும் நாளாகவும் இது அமைகிறது.
அடுத்த நாளான வெள்ளிக்கிழமை, Black Friday என்று அழைக்கப்படுகிறது. இது வணிக நிறுவனங்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் ஒரு சேர மகிழ்ச்சியான நாளாகும். அனைத்து நிறுவனங்களுமே, தள்ளுபடியில் பொருட்களை விற்பனை செய்கின்றன. அதனால் வாடிக்கையாளார்கள் தங்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கும் நாளாக இதை கருதுகின்றனர். வணிக நிறுவனங்களுக்கோ, வருடத்திலேயே மிக அதிகமாக விற்பனை நாள் இதுவே.
1863 ஆம் ஆண்டில் அதிபர் ஆப்ரகாம் லிங்கன் Thanks Giving Day ஐ அமெரிக்க அரசு விடுமுறை நாளாக அறிவித்தார். வால்மார்ட் உள்ளிட்ட சில்லரை விற்பனை நிறுவனங்கள் அன்றைய தினம் மூடியிருக்கும். முதலில் வெள்ளிக்கிழமை அதிகாலை கடைகளை திறந்து தள்ளுபடி விற்பனையை ஆரம்பித்தார்கள். அதனால் சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகமாகியதால் பிலடெல்பியாவில் 1961 முதல் அன்றைய தினத்தை கருப்பு வெள்ளி என்று அழைக்கத் தொடங்கினர். 1975 முதல் அந்த பெயர் அமெரிக்கா முழுவதும் பரவலாக அழைக்கப் படலாயிற்று.
முன்னர், அதிகாலையில் திறந்த நிறுவனங்கள், பிறகு நள்ளிரவு திறக்க ஆரம்பித்தனர். தற்போது அனேக மாநிலங்களில், வியாழக்கிழமை 6 மணிக்கே வியாபாரம் ஆரம்பமாகி விடுகிறது. தவிர இதே நிறுவனங்கள் புதன் கிழமை இரவே இண்டெர் நெட் வியாபாரத்தில் கல்லா கட்ட தொடங்கி விடுகிறார்கள்.
குறைந்த அளவிலான பொருட்களே, அதிகமான தள்ளுபடியில் விற்பனைக்கு வைக்கப்படுகிறது. ஆகையால் அதை வாங்கிக் கொள்ளுவதற்காக பெரிய தள்ளு முள்ளு நடக்கிறது. மணிக்கணக்கில் கடைவாசலில் காத்திருந்து வாங்குபவர்கள் ஏராளம். டிவி உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களுக்கு வாசலிலேயே கூப்பன் கொடுத்து விடுகிறார்கள், மற்ற பொருட்கள் முதலில் வருபவர்களுக்கே கிடைக்கும் என்பதால் கடும் தள்ளு முள்ளு ஆகிவிடுகிறது. போலீஸ் வந்து கைது செய்யும் நிலையும் ஏற்படுகிறது. சில இடங்களில் துப்பாக்கி சூடு கூட நடந்து விடுகிறது.
பெரும்பான்மையான இந்தியர்கள் கருப்பு வெள்ளி தினத்திற்காக காத்திருந்து, விலை உயர்ந்த பொருட்களை மலிவு விலையில் வாங்குகின்றனர். அனைத்து நிறுவனங்களும் என்னென்ன பொருட்களை எந்த விலைக்கு விற்கின்றன என்ற விவரங்கள் முன்னதாகவே வெளியாகிவிடுவதால், தேவையான கடைகளுக்கு செல்ல வசதியாக இருக்கிறது. வால்மார்ட் தன் விளம்பரங்களை இந்தி மொழியில் வெளியிடுகிறது என்றால் இந்தியர்களின் தாக்கம் தெரிகிறதல்லவா..!
அடுத்த ஆண்டு தமிழ் , தெலுங்கு மொழிகளிலும் விளம்பரங்கள் வந்தால் ஆச்சரியமில்லை.
அமெரிக்க நிறுவனங்கள் அதிக லாபம் சம்பாதிக்கும் இந்த நாள் சீன வர்த்தகத்திற்கும் மிக முக்கியமானதாகும். தள்ளுபடியில் விற்பனையாகும் பெரும்பான்மையான பொருட்களின் உற்பத்தியாளர்கள் சீன நிறுவனங்கள் அல்லவா!
இந்த கருப்பு வெள்ளிக்கு அதிக முக்கியம் கிடைக்க இன்னொரு காரணம் கிறிஸ்துமஸ். இன்னும் மூன்று வாரங்களில் வரும் கிறிஸ்துமஸுக்காக இப்போதே ஷாப்பிங்கை ஆரம்பிக்க வசதியாக அமைகிறது இந்த கருப்பு வெள்ளி.
சொல்லப்போனால், நம்மூர் திருவிழாக்கள் அல்லது சந்தைகளில் பொருட்களைக் குவித்து குறைந்த விலைக்கு விற்கும் நமது பழைய வியாபார நுணுக்கம்தான், அமெரிக்காவின் கருப்பு தின வணிகம் என்று புதிய வடிவெடுத்து இருக்கிறது!
Thatstamil

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக