அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வியாழன், 28 நவம்பர், 2013

அமெரிக்க "Gay" மனைவிக்கு இந்திய விசா கிடைக்குமா? இப்படியும் ஒரு சிக்கல் வருதுங்க..

டெல்லி: சமூகத்தின் சிந்தனை போக்குகள் மாற மாற காலம் காலமாக பின்பற்றப்படுகிற நடைமுறைகளும் பார்வைகளும் மாறித்தான் ஆக வேண்டும்போல.. அமெரிக்காவில் ஓரினச்சேர்க்கையாளர்களாக இருக்கும் கணவன் மனைவிக்கு அதனடிப்படையில் இந்தியாவில் விசா வழங்க முடியுமா? என்ற புதிய சர்ச்சை ஒன்று உருவாகியுள்ளது.

இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் பாஸ்போர்ட் விசா பிரிவில் பணியாற்றியவர் நீனா மல்கோத்ரா. இவர் ஏற்கெனவே ஒரு சர்ச்சையில் சிக்கியவர். அமெரிக்காவில் இந்திய தூதரகத்தில் இணை செயலராக பணியாற்றிய போது வீட்டு வேலைக்கார பெண்ணை கொடுமைப்படுத்தியது தொடர்பான வழக்கில் இவருக்கு 1.5 மில்லியன் டாலர் அமெரிக்க நீதிமன்றத்தால் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சரி இப்போது "பஞ்சாயத்துக்கு வருவோம்"..

வெளியுறவு அமைச்சக பாஸ்போர்ட் பிரிவு அதிகாரியான நீனா மல்கோத்ராவிடம் ஒரு விசா விண்ணப்பம் வந்தது. விசாவை விண்ணப்பித்திருந்தவர் இஸ்லாமாபாத்தில் பணிபுரியும் அமெரிக்க தூதரக அதிகாரி. அவருக்கு டெல்லியில் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர் தமக்கும் தமது மனைவிக்கும் விசா கோரி விண்ணப்பித்திருந்தார். அவர் மனைவி என விசா கோரியிருந்தது ஓரினச்சேர்க்கை உறவின் மூலமான "மனைவி".

இங்குதான் சிக்கலே ஆரம்பானது.. இந்தியாவில் ஓரினச்சேர்க்கை திருமணங்கள் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை. இதனால் ஓரினச்சேர்க்கை மனைவிக்கு விசா வழங்க நீனா மல்கோத்ரா மறுத்துவிட்டார். இது இப்போது சர்ச்சையாக மாறியுள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத் துறை செயலர் சுஜாதா சிங் தலையிட வேண்டும் என்ற நிலைக்குப் போயிருக்கிறது.

ஓரினச்சேர்க்கை உறவின் மூலமான "மனைவி" என்ற தகுதியின் கீழ் விசா கொடுக்காமல் குடும்ப உறுப்பினர் என்ற அடிப்படையில் விசா கொடுப்பதுதான் பின்பற்றப்படுகிற நடைமுறை என்றும் அதை நீனா மல்கோத்ரா கடைபிடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இப்படி ஒரு சர்ச்சை நடந்து கொண்டிருக்கும் போது நீனா மல்கோத்ரா திடீரென வேறு பிரிவுக்கு மாற்றப்பட்டுவிட்டார். இது மற்றொரு சர்ச்சையை உருவாக்கிவிட்டிருக்கிறது.
 ஆனால் விசா மறுப்புக்கும் நீனா மல்கோத்ரா டிரான்ஸ்பருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்கின்றனர் வெளியுறவுத் துறை அதிகாரிகள்.. இன்னும் எத்தனை எத்தனை சட்ட திருத்தம் கொண்டு வரனுமோ?
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக