அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வியாழன், 28 நவம்பர், 2013

இன் பிரைவேட் பிரவுசிங் ....

பிரைவேட் பிரவுசிங் என்பது குரோம் பிரவுசரில் முதலில் வழங்கப்பட்டது. குரோம் இதனை Incognito Mode என அழைத்தது. நாம் இணையத்தில் செல்கையில், எந்த இணையதளங்களுக்குச் செல்கிறோம், என்ன பைல்களை டவுண்லோட் செய்கிறோம் போன்ற தகவல்கள் ஆங்காங்கே சேமிக்கப்படுகின்றன.

பெரும்பாலான தளங்கள் உங்கள் விருப்பங்கள், ஐபி முகவரி மற்றும் உங்களைப் பற்றிய குறிப்புகளை குக்கிகள் என்ற பைலில் எழுதி உங்கள் கம்ப்யூட்டரிலேயே பதிந்து வைக்கின்றன.

இதனால் அடுத்த முறை, நீங்கள் அந்த தளத்திற்குச் செல்கையில், குக்கிகள் பைலில் உள்ள தகவல்கள் படிக்கப்பட்டு, உங்களுக்கும் அந்த தளத்திற்குமான இணைப்பு விரைவில் நடைபெறுகிறது.

இவ்வாறு இல்லாமல் ஒரு பிரவுசர், உங்கள் தேடல்களைப் பற்றிய தகவல்கள் எதனையும் பதிந்து வைக்காது என்ற வழக்கத்தினை குரோம் அறிமுகப்படுத்தியது.
அதுவே பிரைவேட் பிரவுசிங் என்பதாகும். இதை இன்டர்நெட் பிரவுசர் பதிப்பு 8 InPrivate Browsing என அழைக்கிறது.

இந்த வகை பிரவுசிங் போது, பிரவுசர் எதனையும் பதிந்து கொள்ளாது.

குக்கிகள் ஏற்படுத்தப்படமாட்டாது.

இதனால் இந்த வகை பிரவுசிங்கின் போது பார்த்த இணைய தளங்களின் முகவரிகளை, அடுத்த முறை டைப் செய்கையில், தானாக அது நிரப்பப்பட்டு காட்டப்படமாட்டாது.

இந்த வகையில் பிரவுஸ் செய்திட File – Edit – View – Favorites – Tools – என்று சென்று பின் இதில் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் InPrivate Browsing என்பதில் கிளிக் செய்திடவும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக