அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 25 நவம்பர், 2013

சிஸ்டம் டிப்ஸ்

ரெசல்யூசன்: (Resolution) மானிட்டர் திரை அல்லது அச்சில் படம் ஒன்றில் எந்த அளவிற்கு டீடெய்ல்ஸ் உள்ளன என்பதைக் குறிக்க இந்த அளவு அலகு சொல்லைப் பயன்படுத்துகிறோம். ஒரு மானிட்டரில் இது அதன் பிக்ஸெல்களைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக 17 அங்குல மானிட்டரில் இது 1024 x 768 பிக்ஸெல் ஆக இருக்கும். அச்சுப் படிவம் மற்றும் ஸ்கேனரில் ரெசல்யூசன் என்பது ஒரு சதுர அங்குலத்தில் எத்தனை புள்ளிகளில் (Dots per inch) டீடெய்ல்ஸ் தரப்பட்டுள்ளது என்பதை இது குறிக்கிறது. அல்லது ஒரு சதுர அங்குல இடத்தில் எத்தனை துளி இங்க் அல்லது டோனர் தெளிக்கப்படுகிறது என்பதையும் ரெசல்யூசன் என்பதன் மூலம் சொல்லப்படுகிறது.

ஆஸ்பெக்ட் ரேஷியோ (Aspect Ratio): ஒரு டிவியின் அல்லது மானிட்டரின் திரையின் அகல உயர விகிதத்தை ஆஸ்பெக்ட் ரேஷியோ என்கிறோம். வழக்கமான டிவிக்களின் திரை 4:3 என்ற விகிதத்தில் அமைந்திருக்கும். அதாவது 4 பங்கு அகலம் 3 பங்கு உயரம். தற்போது வருகின்ற புதிய ஸ்கிரீன்கள் 16:9 என்ற விகிதத்தில் அமைக்கப்படுகின்றன.

டபுள் லேயர் (Double Layer): டிவிடி ஒன்றில் இரண்டு அடுக்குகளில் தகவல்கள் பதியப்படுவதனை இச்சொல்லால் குறிக்கிறோம். எனவே வழக்கமான டிஸ்க்குகளின் கொள்ளளவுக்குப் பதிலாக இவ்வகை டிவிடிக்களில் 8.5 கிகாபைட் வரை இதில் தகவல்களைப் பதியலாம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக