அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 25 நவம்பர், 2013

நான்கு டெஸ்க்டாப் கடிகாரங்கள்

நாம் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் வெளிநாடுகளில் வசிப்பதும், அவர்களைத் தினந்தோறும் தொலைபேசி அல்லது கம்ப்யூட்டர் மூலம் தொடர்பு கொள்வதும் அனைவருக்கும் வாடிக்கையாகி வருகிறது. வேறு நாடுகளில் நிச்சயம் நேரம், சில நாடுகளில், நாளும் கூட வேறாக இருக்கும்.

நாடு அமைந்திருக்கும் இடத்தைப் பொறுத்து, முன்னதாகவோ, பின்னதாகவோ இருக்கலாம். நமக்கு, நம் ஊர் நேரத்துடன், குறிப்பிட்ட அந்த வெளிநாட்டின் ஊர் மற்றும் நேரம் அறிந்து கொள்வது அடிப்படைத் தேவையாகிறது.

இவ்வாறு கூடுதலான கடிகாரங்களை அமைத்து, நேரத்தினை செட் செய்து பார்த்துக் கொள்ளும் வசதியினை, தற்போது இயக்கத்தில் உள்ள விண்டோஸ் சிஸ்டங்கள் தருகின்றன. அதிக பட்சம் நான்கு வெவ்வேறு நேரங்களை செட் செய்து அமைத்துக் கொள்ளலாம். அவற்றை எப்படி செட் செய்வது என இங்கு பார்க்கலாம்.விண்டோஸ் 7 இந்த வசதியைத் தருகிறது.

1. முதலில் டாஸ்க் பாரில் நேரம் காட்டப்படும் Time என்ற இடத்தில் கிளிக் செய்து பின்னர் Change Time and date Settings. என்பதில் கிளிக் செய்திடவும்.

2. அல்லது நேரடியாக Time என்பதில் ரைட் கிளிக் செய்து, Adjust Date/ Time என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கலாம்.

3. மாறாக, கண்ட்ரோல் பேனல் திறந்து Date and Time என்ற ஐகானில் கிளிக் செய்திடவும்.

4. இப்போது திறக்கப்படும் விண்டோவில் Additional Clocks என்ற ஆப்ஷன் மேல் பிரிவில் கிடைக்கும்.

5. இங்கு கிடைக்கும் add a clock என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்தால், மற்ற டேட்டா கேட்கும்.

6. இங்கு நீங்கள் அமைக்க விரும்பும் கடிகாரத்தின் Time Zone ஐத் தேர்ந்தெடுக்க வேண்டியதிருக்கும்.

7. அடுத்து இறுதியாக, நீங்கள் அமைக்க விரும்பும் கடிகாரத்திற்கான பெயரை அதிக பட்சம் 15 கேரக்டர்களில் தரலாம்.

இவை எல்லாம் முடிந்த பின்னர், Finish என்பதில் கிளிக் செய்திடவும். அவ்வளவு தான்!. கடிகாரம் டாஸ்க் பாரில் காட்டப்படும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக