அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வியாழன், 28 நவம்பர், 2013

பொட்டம்மானுக்கே உயிர்ப் பிச்சை கொடுத்த கவிஞர் ஜெயபாலன்!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டம்மானுக்கு உயிர்ப் பிச்சை கொடுத்தார் என்று பேஸ் புக் தளத்தில் நண்பர்கள், அபிமானிகள் ஆகியோருடன் பகிர்ந்து உள்ளார் கவிஞர் ஜெயபாலன்.

புளொட் இயக்கத்தால் பட்டுக்கோட்டையில் பொட்டம்மான் சிறைப் பிடிக்கப்பட்டபோது இவர் தலையிட்டுத்தான் விடுதலை பெற்றுக் கொடுத்து இருக்கின்றார்.

இதற்காக இவர் பகீரத முயற்சிகள் மேற்கொண்டார் என்றும் இவரது ஆக்கிரோஷத்தை கண்ட புளொட் பிரமுகர்கள் சிலர் இவரை கொல்லலாமா? என்றுகூட யோசித்தனர் என்றும் பின் பொட்டம்மானை விடுவிக்கின்ற தீர்மானத்தை எடுத்தனர் என்றும் இப்பகிர்வில் குறிப்பிட்ட்டு உள்ளார்.

“ 1984 இல் புளொட் இயக்கம் பொட்டம்மானை பட்டுக்கொட்டையில் வைத்துக் கைதுசெய்தபோது நான் முகுந்தனில் அலுவலகத்துக்குள் புகுந்து செய்த கலாட்டாவை அப்போது அங்கிருந்த தோழர் சிவா சின்னப்பொடி அறிவார். கொலைகாரன் டம்பிங் கந்தசாமியிடம் என்னைக் கொல்ல சொல்வதா? அல்லது பொட்டம்மானை விடுதலை செய்வதா? என முதலில் குழம்பிய முகுந்தன் இறுதியில் பொட்டம்மானை விடும்படி உத்தரவிட்டார். இதை இறுதி வரை பொட்டம்மான் மறக்கவே இல்லை என்பதை நான் அறிந்திருந்தேன்.

1990 இல் முஸ்லிம்களை குழப்புகிறேன் என்ற குற்றச்சாட்டில் மட்டக்களப்பில் வைத்து கரிகாலனும், டேவிட்டும் என்னை கடத்தினார்கள். முஸ்லிம் மக்கள் தொடர்பான என் நிலைபாட்டை மாற்றிக் கொள்ள மறுத்தேன். கருணா என்னை வந்து பார்த்தபோது வன்னிக்கு அறிவிக்காமல் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என சத்தியம் வாங்கினேன். ஒரிரு நாட்களின் பின்னர் கிரான் சுடலைக்கு மண்வெட்டி சகிதம் அழைத்துச் சென்றபோது இறுதி நேரத்தில் பொட்டம்மான் தலையிட்டு என்னை விடுவித்தார். ”


தாய்நாடு இணையம்


Share |

   
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக