விண்டோஸ் அப்டேட் செய்திடுகையில் எர்ரர் குறியீடாக 0x80070020 கிடைத்தது. இதற்கு என்ன பொருள்?
உங்கள் கம்ப்யூட்டருக்குத் தேவையான அப்டேட் பைல்களைத் தேடுகையில், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தால், அதற்கான குறிப்பிட்ட பைல் ஒன்றை, அதனால் பெற முடியவில்லை என்று இந்த குறியீடு குறிக்கிறது.
இது பரவலாக ஏற்படும் பிரச்னை தான். இதற்குக் காரணம் பைல் மைக்ரோசாப்ட் தளத்தில் இல்லை என்பதல்ல. உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கும் ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர், இந்த அப்டேட் பைலைத் தடுக்கிறது. இதற்கான தீர்வு குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறுகையில், அப்டேட் செய்திடுகையில், ஆண்ட்டி வைரஸ் இயக்கத்தினை தற்காலிகமாக நிறுத்தச் சொல்கிறது.
இதனால், நம் கம்ப்யூட்டர், வைரஸ்களினால் தாக்கப்படும் நிகழ்வு ஏற்படலாம்.
ஆனால், விண்டோஸ் அப்டேட்டுக்குத் தேவையான பைல்கள் இன்றி இருப்பதுவும் ஆபத்துதானே. இருப்பினும் முழுமையான முன்னெச்சரிக்கை வேண்டும் என்றால், ஆண்ட்டி வைரஸ் தொகுப்பின் இயக்கத்தை முடக்கி, இணையத்திலிருந்து பைல்களை டவுண்லோட் செய்திட முயற்சிக்கையில், அனைத்திற்குமாக ஒரு பேக் அப் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.
கூடவே ஒரு ரெஸ்டோர் பாய்ண்ட்டையும் உருவாக்கி வைத்துக் கொள்ளலாம். இதனால் விண்டோஸ் அப்டேட் செய்திடுகையில் வைரஸ் நுழைந்து, இயக்கம் முடங்கிப் போனால், ரெஸ்டோர் பாய்ண்ட் மற்றும் பேக் அப் பைலைப் பயன்படுத்தி இயக்கத்தினை பழைய நிலைக்குக் கொண்டு வரலாம்.
இது குறித்து மேலதிகத் தகவல்கள் வேண்டுவோர் http://support.microsoft.com/kb/883825 என்ற முகவரியில் உள்ள மைக்ரோசாப்ட் தளத்தினை அணுகவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக