அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 27 நவம்பர், 2013

எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் வாட்டர் மார்க்

வேர்ட் டாகுமெண்ட் தயாரிக்கும்போது வாட்டர் மார்க் உருவாக்க முடிகிறது. ஆனால் எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் இதனை எப்படி அமைப்பது?

எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் வாட்டர் மார்க் ஒன்றினை ஏற்படுத்தி, அதனை அச்சில் கொண்டு வருவதற்கான வசதி இல்லை. ஆனால் சுற்று வழி ஒன்றில் கொண்டு வரலாம்.
சிலர் Format | Sheet | Background என்று சென்று வாட்டர்மார்க் கொண்டு வருகின்றனர்.

ஆனால் இது உங்கள் எக்ஸெல் ஒர்க்ஷீட்டின் பின்புறம் கிராபிக் ஒன்றை ஏற்படுத்தும். இது பிரிண்ட் பிரிவியூவில் தெரியாது. அச்சிலும் வராது. இதற்கு ஒரே வழி வேர்ட் தொகுப்பில் உள்ள வேர்ட் ஆர்ட் வழியாக வாட்டர்மார்க் ஒன்றை உருவாக்கலாம்.

இதன் கலரை Semi Transparent என அமைத்து, லைட் கிரே பில் கொடுத்து அந்த கிராபிக்ஸை, தேவைப்படும் எக்ஸெல் ஒர்க்ஷீட்டின் ஒவ்வொரு பக்கத்திலும் எடுத்து ஒட்டலாம்.

ஆனால் இது சிறிது நேரம் எடுக்கும் செயல்.

சில பிரிண்டர்கள் இது போல வாட்டர்மார்க்கினை ஏற்படுத்தும் வசதிகளைக் கொண்டுள்ளன.

எச்.பி. 5550 லேசர் ஜெட் பிரிண்டரில் இந்த வசதி உள்ளது.

பிரிண்ட் டயலாக் பாக்ஸில், ப்ராப்பர்ட்டீஸ் கிளிக் செய்து அதில் கிடைக்கும் டேப்களில் ஒன்றில் இந்த வசதி தரப்பட்டிருப்பதைக் காணலாம்.

இன்னொரு வழி, உங்களுக்குப் பழக்கமான இமேஜ் எடிட்டிங் சாப்ட்வேர் மூலம் வாட்டர்மார்க் ஒன்றைத் தயார் செய்து, எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் ஹெடரில் ஒட்டி அமைக்கலாம்.

நேரடியாக வேண்டும் என்றால், இதற்கென கிடைக்கும் சில சாப்ட்வேர் புரோகிராம்களைப் பயன்படுத்தலாம்.

http://www.fineprint.com என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் என்ற சாப்ட்வேர் கிடைக்கிறது.

இந்த சாப்ட்வேர் எக்ஸெல் ஒர்க்ஷீட்டிற்கான வாட்டர் மார்க் உருவாக்கப் பயன்படுகிறது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக