அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 25 நவம்பர், 2013

விண்டோஸ் சிஸ்டங்களில் தேடல் சொற்களை சேவ் செய்து வைத்துப் பயன்படுத்த முடியுமா?

விண்டோஸ் 7ல் நாம் பயன்படுத்தும் எந்த தேடல் சொற்களையும் (search string) சேவ் செய்து, பின்னர் மீண்டும் பயன்படுத்தலாம். எனவே ஒரே தேடல் சொற்களை மீண்டும் மீண்டும் டைப் செய்து உள்ளீடு செய்ய வேண்டியதில்லை. கீழ்க்கண்டபடி இதற்கு செயல்பட வேண்டும்.

முதலில் Windows Explorer திறக்கவும்.

இதற்கு Start>Computer பயன்படுத்தலாம். அல்லது Windows Explorer என ஸ்டார்ட் பட்டன் மேலாக உள்ள சர்ச் பாக்ஸில் டைப் செய்திடலாம்.

இப்போது கிடைக்கும் விண்டோஸ் எக்ஸ்புளோரர் விண்டோவின் மேல் வலது மூலைப் பகுதியில் ஒரு சிறிய தேடல் கட்டம் கிடைக்கும்.

இதில் நீங்கள் டைப் செய்வதற்கான வசதி கிடைக்கும். இதில் நீங்கள் தேட விரும்பும் சொல்லை டைப் செய்திடவும்.

எடுத்துக்காட்டாக, என் கம்ப்யூட்டர் ட்ரைவில் உள்ள ஜேபெக் பட பைல்களைத் தேடி அறிய jpeg என டைப் செய்தேன்.

இதற்கான முடிவுகள் பாப் ஆகி எழுந்து வந்த பின்னர், Save search பட்டனில் கிளிக் செய்திடவும்.

இது விண்டோஸ் எக்ஸ்புளோரரில் இடதுபுறம் இருக்கும்.

இப்போது இன்னொரு விண்டோ எழுந்து உங்கள் தேடலை எந்த பெயரில் சேவ் செய்திட என்று கேட்கும். பெயரினைக் கொடுத்து Save பட்டனை கிளிக் செய்திட்டால், இது சேவ் செய்யப்படும்.

நீங்கள் இது போல சேவ் செய்தவை எல்லாம் விண்டோஸ் எக்ஸ்புளோரரின் இடது புறமாக உள்ள Favorites பிரிவில் இருக்கும்.

அதில் கிளிக் செய்து, முன்பு சேவ் செய்த சொற்களைக் காணலாம். அதில் தேவையானதைத் தேர்ந்தெடுத்தால், தானாகவே தேடல் வேலை தொடங்கி உங்களுக்கு முடிவுகள் காட்டப்படும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக