அடோப் போட்டோஷாப் இன்ஸ்டால் செய்த பின்னர், டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில், நியூ என்பதைத் தேர்ந்தெடுத்தால், புதிய விண்டோஸ் பிட் மேப் இமேஜ் அமைப்பதற்கான ஆப்ஷன் கிடைக்கவில்லை. இது ஏன்?
அதிர்ஷ்ட வசமாக, இதற்கான தீர்வு மிக எளிதான ஒன்றுதான். முதலில் இந்த பிரச்னையின் வேரை ஆய்வு செய்திடலாம். நாம் அடோப் போட்டோ ஷாப் புரோகிராமினை இன்ஸ்டால் செய்கையில், மாறா நிலையில், அது சில பைல்களைத் தான் மட்டுமே திறக்கும் வகையில் செட் செய்கிறது.
அவற்றில் பி.எம்.பி. பைல் வகையும் ஒன்று. எனவே, அடோப் போட்டோ ஷாப் பதிக்கப்படும் முன்னர், மைக்ரோசாப்ட் வழங்கும் பெயிண்ட் புரோகிராமில் பி.எம்.பி. பைல்கள் திறக்கப்பட்டு வந்தன.
அடோப் போட்டோ ஷாப் புரோகிராம் அந்த வகை பைலைத் தன் வசம் எடுத்துக் கொண்டதனால், அதற்கான ஆப்ஷன், 'new BMP file' டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் மெனுவில் கிடைக்கவில்லை.
இதனை மீண்டும் பெற வேண்டும் எனில், போட்டோ ஷாப் புரோகிராமினை. பி.எம்.பி. வகை பைல் தொடர்பில் இருந்து நீக்க வேண்டும். மீண்டும் அதனை எம்.எஸ்.பெயிண்ட் புரோகிராமுடன் இணைக்க வேண்டும்.
இதனை மேற்கொள்ள, அடோப் போட்டோ ஷாப் புரோகிராமுடன் வரும் Adobe Bridge என்னும் அப்ளிகேஷனைப் பயன்படுத்த வேண்டும். இதனை இயக்கி, Edit > Preference செல்லவும்.
இப்போது காணப்படும் டயலாக் பாக்ஸில் 'File Type Associations' என்ற ஆப்ஷனைத் தேடிக் காணவும். இப்போது வலது புறம் காணப்படும் பிரிவில், பல பைல் வகைகள் காட்டப்படும்.
இங்கு 'Bitmap' என்னும் ஆப்ஷனைக் காணவும்.
இதன் அருகே காணப்படும் கீழ்விரி மெனுவினைப் பயன்படுத்தி, பிட்மேப் பைலினை, மீண்டும் எம்.எஸ். பெயிண்ட் புரோகிராமுடன் இணைக்கவும். இதனைச் செய்து முடித்துவிட்டால், திரையில் ரைட் கிளிக் செய்து, மெனு பெற்று, அதில் நியூ என்ற பிரிவில் பி.எம்.பி. பைல் வகையில் கிளிக் செய்து, பைலை உருவாக்கலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக