அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 27 நவம்பர், 2013

நோட்பேட், வேர்ட் பேட் இரண்டும் ஒன்றுதானா?

இரண்டும் வெவ்வேறு எடிட்டிங் சாப்ட்வேர் புரோகிராம்கள்.
நோட்பேட் என்பது அனைத்து விண்டோஸ் சிஸ்டங்களிலும் இணைக்கப்பட்டு தரப்படும் ஒரு எளிய டெக்ஸ்ட் எடிட்டிங் புரோகிராம் ஆகும். இதில் TXT என முடியும் டெக்ஸ்ட் பைல்களை எடிட் செய்திடலாம்.

இதன் ஐகான் மடித்து வைக்கப்பட்ட பேப்பரில் சில வரிகள் எழுதப்பட்டவையாகக் காட்சி அளிக்கும். நோட்பேடில் அனைத்து வகையான பாண்ட்களையும் கையாள முடியாது.

அதே போல பார்மட்டிங் பணிகளையும் மேற்கொள்ள முடியாது. மிக எளிதான சில நோட்ஸ் வரிகளை எழுதி வைக்க முடியும்.

நோட்பேடிலிருந்து சற்று மேம்படுத்தப்பட்ட வேர்ட் ப்ராசசராக வேர்ட் பேட் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் வேர்ட் ப்ராசசர் அளவிற்கு, டெக்ஸ்ட் இதிலும் அமைக்க முடியாது. இந்த
இரண்டும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வாங்கினால் மட்டுமே கிடைக்கும்.

ஓப்பன் ஆபீஸ் டாட் ஓ.ஆர்.ஜி. (Open Office.org) என்ற இலவச வேர்ட் ப்ராசசிங் புரோகிராம் இலவசமாக நமக்குக் கிடைக்கும் ஒரு நல்ல அப்ளிகேஷன் புரோகிராம் ஆகும்.

வேர்ட் புரோகிராமில் மேலே சொன்னவை கிடைக்காத போது, அனைத்து வசதிகளையும் பெற, இதனைப் பயன்படுத்தலாம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக