அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 25 நவம்பர், 2013

பைல்களை ஒரு கம்ப்யூட்டரிலிருந்து இன்னுமொரு கம்ப்யூட்டருக்கு மாற்ற..

பைல்களை ஒரு கம்ப்யூட்டரிலிருந்து இன்னுமொரு கம்ப்யூட்டருக்கு மாற்றுவதற்கு, எக்ஸ்டர்னல் போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவ் அவசியம் தேவையா?

பைல்களை மாற்ற கட்டாயம் எக்ஸ்டர்னல் போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவ்தான் தேவை என்பதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக, ஒரு ப்ளாஷ் ட்ரைவ் கொண்டு, புதிய கம்ப்யூட்டருக்கு பைல்களை மாற்றிக் கொள்ளலாம்.

முதலில்,கம்ப்யூட்டரில் உள்ள டூப்ளிகேட் பைல்களைக் கண்டறிந்து நீக்குங்கள்.

மாற்ற வேண்டிய அவசிய, முக்கிய பைல்களை ஒதுக்கித் தயாராய் வைக்கவும். பின்னர், ப்ளாஷ் ட்ரைவ் மூலம் மாற்றுங்கள்.

மிகப் பெரிய அளவில் பைல்கள் இருப்பின், Targus Transfer Cable என்ற பெயரில் சாப்ட்வேர் இணைந்த ஹார்ட்வேர் கேபிள் ஒன்று கிடைக்கிறது. இதன் மூலம் ஒரே நகர்த்தலில், பைல்களை மாற்றிவிடலாம்.

அடுத்த தீர்வு க்ளவ்ட் ஸ்டோரேஜ். பல இணைய தளங்கள், பைல்களை சேவ் செய்து வைக்க, க்ளவுட் ஸ்டோரேஜ் எனப்படும் இணைய தள சேவைகளைத் தருகின்றன.
ஸ்கை ட்ரைவ், ட்ராப் பாக்ஸ் போன்ற இந்த சேவைகளைப் பயன்படுத்தி, கம்ப்யூட்டரில் உள்ள பைல்களை அதில் தேக்குங்கள்.

பின்னர், மற்ற கம்ப்யூட்டர் வழியாக, அவற்றை டவுண்லோட் செய்து பதிந்து கொள்ளுங்கள். கட்டணம் வாங்கிக் கொண்டு இந்த சேவையைத் தரும் சில தளங்களும் உள்ளன.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக