அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வியாழன், 28 நவம்பர், 2013

தனது கல்லறையில் ஏறி நின்று தான் உயிருடன் இருப்பதை அறிவித்த மகன்

எவ­ருக்கும் அறி­விக்­காமல் வீட்டை விட்டு வெளி­யே­றிய மக­னொ­ருவர் இரு வரு­டங்கள் கழித்து வீடு திரும்­பி­ய­போது, தனது கல்­ல­றைக்கு தனது பெற்றோர் பூங்­கொத்து வைத்துக் கொண்­டி­ருப்­பதைக் கண்டு அதிர்ச்­சி­ய­டைந்த சம்­பவம் போலந்தில் இடம்பெற்­றுள்­ளது.

சியட்­லிஸ்கா நகரைச் சேர்ந்த ஜரோஸ்லாவ் கரோ­லின்ஸ்கி (38 வயது) என்ற மேற்­படி நபர் 2011 ஆம் ஆண்டு வீட்டை விட்டு வெளி­யே­றினார்.

இந் நிலையில் கடந்த வாரம் மனம் மாறி வீடு திரும்­பிய ஜரோஸ்லாவ், தனது கல்­ல­றைக்கு பெற்றோர் பூங்­கொத்து வைத்து அஞ்­சலி செலுத்­து­வதைக் காண நேர்ந்­துள்­ளது.

இந்­நி­லையில் தனது கல்­ல­றையில் ஏறிய ஜரோஸ்லாவ், ''ஹலோ அம்மா, அப்பா, நான் திரும்பி வந்­து­விட்டேன்" எனத் தெரி­விக்­கவும் அதிர்ச்­சிக்­குள்­ளா­கிய அவ­ரது தாயார் மயங்கி விழுந்­துள்­ளார்.

உக்­ரே­னிய எல்­லைக்கு அருகில் காட்டில் பொலி­ஸாரால் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட சடலம் தமது மக­னு­டை­யது என பெற்றோர் தவ­று­த­லாக கரு­தியே அதனை நல்­ல­டக்கம் செய்­தி­ருந்­தனர்.

மகன் உயி­ருடன் திரும்­பி­யதால் பெற்றோர் பெரிதும் மகிழ்ச்­சி­ய­டைந்­துள்­ளனர்.

மகன் எதற்­காக வீட்­டை­விட்டு வெளி­யே­றினார் என்­பது தொடர்பில் தகவல் எதுவும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக