அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 25 நவம்பர், 2013

டாகுமெண்ட் ஒன்றை வேர்டில் தயாரிக்கையில், அது உருவான நாளை எப்படி நாம் என்றும் காணும்படி அமைக்க

ஏனென்றால், எப்போது ஒரு டாகுமெண்ட் உருவானது என்று அறிந்தால், அதற்கேற்ப, அதில் அடங்கிய தகவல்களை எடுத்துக் கொள்ளலாம்; அதில் மாற்றங்களை ஏற்படுத்தலாம். இந்த வசதியை ஏற்படுத்த, குறிப்பிட்ட டாகுமெண்ட்டைத் திறந்து கொள்ளுங்கள்.

பின் Insert மெனு கிளிக் செய்து அதில் Field என்பதைத் தேர்ந்தெடுங்கள்.

இப்போது Field டயலாக் பாக்ஸ் காட்டப்படும்.

இதில் Field Names என்று ஒரு பெட்டி இருக்கும்.

இதில் ஸ்குரோல் செய்து கீழாகச் செல்லுங்கள். அங்கு Create a Date என்று ஒரு பீல்டு காட்டப்படும்.

இதனைத் தேர்வு செய்தால் உடன் எந்த பார்மட்டில் தேதி காட்டப்பட வேண்டும் என்பதனைத் தேர்வு செய்திட பல பார்மட்கள் வரிசையாகக் காட்டப்படும்.

இதில் கிழமையுடன் கூடிய தேதி பார்மட்டும் இருக்கும்.

நீங்கள் விரும்பும் பார்மட்டினைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்தால், அந்த டாகுமெண்ட் உருவாக்கபப்ட்ட முதல் நாள், டாகுமெண்ட்டில் கர்சர் உள்ள இடத்தில் சேர்க்கப்படும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக