அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 25 நவம்பர், 2013

Host Protected Area என்றால் என்ன?

ஹார்ட் டிஸ்க்கில், ஸ்பெஷலாகப் பார்மட் செய்யப்பட்டு, ஆப்பரேட்டிங் சிஸ்டம் வழி சென்றால், தெரியாத வகையில் அமைக்கப்படும் இடமே Host Protected Area ஆகும். இந்த இடத்தினை, பயாஸ் (BIOS) மெனு மூலமே அணுக முடியும். இந்த இடத்தைப் பல செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தலாம். 

ரகசியத் தகவல்களைப் பதிந்து வைக்கலாம்.

திருடப்படும் லேப்டாப் கம்ப்யூட்டர்களைக் கண்டறிய தேவையான சாப்ட்வேர் புரோகிராம்களைப் பதிந்து வைக்கலாம்.

கம்ப்யூட்டர்களைத் தயாரிப்பவர்கள், அவர்கள் பயன்படுத்தத் தேவையான புரோகிராம்களை இதில் அமைத்துக் கொடுக்கலாம்.

ஆனால், பெரும்பாலும், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் முடங்கிப் போகையில், தேவைப்படும் ரெகவரி சாப்ட்வேர் புரோகிராம்களே இதில் பதியப்படுகின்றன.

இப்போது கம்ப்யூட்டர் விற்பனை செய்பவர்கள், ஆப்பரேட்டிங் சிஸ்டம் மீண்டும் இன்ஸ்டால் செய்வதற்கான சிடிக்களை எல்லாம் தருவதில்லை. அதற்குப் பதிலாக, இந்த இடத்தில் தேவையான ரெகவரி சாப்ட்வேர் புரோகிராம்களை அமைத்துத் தருகின்றனர்.

இந்த புரோகிராம்களை, பயாஸ் மெனு மூலம் பெற்று பயன்படுத்தலாம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக