அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 25 நவம்பர், 2013

ஸ்மார்ட் (SMART) என்பது என்ன அளவையைக் குறிக்கிறது?

ஸ்மார்ட் என்பது, Self Monitoring, Analysis, and Reporting Technology என்பதன் சுருக்கமாகும். புதிய ஹார்ட் ட்ரைவ்களில் இணைந்தே கிடைக்கும் ஒரு மானிட்டரிங் சிஸ்டமாகும். ஹார்ட் ட்ரைவின் தன்மை குறித்த பல விஷயங்களைக் கண்காணித்து, அவற்றின் தன்மை நிலை குறித்து அறிவிக்கும் சிஸ்டம் இது.

பொதுவாக ட்ரைவ் தன் செயல் தன்மையை இழக்கும் பொழுது, எந்த விஷயத்தில் பிழை ஏற்படுகிறது என்று காட்டும். ட்ரைவில் உள்ள டேட்டாவினைப் படிப்பதில், சுழலும் வேகம் குறைதல், திருத்த முடியாத பழுதுள்ள செக்டார் ஏற்படுதல் போன்ற பல விஷயங்களை இந்த மானிட்டர் சிஸ்டம் கண்டறிந்து, ட்ரைவ் செயல் இழக்கப் போவதனை முன் கூட்டியே சொல்லும். பலர் இந்த சிஸ்டம் செயல்படும் தன்மை குறித்து நம்பிக்கை இழந்தனர். ஆனால், கூகுள் நிறுவனம் பல்லாயிரக்கணக்கான ட்ரைவ்களில் இந்த மானிட்டரிங் சிஸ்டத்தின் செயல் தன்மையை சோதனை செய்து, இது நம்பிக்கை தரும் நல்ல சிஸ்டம் தான் என்று கூறியுள்ளது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக