அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வெள்ளி, 27 டிசம்பர், 2013

உண்மைய சொன்னேன் ..

1.ஆஃபீஸ்ல மேனேஜர் லீவு போட்டா நமக்கு வர்ற சந்தோஷம் இருக்கே நாமலே லீவு போட்டா கூட வராது..

2.வேலை தேடுவதை போல் கடினமான வேலை வேறேதும் இல்லை...

3.என்ன தான் நிழல் தந்தாலும் அசைந்து காற்று தராது காங்க்ரீட் சுவர்கள் ..

4.இரு அம்மாகிட்ட சொல்றேன் என்பது பீதிய கெளப்பும் வாசகம் குழந்தைகளுக்கும், அதிமுக எம்.எல்.ஏ களுக்கும்..

5.குடிக்கப்பட்டு கீழே விழுந்துகிடக்கும் பாட்டிலுக்கான மரியாதை கூட, குடித்துவிட்டு கீழே கிடபவனுக்கு கிடைப்பதில்லை..

6.அரிசிக் கஞ்சி குடிச்சா ஏழை , ஓட்ஸ் கஞ்சி குடிச்சா பணக்காரன்...

7.குடித்துவிட்டு ரோட்டில் விழுந்து கிடக்கும் ஒவ்வொரு ஆணுக்கு பின்னாலும், நிச்சயம் ஒரு பெண் இருப்பாள்....

8.அம்மா உணவகங்களால் பாதிப்பு சரவணபவனுக்கோ வஸந்தபவனுக்கோ அல்ல...ரோட்டோர கையேந்தி பவன்களுக்கு தான்...

9.வெளுத்ததெல்லாம் பாலா இருக்கணும்னு அவசியம் இல்ல பால்டாயிலாவும் இருக்கலாம் ..

10.பொண்ணுங்ககிட்ட ஃப்ரெண்ட்ஸாக ஈசியான வழி, "ஐ லவ் யூ" சொல்வதுதான். சொன்ன உடனே, "லவ் பண்ண முடியாது. நாம ப்ரண்ட்ஸா இருந்துடலாம்"னு சொல்லிடறாங்க...

@ களவாணி பய
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக