அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 4 டிசம்பர், 2013

சர்க்கரை நோய் இருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கான சில டிப்ஸ்...

கர்ப்பகாலம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கும். இந்த காலத்தில் ஒரு பெண் தனது உடல் நிலையை பராமரிப்பதோடு மட்டுமல்லாமல் தனது வயற்றில் வளரும் சிசுவையும் சேர்த்து பராமரிக்க வேண்டும். இந்த கர்ப்பகாலங்களில் உங்களுக்கு பலவகை நோய்களால் பாதிப்பு ஏற்படக்கூடும். அதனால், மிகுந்த கவனத்துடன் இருந்து உங்கள் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும்.

உங்களுக்கு சர்க்கரை நோய் இருந்தால், உங்கள் கர்ப்பகாலம் சற்று சிக்கலாகத்தான் இருக்கும். உங்களுக்கு கர்ப்பகாலத்தில் சர்க்கரை நோய் வந்திருந்தால், உங்கள் இரத்தத்தில் உள்ள க்ளுகோஸ் அளவை கட்டுபடுத்துதல் தான் சிறந்த கர்ப்பகால டிப்ஸ் ஆகும்.

கர்ப்பகால சர்க்கரை நோய் உங்கள் ஆரோக்கியத்தை பாதிப்பது மட்டுமல்லாது உங்கள் வயற்றில் வளரும் சிசுவின் வளர்ச்சியையும் செயல்பாட்டையும் பாதிக்கக்கூடும். உங்கள் இரத்தத்தில் உள்ள க்ளுகோஸ் அளவை கட்டுக்குள் வைப்பது என்பது மிகவும் கடினமான ஒன்றாகிவிடும். இதனை செய்தால் கருச்சிதைவு, குறைபிரசவம், பிறப்பு குறைபாடு, அதிக வளர்ச்சி மற்றும் பிற பிரச்சனைகளை குறைக்கச் செய்யும்.

கர்ப்பகால தொடக்கத்திலேயே சர்க்கரை நோயை கண்டறிவது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஏன்னெனில், இந்த சமயத்தில் தான் சிசுவின் இதயம், மூளை, கல்லீரல், நுரையீரல், போன்றவரை வளரத் தொடங்கும். இந்த நேரங்களில் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தால் அது பிறப்பு குறைபாடுகள் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கும்.

கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் வருவதால் அது அவர்களின் மனவளம் மற்றும் உடல்வளம் இரண்டையுமே பாதிக்கக்கூடும். இந்த வழிகள் உங்களுக்கு சிறந்த முறையில் உதவி புரியும். சர்க்கரை நோயுள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கான டிப்ஸ்களை இப்பொழுது படிக்கலாம். இது உங்களுக்கு ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான பிரசவத்தை அளிக்கும்.

இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பது


கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், உங்கள் இரத்தத்தின் க்ளுகோஸ் அளவை அடிக்கடி பரிசோதிப்பது மிகவும் அவசியமானதாகும். அதனை கட்டுக்குள் வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு ஆரோக்கியமான உடல்வளத்தை பெறுங்கள்.

உடற்பயிற்சி


கர்ப்பமாக இருக்கும் போது அதிகமான அல்லது கடினமான உடற்பயிற்சியை மேற்கொள்ள கூடாது. ஆனால், நீங்கள் சர்க்கரை நோயுள்ள கர்ப்பிணிப்பெண்ணாக இருந்தால், சிறிது நேர நடைபயிற்சி , எளிமையான உடற்பயிற்சிகள் போன்றவற்றை கண்டிப்பாக செய்யா வேண்டும்.

மருத்துவ பரிசோதனைகளை தவிர்க்க கூடாது


வழக்கமான பரிசோதனைகளுக்கு நீங்கள் கண்டிப்பாக செல்ல வேண்டும். இது உங்கள் கர்ப்பகால சர்க்கரை நோயை கண்காணிக்க உதவும். நீங்கள் சர்க்கரை நோயுள்ள கர்ப்பிணிப் பெண்ணாக இருப்பதால், உங்கள் இரத்தத்தில் உள்ள க்ளுகோஸ் அளவை பரிசோதிக்க இரத்த மற்றும் சிறுநீர் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறை


ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்பது நீங்கள் வாழும் வாழ்க்கையையும், வாழ்க்கை முறையையும் குறிக்கின்றது. ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்ளுதல் மற்றும் உடற்பயிற்சி செய்தல் போன்றவை கர்ப்பகாலத்தில் நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமானவற்றுள் சிலவாகும். உங்கள் வாழ்கையை நேர்மறையான நோக்குடன் பார்க்க வேண்டும். இது உங்கள் வாழ்வில் நேர்மையான மாற்றங்களை உருவாக்க உதவும்.

ஜங்க் உணவுகளை தவிர்த்தல்


கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவுப் ழக்கம் தாய்க்கும் சேய்க்கும் சிறந்த உடல்வளத்தை அளிக்கும். அதிக சர்க்கரை உள்ள பதப்படுத்தப்பட்ட உணவுகள் அல்லது டின்னில் இருக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும். சர்க்கரை நோயுள்ள கர்ப்பிணிப் பெண்கள் ஜங்க் உணவுகளை தவிர்ப்பது ஆரோக்கியமான கர்ப்ப கால டிப்ஸ்களில் ஒன்றாகும்.

ஆரோக்கியமான டயட்


கர்ப்ப காலங்களில் ஆரோக்கியமான டயட்டை பின்பற்றுவது என்பது சர்க்கரை நோயை கட்டுபடுத்த உதவும் சிறந்த டிப்ஸ் ஆகும். நீங்கள் சர்க்கரை நோயுள்ள கர்ப்பிணிப்பெண் என்றால், அதிக சர்க்கரை அடங்கிய உணவு வகைகளை தவிர்க்க வேண்டும்.

யோகா


உடலையும் மனதையும் சமமாக வைப்பதற்கு யோகா மற்றும் தியானப்பயிற்சி இவையிரண்டும் சிறந்த வழிகளாகும். இது உங்கள் ஹார்மோன்களை சமநிலையில் வைக்க உதவும். நீங்கள் சர்க்கரை நோயுள்ள கர்ப்பிணிப்பெண் என்றால், பிரசவத்திற்கு முன் கற்றுக்கொடுக்கப்படும் யோகா பயிற்சிகளுக்கு செல்லலாம்.

ஓய்வு


கர்ப்ப காலத்தில் வந்துள்ள சர்க்கரை நோயால் மன உளைச்சலுக்கு ஆளாக வேண்டாம். இதனை ஒரு சவாலாக கருதி அதனை கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்கள்.நீங்கள் சர்க்கரை நோயுள்ள கர்ப்பிணிப்பெண்ணாக இருப்பதால், அதிக மனஅழுத்தங்களுக்கும் மன இறுக்கத்திற்கும் ஆளாகக் கூடாது.

பதிவுகள்


இது கர்ப்ப கால டிப்ஸ்களில் சிறந்த ஒன்றாகும். ஒவ்வொரு முறை நீங்கள் இரத்த சர்க்கரை அளவை பரிசோதிக்கும் போது அதனை பதிவு செய்து வைக்க வேண்டும். இது உங்கள் டாக்டருக்கு உங்களுக்கு சரியான சிகிச்சையை அளிக்க உதவி புரியும்.

மருத்துவ ஆலோசனை


உங்களுக்கு கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் இருப்பது கண்டறியப்பட்டால், உங்கள் மருத்துவரின் அறிவுறுத்தல்களை ஏற்று நடக்க வேண்டும். நீங்களாகவே மருந்துகளை உட்கொள்ளக்கூடாது ஏன்னெனில் அது உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் பாதுகாப்பானது அல்ல.


Thatstamil
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக