அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வியாழன், 26 டிசம்பர், 2013

வேர்ட் டிப்ஸ் - டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்க, செல்களுக்கிடையே இடைவெளி, ஷார்ட் கட் கீகள்

டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்க:

வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில், மவுஸ் கிளிக் செய்து அப்படியே இழுத்தால், அந்த டெக்ஸ்ட் தேர்ந்தெடுக்கப்பட்டு கிடைக்கும் என்பது நமக்குத் தெரியும். இன்னொரு வழியும் உள்ளது. மவுஸ் கர்சரை, தேர்ந்தெடுக்கப்பட இருக்கும் டெக்ஸ்ட்டின் தொடக்கத்தில் வைக்கவும். பின்னர், எந்த இடம் வரை தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமோ, அந்த இடத்தில் மவுஸின் இடது பக்கத்தைக் கிளிக் செய்திடவும். இவ்வாறு கிளிக் செய்கையில், ஷிப்ட் கீயினை அழுத்தினால், டெக்ஸ்ட் முழுவதும் தேர்ந்தெடுக்கப்படும்.

செல்களுக்கிடையே இடைவெளி:

வேர்டில் டேபிளை அமைத்த பின்னர், அதன் தோற்றத்தினையும், பயன்பாட்டினையும் கூடுதல் சிறப்புடன் அமைக்க, சில வேலைகளை மேற்கொள்ளும் வசதிகள் உள்ளன. செல்கள் இடையே இடைவெளி அமைத்திடும் வழியை இங்கு காண்போம்.

பொதுவாக டேபிள் ஒன்றை உருவாக்குகையில், செல்களுக்கிடையே இடைவெளி எதுவும் ஏற்படுத்தப்பட மாட்டாது. செல்களைப் பிரிக்கும் கட்ட கோடு மட்டுமே காட்டப்படும். இதனையும் வேண்டாம் என்றால், மறைத்துவிடலாம். செல்களுக்கிடையே இடைவெளியை ஏற்படுத்த நாம் அதனுடன் வரும் டேபிள் எடிட்டரைப் பயன்படுத்த வேண்டும்.

1. முதலில் வடிவத்தினை மாற்ற எண்ணும் டேபிளில் எங்கேனும் ரைட் கிளிக் செய்திடவும். வேர்ட் Context மெனுவினைக் காட்டும்.

2.இந்த மெனுவில் Table Properties என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் உடனே, Table Properties டயலாக் பாக்ஸைக் காட்டும்.

3. இதில் Table டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும்.

4. இந்த டயலாக் பாக்ஸின் கீழாக உள்ள Options என்ற பட்டனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Table Options டயலாக் பாக்ஸைக் காட்டும்.

5. இதில் Allow Spacing Between Cells என்ற செக் பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும்.

6. இந்த செக் பாக்ஸின் வலது பக்கம், செல்களுக்கிடையே எவ்வளவு இடம் விடப்பட வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

7. அடுத்து Table Options டயலாக் பாக்ஸை மூட ஓகே கிளிக் செய்திடவும்.

8. பின்னர், Table Properties டயலாக் பாக்ஸை மூடுவதற்கான ஓகே பட்டனைக் கிளிக் செய்திடவும்.

வேர்டில் ஷார்ட் கட் கீகள்:

Shift + F3: தேர்ந்தெடுத்த சொல்லை சிறிய எழுத்து, முதல் எழுத்து மட்டும் பெரிய எழுத்து மற்றும் அனைத்தும் பெரிய எழுத்து என மாற்றி மாற்றி அமைத்திடும்.

F4: இறுதியாக நீங்கள் மேற்கொண்ட செயல்பாட்டினைத் திரும்பச் செயல்படுத்தும். இது தேடுதல், டைப்பிங், பார்மட்டிங், கலரிங் என எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம்.

Shift + F4: இறுதியாகக் கொடுத்த Find கட்டளையை மீண்டும் செயல்படுத்தும்.

Shift + F5: டாகுமெண்ட்டில் இறுதியாக நீங்கள் எடிட் செய்த இடத்திற்த் தாவிச் செல்லும். தொடர்ந்து அப்படியே மூன்று அல்லது நான்கு எடிட் செய்த இடங்களுக்குச் செல்லும்.

Ctrl + F6: வேர்ட் விண்டோக்களுக்கு இடையே தாவிச் செல்லும்.

Alt + F6: டாகுமெண்ட் மற்றும் டயலாக் பாக்ஸ்களுக்கு (பைண்ட் டயலாக் பாக்ஸ்) இடையே தாவிச் செல்லும்.

F7: ஸ்பெல் செக்கரை இயக்கும்.

Shift + F7: தெசாரஸை இயக்கும்.

F8: செலக்ஷன் பகுதியை இயக்கும். எதனைத் தேர்ந்தெடுத்திருக்கிறீர்களோ அதன் அளவைப் பெருக்கும். (சொல், வாக்கியம், பாரா அல்லது முழு டாகுமென்ட்)

Alt + click: பக்கத்தில் நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள சொல் சார்ந்த தகவல் கட்டத்தினைத் திறக்கும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக