அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வியாழன், 26 டிசம்பர், 2013

இணைய தளம் ஒன்றை உங்கள் கம்ப்யூட்டரில் முழுமையாக சேவ் செய்ய

நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் பயன்படுத்துவதாக இருந்தால், சேவ் செய்திட விரும்பும் இணையப் பக்கத்தில் இருந்தவாறு, Ctrl + S கொடுக்கவும். இப்போது, "Save Webpage” என்ற பாக்ஸ் கிடைக்கும்.

இங்கு, உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள போல்டர் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, அதில் சேவ் செய்திடக் கட்டளை கொடுக்கலாம்.

பைல் வகையாக "Webpage, complete” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

இது உங்கள் கம்ப்யூட்டர் போல்டரில் இணையதளத்தினை ஒரு பைலாக சேவ் செய்திடும்.

இதனுடன் சார்ந்த இமேஜ், ஸ்கிரிப்ட் பைல்களை ஒரு சிறிய போல்டரில் போட்டு வைக்கும். இந்த பைல்கள் இணைய தளத்தின் பின்னணி சமாச்சாரங்களைக் கொண்டிருக்கும்.

இந்த பைலைக் கிளிக் செய்து, அந்த தளத்தினை எப்போதும், ஒரு பிரவுசரில் இயக்கிப் பெறலாம்.

இந்த போல்டர்களை எப்போதும், ஒரே பிரிவில் வைத்திருக்க வேண்டும்.

இன்னொரு வழியும் உள்ளது. pagenest.com என்ற தளத்தில் உள்ள Pagenest என்னும் அப்ளிகேஷனைப் பயன்படுத்தவும். இதன் மூலம் முழு இணைய தளத்தையும், உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து வைக்கலாம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக