அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 15 டிசம்பர், 2013

அதிர்ஷ்ட பெயர்கள் முழுமையான அதிர்ஷ்டம் தருமா?

இன்­றைய கால கட்டம் பிறக்கும் குழந்­தை­க­ளுக்கும், புதி­தாக அமைக்கும் வியா­பார நிலை­யங்கள் கம்­ப­னிகள் என எதை எடுத்­துக்­கொண்­டாலும் பெயர் சூட்­டு­வ­திலே மிகவும் அதீத அக்­க­றையும் கவ­னமும் கொண்டு செயற்­ப­டு­கின்­றனர். அதிர்ஷ்டப் பெயர் அமைப்­ப­திலே உள்ள கவனம் பெற்­றோர்­க­ளிடம் மிகவும் அதி­க­மாக அமைந்­தி­ருக்­கின்­றது. அதில் தவறு இல்லை. யாரும் தம் பிள்­ளைகள் அதிர்ஷ்­ட­க­ர­மான வாழ்­வினை பெற­வேண்டும் என்­ப­தையே எண்­ணு­வார்கள். அதை எப்­படி அணுகி செயற்­பட வேண்டும் என்­ப­தி­லேதான் சிலர் தடு­மாற்றம் கொள்­கின்­றனர்.



குறிப்­பாக முன்­னைய காலங்­களில் பிறந்த ஜென்ம நட்­சத்­தி­ரத்­திற்கு உரிய நாம எழுத்­துக்கள் இருக்கும். அந்த எழுத்­தின்­படி பெயரை சூட்டி விடு­வார்கள். பெரும்­பாலும் தமது சந்­த­திப்­பெயர் தொடர்பும், தெய்­வீக நாம­முமாய் அந்தப் பெயர் அமைந்­தி­ருக்கும். அதி­க­மான அதிர்ஷ்­டமும் கொடுக்கும். பல­ருக்கு பிறக்கும் நட்­சத்­திர நாம எழுத்துப் பற்­றிய தெளிவு இல்லை.

உதா­ர­ண­மாக “விசாகம்” நட்­சத்­தி­ரத்தில் ஒரு குழந்தை பிறந்தால் அந்தக் குழந்தை எந்தப் பாதத்தில் பிறந்­துள்­ளது என்­பதை கணிப்­பிட வேண்டும். ஒரு நட்­சத்­தி­ரத்­திற்கு நான்கு பாதங்கள் உண்டு. அந்த நான்கு பாதங்­க­ளுக்கும் நட்­சத்­திர நாம எழுத்து உண்டு. விசாகம் 1ஆம், 2ஆம், 3ஆம், 4ஆம் பாதங்­க­ளுக்கு முறையே தி,து,தே,தோ என நான்கு நாம எழுத்­துக்கள் குறிப்­பி­டப்­பட்­டி­ருக்கும்.

இதிலே அந்த பாதத்­திற்கு உரிய நாமமே பெயரில் அமைய வேண்டும். முதல் எழுத்தில் பெயர் எடுப்­பது உங்­க­ளுக்கு சிர­ம­மாக இருந்தால் பெய­ரி­னுள்ளே அந்த எழுத்து அமை­கின்ற நிலையில் பெயர் தெரி­வு­களை அமைத்­துக்­கொள்­ளலாம். இப்­போது உதா­ரணப் பெயர்கள் விசாகம் நட்­சத்­திர நாமப்­பெ­யரே முதல் எழுத்­தாக அமைந்து திவ்யன், துஷ்­யந்தன், தேனுஜன், தோமதன், இவை நாம எழுத்தின் தொடக்­கப்­பெயர். இதையே பிறந்த திக­திக்கு ஏற்ப வைப்­ப­தாயின் உதா­ர­ண­மாக 5ஆம் எண்ணில் குழந்தை பிறந்­தி­ருந்தால் அந்த 5ஆம் எண்­ணிற்கு உரிய ஆங்­கில எழுத்து E, H, N, X என்­பன நந்­திதன், ஈதுஷன், நிதேஷன், கவிதோன் என பெயர் அமைக்­கும்­போது நட்­சத்­திர நாமம் பிறப்பு எண், நாமம் என இரண்­டுமே சிறப்­பாக அமையும் நிலை ஏற்­ப­டு­கின்­றது. இதுவே அதிர்ஷ்­ட­க­ர­மான சிறப்பு தரும்.

அடுத்து பெயர் சூட்­டும்­போது முக்­கி­ய­மாக நாம் கவ­னிக்க வேண்­டி­யவை. எமது கலா­சார விழு­மி­ய­மான சமய, மொழிப்­பற்­றோடு அமைய வேண்டும். இதை­விட ஆதி­கா­லங்­களில் எம்­முன்­னோர்கள் தமது குலப்­பெ­ருமை பறை­சாற்றும் வகையில் பெய­ரோடு ஒட்டி ஐயர், செட்­டியார், தேவர், நாடார், முத­லியார் என்­பதை சேர்த்­துக்­கொள்­வார்கள். இது இன்றும் கிரா­மங்­களில் நடை­மு­றை­யிலே அமைந்­தி­ருக்­கின்­றது.

பொது­வாக அதிர்ஷ்டப் பெயர் என்­பது பிறந்த நட்­சத்­திர நாம எழுத்தும், பிறந்த திகதி எண்ணும் சேர்ந்த நிலையில் அமை­கின்ற போது அதி­க­மான அதிர்ஷ்ட நிலையைக் கொடுக்­கின்­றது. எனவே இந்த இரண்டு விட­யங்­க­ளையும் கவ­னத்தில் கொள்­வ­தோடு நமது சந்­ததி வழி­வந்­த­வர்கள் நாமம், தொடர்ந்து சூட்டி வரு­வதும் மூதா­தையர் ஆசியும் நம் குடும்பப் பெரு­மை­க­ளையும் நிலை நிறுத்தி செயற்­ப­டுத்தும்.

இவற்றை நாம் பெயர் சூட்­டு­கின்ற போது மிகவும் நன்கு கவ­னித்து செயற்­ப­டுத்த வேண்­டி­யது நம் கட­மை­யா­கின்­றது. அதிர்ஷ்­ட­மாக பெயர் சூட்டி வெற்றி வாகை பெற்­ற­வர்கள் பலர் உள்­ளனர். இவர்­களின் பெயர் சிறப்­பு­களை ஆய்வு செய்யும் போது நட்­சத்­திர நாமத்தின் எழுத்து உச்­ச­ரிப்­புகள், பெயர் எண்ணில் கூட்டு எண் ஆதிக்கம், பிறப்பு எண்­ணிலே ஆரம்­ப­மாகும் எழுத்து, நட்­சத்­திர நாம எழுத்து பெயரின் உள்ளே அமை­வது என ஏதோ ஒரு வகையில் பிறந்த நட்­சத்­தி­ரத்­திற்கும் பிறப்பு எண், கூட்டு எண் என்­ப­ன­வற்­றிற்கும் தொடர்பு கொண்­ட­வை­யா­கவே அமை­கின்­றன. அதை விட ஒரு தெய்­வீ­கத்­தன்மை பெய­ரிலே அடங்­கி­யி­ருக்­கின்­றது.

ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் பெயர் அதிர்ஷ்­டமாய் அமைந்­தி­ருக்­கின்­றது. திரை­யு­ல­கிலும், அர­சி­ய­லிலும் வெற்­றிக்­கொடி நாட்­டி­யவர் மக்கள் திலகம், ‘எம்.ஜி.ஆர்’ இவரின் முழுப்­பெயர், எம்.ஜி.ராமச்­சந்­திரன் 17.01.1917ஆம் ஆண்டு பிறந்த இவரின் நட்­சத்­திரம் ‘சுவாதி’ நட்­சத்­திர நாம எழுத்து ‘ரே’, ‘ரோ’ போன்ற எழுத்து பெயர் ஆரம்­பத்­தி­லேயே ‘ராமச்­சந்­திரன்’ என அமை­கின்­றது. பிறப்பு எண் 8, கூட்டு எண் 9, 8ஆம் எண்­ணிற்கு மிகவும் வசி­ய­மான 5ஆம் எண்ணில் M.G.Ramachandran எனும் பெயர் எண் அமை­கின்­றது. அதையே சுருக்கி தனது கூட்டு எண் 9ஆம் எண்­ணிற்கு ஏற்­ற­வாறு M.G.R என அமைத்தார். அள­வில்லா அதிர்ஷ்­டத்தை வாரி வழங்­கி­யது. மூன்­றெ­ழுத்தில் என் மூச்­சி­ருக்கும். அது முடிந்த பின்­னாலும் என் பேச்­சி­ருக்கும் என்­பதை இன்றும் நிரூ­பித்து நெஞ்­சங்­களில் வாழ்­கின்றார். ராம­பி­ரானின் தெய்­வீன நாம­முமாய் இது அமைந்து விட்­டது.

அடுத்து அர­சியல் சாணக்­கி­யனாய் தமிழ் எழுத்­து­லகின் வித்­த­கனாய் இருக்கும் மு.கரு­ணா­நிதி 03.06.1924ஆம் ஆண்டு பிறந்தார். நட்­சத்­திரம் ‘மிரு­க­சீ­ரிடம்’ நாம எழுத்து ‘க’. அதே எழுத்தில் பெயர் ஆரம்­பிக்­கின்­றது. பிறப்பு எண் 3, கூட்டு எண் 7 என அமை­கின்­றது. இவரின் கூட்டு எண்ணின் வசிய எண்­ணா­கிய 2ஆம் எண் எழுத்து “K”யில் கரு­ணா­நிதி, கலைஞர் போன்ற பெயர்கள் அமைந்­தி­ருப்­பது இரட்­டிப்பு அதிர்ஷ்­டமாய் அமையும் நிலையை கொடுத்­தது. இன்றும் அவர் புகழ்­மிக்­க­வராய் மிளிர பெயர் அதிர்ஷ்டம் கொடுத்­தது. கரு­ணா­நிதி சிவனின் திரு­நாமம்.

அடுத்து நடிப்­பு­ல­கிலே தன்­னி­க­ரில்லா புகழ்­பெற்று விளங்­கிய நடிகர் திலகம் “சிவாஜி கணேசன்” 01.10.1927இல் பிறந்தார். உத்­த­ராடம் நட்­சத்­தி­ரத்­திலே பிறந்த இவரின் நிஜப்­பெயர் “சின்­னையா கணேசன்”. இவரின் உத்­த­ராட நட்­சத்­தி­ர ­நாம எழுத்து ஐ.ஜி.சேர்ந்­தது. ‘சிவாஜி’ இவர் உச்­சத்­திற்கு சென்றார். பிறப்பு எண் 1உம், கூட்டு எண் 3உம் என அமைந்த இவ­ருக்கு இவரின் கூட்டு எண் எழுத்­தா­கிய S முதல் எழுத்தாய் அமைந்­தது. இவரின் 'Sivaji Ganesan' பிறப்பு எண் 1இல் பெய­ரென்றும் அமைந்­தது. “கணேசன்” எனும் தெய்­வீ­க­நாமம். இவர் புகழை உல­க­றிய செய்­தது.
24.06.1927 அன்று பிறந்த கவி­ய­ரசு கண்­ண­தாசன் அஸ்­வினி நட்­சத்­தி­ரமும், 6ஆம் எண் பிறப்பு எண்­ணா­கவும் 4ஆம் எண் கூட்டு எண்­ணா­கவும் கொண்­டவர். அஸ்­வினி நட்­சத்­திர நாம எழுத்து “ச” பெய­ருக்குள் அமைந்­தது. பெயரின் கூட்டு எண் 6இல் அமைந்­தது. கூட்டு எண் எழுத்து 'T' பெய­ருக்குள் அமைந்­தது. தமிழ்­நாட்டு அர­சவைக் கவி­ஞராய் புகழின் உச்­சிக்கே சென்றார். ஆண்­மைக்­கு­ர­லுக்கு சொந்­த­மான T.M. செளந்­தர்­ராஜன் 24.03.1923இல் பிறந்தார். மிரு­க­சீ­ரிடம் நட்­சத்­தி­ரமும், பிறப்பு, கூட்டு எண்கள் 6ஆம் எண்­ணா­கவும் அமைந்­தது. நட்­சத்­திர எழுத்து “வு” பெயருள் சேர்ந்­தது. 6ஆம் எண்ணில் W பெயருள் அமைந்­தது. புகழின் உச்ச நிலையை தொட்டார்.

இன்­றைய தமிழ்­நாட்டு முதல்வர் செல்வி ஜெய­ல­லிதா 24.02.1948இல் பிறந்தார். மகம் நட்­சத்­தி­ரமும், பிறப்பு எண் 6உம், கூட்டு எண் 3உம் பெற்றார். நடிக்க வந்த காலம் ‘அம்மு’ என்றே எல்­லோரும் இவரை அழைத்­தனர். இன்று தமிழ் நாட்டில் “அம்மா” என்றே பெயரே நிலைத்து விட்­டது. மகத்­திற்கு உரிய “ம” வரி பெயர் அழைப்­புக்குள் வந்­தது. கூட்டு எண் 3இன் எழுத்து L ஆங்­கில பெய­ருக்குள் அடங்­கி­யது. தெய்­வீகம் நிறைந்த லலிதா நாமம் சேர்ந்­தது.

இன்று தமிழ் நாட்­டையே ஆட்சி நிலை செலுத்தும் அம்­மா­வாகி மிளிர்­கின்றார்.

இப்­ப­டி­யாக பிர­பல்­ய­மா­ன­வர்­களின் அதிர்ஷ்டப் பெயர்­களை ஆய்வு செய்து பார்த்­தோ­மே­யானால் அதில் பல­வித சிறப்­புக்கள் இருக்கும். நட்­சத்­திர நாம எழுத்து, பிறப்பு எண், கூட்டு எண் என்­ப­ன­வற்றின் ஆங்­கில எழுத்து பெய­ருக்­குள்ளே அமை­வது இல்­லையே பெயர் எண்­ணுக்­கு­ரிய கிரஹம் ஜாதக கிரஹ நிலை­யிலே. ஆட்சி உச்சம் பெற்று அமை­வது இல்­லையேல் கேந்­திர திரி­கோ­ணங்­களில் அமை­வது என்­ப­னவே அதிர்ஷ்டப் பெய­ருக்கு அற்­புதம் தரு­கின்­றது.

எனவே பெயர்கள் சூட்­டும்­போது மேற்­ப­டி­யான அம்­சங்கள் சிறப்­பாக அமைந்­தி­ருந்தால் பல­வித மேன்­மை­க­ளையும் அதிர்ஷ்டப் பெயர் தரும். எமது சம­யத்­திற்கும், மொழிக்கும் சம்­பந்­த­மில்­லாமல் வாயில் உச்­ச­ரிக்க முடி­யாத பெயர்­களை “அதிர்ஷ்டப் பெயர்” என சூட்­டு­வதன் மூலம் எவ்வித சிறப்புகளையும் பெற முடியாது.

எமது உறவினர்களின் சந்ததி தொடர்களில் ஏழு சந்ததி பெயர் தெரிந்திருக்க வேண்டும் என்பது சிரார்த்தம் பற்றிய நூல்கள் கூறுகின்றன. அத்தோடு இந்த ஏழு சந்ததியில் உள்ள பெயர்கள் மாறி மாறி நமது பிறக்கும் குழந்தைகளில் ஒருவருக்கு சூட்டி அந்த சந்ததி சிறப்பை பெருமைப்படுத்த வேண்டும்.

மூதாதையர் பெயர்கள் தொடர்ந்து நம் இல்லங்களில் ஒலிப்பதன் மூலம் பலவித பேறுகள் நம் குடும்பத்திற்கு கிடைக்கும். எனவே அதிர்ஷ்ட பெயர்கள் ஆராய்ந்து சூட்டினால் முழுமையான அதிர்ஷ்டம் தரும் என்பதில் ஐயமில்லை.

துன்னையூர் - - கலாநிதி ராம்.தேவலோகேஸ்வர குருக்கள்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக