ஒவ்வொரு மனிதனுக்கும் தனது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளப் பணம் தேவை. அதுவும் இன்றைய வாழ்வியல் முறையில் பணத்தின் தேவை பன்மடங்கு உயர்ந்துள்ளது.அதனாலேயே பணம் ஒரு இன்றியமையாத படைப்பாக திகழ்கிறது.
ஒரு பெற்றோர் அல்லது காப்பாளர் குழந்தைகளுக்கு தரும் பரிசு வாழ்நாள் முழுவதும் பயன்தரக்கூடிய, ஒரு சிறந்த அன்பளிப்பு எதுவென்றால் அது அவர்களுக்கு பணம் குறித்த அறிவைப் புகட்டுவது தான். இன்றைய குழந்தைகளுக்கு பணத்தின் முக்கியத்துவம் தெரிந்த அளவிற்கு அதனை பாதுகாக்க தெரிவதில்லை. அதை உணர்த்துவது பெற்றோர்களின் தலையாய கடமையாகும்.
அவர்கள் வயதினையும் புரிந்துகொள்ளும் திறனையும் பொறுத்து பணம் பற்றிய உங்கள் அறிவாற்றலை அவர்கள் அறிந்துகொள்ளச் செய்யலாம். இது அவர்கள் வாழ்வின் பல கட்டங்களில் உதவும்.
பணத்தின் தேவை!! பணம் பற்றிய அறிவை அவர்களுக்கு புகட்டுவதில் முதற்கட்டமாக பணம் ஏன் தேவைப்படுகிறது? என்று விளக்கினால் அதை அவர்கள் காலப்போக்கில் புரிந்துகொள்வார்கள்.
ஆடம்பர செலவுகள்
பணத்தின் முக்கியத்துவத்தையும் ஆடம்பரங்களை முற்றிலும் ஒதுக்குவதையும் தகுந்த உதாரணங்களோடு குழந்தைகள் மனதில் பதியவைத்தால் அது அவர்கள் மனதில் நன்கு பதியும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
சன்மானம்!!..
பணத்தின் அருமையை புரியவைக்க உதாரணமாக ஒரு நூறு ருபாய் தற்போது இருப்பதை விட கடந்தகாலங்களில் எவ்வளவு மதிப்புடன் இருந்தது என்பதை விளக்கலாம். இதே வேளையில், அவர்கள் செலவுக்காக, சிறு வீட்டுவேலைகளை செய்ய வைத்து அதற்கு சன்மானமாக பணத்தை கொடுத்து ஊக்கப்படுத்தலாம். இதன் மூலம் பணம் நன்கு உழைத்தால் மட்டுமே கிடைக்கும் என்ற உண்மையை உணரத்தொடங்குவார்கள்.
முக்கியமான நிதி நிறுவனம்
அடுத்ததாக அவர்கள் வங்கி ஒரு முக்கியமான நிதி நிறுவனம் என்பதை மெதுவாக அறியச்செய்யுங்கள். இவ்விபரத்தை மேலும் ஈடுபாடு உடையதாகச் செய்ய, நீங்கள் வங்கிக்கு செல்லுகையில், உங்கள் குழந்தையை அழைத்துச்சென்று அங்கு காணப்படும் சூழ்நிலையையும் வழங்கப்படும் சேவைகளையும் அறியச்செய்யுங்கள்.
வங்கிப் பரிவர்த்தனை
அடுத்ததாக வங்கிகள் பற்றிய உங்கள் குழந்தையின் அனுபவத்தை மேலும் வளர்க்க அவர்களுக்கு, உங்களுடைய பணத்தை எடுக்கவோ அல்லது செலுத்தவோ வேண்டிய சிறு சிறு வங்கிப் பரிவர்த்தனைகளை கொடுத்துச் செய்யச்சொல்லுங்கள்.
சேமிப்பின் முக்கியத்துவம்
அவர்களுக்கு அவ்வப்போது சிறு பணத்தினைக் கொடுத்து சேமிக்கச் சொல்வதும் சேமிப்பின் பலன்களையும் முக்கியத்துவத்தையும் அவர்களுள் பதிய வைக்கும். அவர்களுக்கு சிறிய சேமிப்பு உண்டியல் பொம்மைகளையும் பணத்தையும் கொடுத்து சேமிக்கச்செய்வது அவர்களை ஈர்ப்பதாக அமையும்.
வங்கிக் சேமிப்பு கணக்கை...
ஒரு சேமிப்பு வங்கிக் கணக்கை குழந்தை பெயரில் திறந்து அதன் மூலம், என்ன பலன்களை பெறமுடியும் என்பதை நீங்கள் உணர்த்தலாம்.
முக்கிய நிதி ஆலோசனை
மேலும், குழந்தைகள் வளர்கையில் நீங்கள் பல்வேறு நிதி தொடர்பான ஆலோசனைகளில் அவர்களை ஈடுபடச்செய்யலாம். இது அவர்களை பல்வேறு முடிவுகளை தேர்வு செய்வதில் கூர்மையடையச் செய்து நாளடைவில் அவர்களுக்கு பண மற்றும் நிதி விவகாரங்களில் ஆர்வம் கொள்ளச்செய்யும்.
எனவே பண விஷயங்களில் உங்கள் குழந்தையிடம் நீங்கள் பகிர்ந்துகொள்ளும் உங்களுடைய அனைத்து அனுபவங்களும் திறமைகளும் அவர்களிடையே ஒரு நீடித்த நிதி மேலாண்மை திறமைகளை கட்டமைக்க உதவும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக