அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 27 ஜனவரி, 2014

விண்டோஸ் 7 இல் உள்ள ஐகான்களின் படத்தை மாற்ற.....

விண்டோஸ் 7 எப்படி தன் பயனாளர்களை, ஐகான்கள் மாற்றுவதில் அனுமதிக்கிறது என்பதில் அடங்கியுள்ளது. சில ஐகான்கள் பயனாளர்களைத் தாங்களாகவே மாற்றுவதற்கு அனுமதி அளிக்கும் வகையில் இடம் பெற்றிருக்கும். சில, இதற்கு அனுமதி அளிப்பதில்லை. துரதிருஷ்டவசமாக, விண்டோஸ் 7, போல்டர்கள் மற்றும் ஷார்ட்கட் ஐகான்களை மட்டும் மாற்றிக் கொள்ள அனுமதிக்கிறது.



இதனால், நீங்கள் விரும்பும் ஐகான்களை மாற்றவே முடியாது என்று அர்த்தமல்ல. அதற்கு சில வேலைகளை முன்கூட்டியே மேற்கொள்ள வேண்டும். முதலில் அதற்கான ஷார்ட்கட்களை உருவாக்க வேண்டும். புதிய புரோகிராம் ஒன்று இன்ஸ்டால் செய்திடும்போது, விண்டோஸ் 7 டெஸ்க்டாப்பில், ஒரிஜினல் புரோகிராமின் ஐகானை அனுமதிப் பதில்லை. அதற்குப் பதிலாக, அதற்கான ஷார்ட்கட் ஒன்றை உருவாக்கிப் பதிக்கிறது. ஏதேனும் ஒரு காரணத்திற்காக, இந்த ஷார்ட்கட் இல்லை எனில், அதனை உருவாக்கலாம்.

ஸ்டார்ட் மெனு திறந்து, "Computer” என்பதில் கிளிக் செய்திடவும்.

எந்த புரோகிராமிற்கு ஷார்ட் கட் உருவாக்க வேண்டுமோ, அந்த போல்டருக்குச் சென்று புரோகிராமினைத் தேர்ந்தெடுக்கவும்.

எடுத்துக்காட்டாக, பயர்பாக்ஸ் பிரவுசருக்கு ஐகான் மாற்ற வேண்டும் எனில், "C:” ட்ரைவ் சென்று, "Program Files” தேர்ந்தெடுக்கவும். பின் அங்கு "Mozilla Firefox” தேர்ந்தெடுக்கவும்.

எந்த புரோகிராம் ஐகானை மாற்ற விருப்பமோ, அதில் ரைட் கிளிக் செய்திடவும். அடுத்து "Create Shortcut.” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

அப்போது, விண்டோஸ் அந்த இடத்தில் ஷார்ட் கட் உருவாக்க முடியாது என ஓர் எச்சரிக்கை செய்தி காட்டப்படும்.

இந்த பெட்டிச் செய்தி கிடைத்தால், தானாக ஷார்ட் கட் உருவாக்க்கும் வகையில் "Yes” என்பதில் கிளிக் செய்திடவும்.

பெட்டிச் செய்தி கிடைக்காவிட்டால், புதிய ஷார்ட்கட் ஐகானில் கிளிக் செய்து, உங்கள் டெஸ்க்டாப்பிற்கு இழுத்து வரவும்.

இந்த விண்டோவினை மினிமைஸ் செய்து, டெஸ்க்டாப்பிற்கு மீண்டும் வரவும்.

புதிய ஷார்ட் கட் மீது ரைட் கிளிக் செய்து "Properties” என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.

"Shortcut” என்ற டேப் சென்று, "Change Icon” என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.
இனி இந்த ஐகானை மாற்றலாம்.

ஏற்கனவே இங்கு கிடைக்கும் ஐகானைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது ஏற்கனவே வேறு ஒரு இடத்தில் ஐகானுக்கான படம் இருந்தால், அங்கு சென்று அதனைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.

அப்படியானால், டெஸ்க்டாப்பில் உள்ள Recycle Bin போன்றவற்றிற்கான ஐகானை மாற்ற முடியாதா? என்ற கேள்வி வரலாம்.

தாராளமாக மாற்றலாம்.

டெஸ்க்டாப்பில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் "Personalize” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

அடுத்து கிடைக்கும் விண்டோவின் இடது புறத்தில் "Change Desktop Icons” உள்ள என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

எந்த ஐகானை மாற்ற வேண்டுமோ, அதனைக் கிளிக் செய்து, பின்னர் "Change Icon” என்பதில் கிளிக் செய்திடவும். எந்த படத்தினைக் கொண்டு மாற்ற வேண்டுமோ, அதனைக் கிளிக் செய்து, பின்னர் "Apply” என்பதில் கிளிக் செய்தால், மாற்றப்பட்டுவிடும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக