அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வியாழன், 30 ஜனவரி, 2014

விண்டோஸ் 7 ல் நிரந்தரமாக, சிஸ்டம் பாண்ட் அளவினை எப்படி மாற்றுவது

ஸ்டார்ட் மெனு செல்லவும். இதில் கண்ட்ரோல் பேனல் தேர்ந்தெடுக்கவும். கண்ட்ரோல் பேனல் விண்டோவின், மேல் வலது மூலையில் உள்ள தேடல் கட்டத்தில் Change window colors and metrics என டைப் செய்திடவும்.



இது Personalization என்ற ஆப்ஷனைக் காட்டும்.

இங்கு காணப்படும் Change window colors and metrics என்பதில் கிளிக் செய்திடவும்.
நீங்கள் Windows Color and Appearance என்ற விண்டோவில் அடுத்து இருப்பீர்கள்.
நீங்கள் விண்டோவின் எந்த பகுதியினை மாற்ற விரும்புகிறீர்களோ, அதனை அங்கு கிடைக்கும் கீழ்விரி மெனுவில் தேர்ந்தெடுக்கவும்.

இதில் காட்டப்படும் ஒவ்வொரு வகைக்கும் எழுத்து வகை அளவு மற்றும் வண்ணத்தினை மாற்ற ஆப்ஷன் கிடைக்காது.

எடுத்துக்காட்டாக, Menu விண்டோவில் மாற்ற வேண்டும் எனில், நீங்கள் எழுத்து வகை, மாற்ற விரும்பும் அளவு, வண்ணம், அழுத்தமாகவா என்ற விருப்பம் ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

நீங்கள் மாற்ற விரும்பும் அனைத்திற்கும் முன் தோற்றக்காட்சி விண்டோவின் மேலாகக் காட்டப்படும்.

ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். நாம் வழக்கமாகப் பார்க்கும் அளவில் வண்ணங்கள், சிஸ்டம் விண்டோவில் தோன்றாது.

எடுத்துக்காட்டாக, ஒரு வாழ்த்து அட்டையில், ஒரு வண்ணம் மிக அழகாக இருக்கலாம்.
ஆனால், அதே அளவில் சிறப்பான தோற்றம் சிஸ்டம் விண்டோவில் கிடைக்காது.

முன் தோற்றக் காட்சியைப் பார்த்த பின்னர், அது உங்களுக்குப் பிடித்தமாக இருந்தால், OK கிளிக் செய்து வெளியேறவும்.

மறுபடியும் பிடிக்கவில்லை என்றால், மறுபடியும் இதே போல சென்று மாற்றிக் கொள்ளலாம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக