அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வியாழன், 30 ஜனவரி, 2014

பேஸ்புக் அக்கவுண்ட் இமெயில் முகவரி

பேஸ்புக்கில் அக்கவுண்ட் ஒன்றினைத் தொடங்கும்போதே, ஒவ்வொருவருக்கும் ஓர் இமெயில் முகவரி தரப்படும். அது username@facebook.com என்றபடி அமையும். இது தனியாக உங்களுக்குத் தெரிவிக்கப்பட மாட்டாது. தானாகவே இது அமையும். உங்கள் டைம்லைன் பக்கம் செல்ல, facebook.com/user name என்பது இணையப் பக்க முகவரியாக இருக்கும்.



இந்த மின்னஞ்சல் முகவரியினை மாற்ற வேண்டும் என நினைத்தால், நீங்கள் அதனை ஒருமுறை மாற்றிக் கொள்ளலாம். நீங்கள் புதிய பேஸ்புக் இமெயில் முகவரி தேர்ந்தெடுத்தால், அது About பிரிவில் உள்ள உங்களுடைய Contact Info பிரிவில் சேர்க்கப்படும்.

உங்கள் பேஸ்புக் இமெயில் முகவரிக்கு மற்றவர்கள் தாராளமாக மின் அஞ்சல்களை அனுப்ப முடியும். இதற்கு அவர்கள், பேஸ்புக் இமெயில் வசதியைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. ஹாட்மெயில், ஜிமெயில், யாஹூ மெயில் என எதனையும் பயன்படுத்தலாம்.

அந்த அஞ்சல்கள் Facebook Messages என்ற பிரிவிற்கு அனுப்பப்படும். நீங்கள் அதே போல, உங்கள் பேஸ்புக் இமெயில் முகவரியினைப் பயன்படுத்தி, மற்றவர்களுக்கு அஞ்சல்களை அனுப்பலாம்.

எந்த மின் அஞ்சல் முகவரிக்கும் அனுப்பலாம். உங்கள் அஞ்சல்கள், பேஸ்புக் மெசேஜ் போல வடிவமைக்கப்படும். இதில் நீங்கள் தேர்ந்தெடுத்துள்ள பயனாளர் பெயர், உங்களின் படம் மற்றும் உங்கள் அஞ்சல் செய்தி இருக்கும். உங்கள் அஞ்சல் முகவரி, அவர்களுக்கு username@facebook.com எனக் காட்டப்படும்.

மெசேஜ் அனுப்ப, உங்கள் பேஸ்புக் பக்கத்தில், இடது பக்கத்தில், Messages என்பதில் கிளிக் செய்திடவும்.

அடுத்து New Message என்பதில் கிளிக் செய்திடவும்.

மற்ற மின் அஞ்சல் சேவைகளில் உள்ளது போல, இதில் காணப்படும் To பீல்டில், நீங்கள் யாருக்கு அஞ்சல் அனுப்பவேண்டுமோ, அவர்களின் மின் அஞ்சல் முகவரியினை டைப் செய்திடவும்.

பின்னர், அஞ்சல் செய்தியை டைப் செய்து, Send கிளிக் செய்தால், அஞ்சல் அனுப்பப்படும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக