அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 27 ஜனவரி, 2014

விண்டோஸ் 8 சிஸ்டத்தில் டாஸ்க் பார் அளவை மாற்ற....

விண்டோஸ் 8 சிஸ்டத்தில் டாஸ்க் பாரை விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இருந்தபடி மாற்றலாம். முதலில் டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்திடவும்.

இதில் Lock taskbar என்று இருப்பதில் டிக் அடையாளம் இருந்தால் நீக்கிவிடவும்.


இனி, டாஸ்க்பாரின் மேலாக உள்ள கோட்டின் அருகே மவுஸ் கர்சரைக் கொண்டு செல்லவும்.

கர்சர் இரு அம்புக் குறி கொண்ட அடையாளமாக மாறும் வரை கோட்டின் மீதாக சுழற்றிச் செல்லவும்.

மாறிய பின்னர், அதனைக் கீழாக அல்லது மேலாக இழுத்து, டாஸ்க்பாரின் அகலத்தைத் தேவையான அளவில் அமைத்துக் கொள்ளலாம்.

தேவையான அளவில் வைத்தவுடன், மீண்டும் டாஸ்க்பாரின் மீது ரைட் கிளிக் செய்து, Lock taskbar என்பதில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக