அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 27 ஜனவரி, 2014

விண்டோஸ் 8 ல் உருவாக்கப்படும் பைல்கள், ஸ்கை ட்ரைவில் தானாக சேவ் செய்ய..,,

விண் 8 சிஸ்டத்தில், கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறையில், மைக்ரோசாப்ட் அமைத்துள்ள ஸ்டோரேஜ் ட்ரைவ் தான் ஸ்கை ட்ரைவ் ஆகும். விண் 8 சிஸ்டம் முழுமையாக, ஸ்கை ட்ரைவுடன் இணைந்து செயல்படுகிறது.



விண்டோஸ் 8 சிஸ்டம் கட்டணம் செலுத்தி வாங்கும்போதே, குறிப்பிட்ட அந்த உரிமத்திற்கு என ஸ்கை ட்ரைவில் 7 ஜிபி இடம் ஒதுக்கப்படுகிறது.

மைக்ரோசாப்ட் அக்கவுண்ட் மூலம் லாக் இன் செய்தால், விண்டோஸ் 8 சிஸ்டத்தில் நீங்கள் உருவாக்கும் பைல்கள் அனைத்தும் அதில் சேவ் செய்து ஸ்டோர் செய்யப்படுகிறது.

தொடர்ந்து நீங்கள் பைல்களைத் திருத்துகையில், அப்டேட் செய்யப்படுகிறது.

எனவே, நீங்கள் விண்டோஸ் 8 சிஸ்டத்தில் உருவாக்கும் பைல்களை, உலகின் எந்த மூலையில் இருந்தும், விண் 8 சிஸ்டம் பயன்படுத்தும் எந்த சாதனத்தின் வழியாகவும் பெற்று பயன்படுத்தலாம்.

இந்த வழிமுறையை ("Fetching”) என மைக்ரோசாப்ட் அழைக்கிறது.

தமிழில் "தருவித்தல்' என அழைக்கலாம். ஸ்கை ட்ரைவில் நாம் கட்டாயமாக நம் பைல்களை ஸ்டோர் செய்திட வேண்டியதில்லை.

நாம் விரும்பினால் மட்டுமே இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நீங்கள் இணைய தொடர்பில் இல்லாமல், விண் 8 சிஸ்டத்தில் பணி புரிந்தால், நீங்கள் உருவாக்கும் பைல்களை ஸ்கை ட்ரைவில் சேமிக்க முடியாது.

நீங்கள் விருப்பப்பட்டால், ஸ்கை ட்ரைவினை இலவச ஸ்டோரேஜ் சிஸ்டமாகப் பயன்படுத்தலாம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக