அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

செவ்வாய், 28 ஜனவரி, 2014

பெண்களை சீரழித்து கார் பார்க்கிங்கில் வீசிய கடாபி..

புரட்சிப் படையினரால் கொல்லப்பட்ட லிபியாவின் முன்னாள் சர்வாதிகாரி கடாபியிடம் சிக்கி சீரழிந்த பெண்கள் குறித்த இன்னும் பல பரபரப்புத் தகவல்களை வெளிக் கொணர்ந்துள்ளது பிபிசி எடுத்துள்ள ஒரு டாக்குமென்டரிப் படம்.

அதில் கடாபியின் குரூர முகத்தை மேலும் தோலுரித்துக் காட்டியுள்ளது 'Gaddafi's Secret World' என்று பெயரிடப்பட்ட இந்த படம்.

பெண்களை எப்படியெல்லாம் அவர் தவறாகப் பயன்படுத்தினார், எவ்வளவு குரூரமாக நடந்து கொண்டார் என்பதை விளக்கியுள்ளனர்.

பலாத்காரம் செய்வதற்காகவே தனி அறை

கடாபி தனது அத்துமீறல் செயல்களுக்காகவே தனியாக ஒரு பண்ணை இல்லத்தை வைத்திருந்தார். அதில் இருந்த இரு அறைகள்தான் மிக மோசமானவை. அதில் ஒரு அறையானது, கடாபியிடம் சிக்கும் பெண்களை கொடூரமாக பலாத்காரம் செய்வதற்காக பயன்படுத்தப்பட்டு வந்தது.

ஆபாசப் படம் பார்த்துக் கொண்டே

இந்த அறையில் வைத்துத்தான் பெண்களை சீரழிப்பாராம் கடாபி. அதுவும் அவர்களை ஆபாசப் படம் பார்த்துக் கொண்டே சித்திரவதை செய்வாராம். அவர்களையும் ஆபாசப் படங்களைப் பார்க்கச் சொல்லி கட்டாயப்படுத்துவாராம்.

அபார்ஷனுக்காக தனி அறை

தன்னால் பலாத்காரம் செய்யப்படும் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்வதற்காக தனியாக ஒரு அறையை வைத்திருந்தாராம் கடாபி. இந்த அறையில்தான் பெண்களுக்கு பாலியல் நோய்கள் இருக்கின்றனவா என்ற சோதனையும் நடத்தப்படும். எல்லாம் சரியாக இருந்தால்தான் அவர்களை கடாபி அறைக்கு அனுப்பி வைப்பார்களாம்.

தப்பினாலும் சிக்கல்தான்

இங்கு மாட்டிக் கொள்ளும் பெண்களை கொடூரமாக கையாள்வாராம் கடாபி. உயிர் போகும் வரை விட மாட்டாராம். அதேபோல இங்கிருந்து தப்பிப் போகும் பெண்களை அவர்களது குடும்பத்தினர் ஏற்காமல் விரட்டியடித்து விடுவதால் அவர்கள் கடைசியில் தற்கொலை முடிவை நாடும் அவலம் நேரிடுமாம்.

கார் பார்க்கில் தூக்கி வீசப்பட்ட பரிதாபம்

தன்னால் பலாத்காரக் கொடுமைக்குள்ளான பெண்களை இனியும் பயன்படுத்த முடியாது என்ற நிலைக்கு வரும்போது அவர்களை கார் பார்க்கிங்கிலும், எங்காவது குப்பை மேட்டிலும் கொண்டு போய் தூக்கி வீசி விடுமாறு உத்தரவிடுவாராம் கடாபி. இப்படி வீசப்பட்ட பெண்கள் கடைசியில் உயிரிழக்கும் அவலம் நடக்குமாம்.

பிப்ரவரி 3ம் தேதி ஒளிபரப்பு

இந்த ஆவணப் படமானது பிப்ரவரி 3ம் தேதி பிபிசி4 சானலில் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக