அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

செவ்வாய், 28 ஜனவரி, 2014

இனவழிப்பு என்ற சொல்லை பாவிக்க வேண்டாம்

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இனவழிப்பு என்ற சொல்லை பயன்படுத்த வேண்டாம் எனவும் இனவழிப்புக்கு ஒப்பானது என்ற சொல்லினை பாவிக்குமாறும் வட மாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபையில் இன்று இடம்பெற்ற மாகாணசபை அமர்வின்போது சபை உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். திட்டமிட்ட இனவழிப்பை சர்வதேச விசாரணைகள் மூலம் அனைத்துலக சமூகத்திற்கும் வெளிப்படுத்த முன்வரவேண்டும் எனற பிரேரணையை மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முன்வைத்து இருந்தார்.

இதன் போதே இனவழிப்பு என்ற சொல்லை பாவிக்காமல் இனவழிப்புக்கு ஒப்பானது என்ற சொல்லினை பாவியுங்கள் இனவழிப்பு என்ற சொல்லினை பாவிக்கும் போது சில சட்டசிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிவரும் என விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைகளின் பின்னரே இங்கு நடைபெற்றது இனவழிப்பு என கூறமுடியும். அதுவரைக்கும் இங்கு நடைபெற்றது இனவழிப்புக்கு ஒப்பானது என்ற சொல்லினை பாவிப்பதே நன்று என விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக