அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வியாழன், 23 ஜனவரி, 2014

புலம்பெயர் தமிழர்களிடம் பாதுகாப்பு அமைச்சு விழிப்பு!

புலம்பெயர் நாடுகளில் இருந்து நாட்டுக்கு வந்து, அரச ஒத்துழைப்புடன், வர்த்தக நடவடிக்கைகள், மனித நேய செயற்பாடுகள் போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்ற தமிழர்கள் விடயத்தில் பாதுகாப்பமைச்சு விழிப்பு அடைந்து உள்ளது.

இத்தமிழர்களில் அநேகமானவர்கள் ஒரு காலத்தில் புலிகள் இயக்க செயற்பாட்டாளர்களாக இருந்தவர்கள்.

நாட்டுக்கு வருகின்ற இவர்கள் பாதுகாப்பு தரப்பினர் உட்பட அரச உயரதிகாரிகளுடன் மிக நெருக்கமான, பலமான உறவுகளை பேணுகின்றனர். அரச விசுவாசிகளாக இங்கு நடந்து கொள்கின்றனர். இத்தொடர்புகள் மூலம் ஈட்டக் கூடிய உச்ச பட்ச நன்மைகளை அடைகின்றனர்.

ஆனால் புலம்பெயர் நாடுகளுக்கு திரும்பிச் செல்கின்றபொதெல்லாம் வர்த்தக நடவடிக்கைகள், மனித நேய செயற்பாடுகள் போன்றவற்றை செய்ய வேண்டிய தேவைகளுக்காக மாத்திரம் அரசுடன் ஒட்டிக் கொண்டு நிற்கின்றனர் என்றும் மற்றும்படி சிங்களவர்களுடன் நாட்டில் சேர்ந்து வாழ முடியாது கதை அளக்கின்றனர்.



இந்நிலையில் இவர்கள் விடயத்தில் அவதானமாக இருக்க அரசு தீர்மானித்து உள்ளது. எனவே நாட்டில் இவர்கள் இருக்கின்றபோது இவர்களின் வாக்குமூலங்களை ஊடகங்களில் பதிவு செய்ய பாதுகாப்பமைச்சின் உயர் மட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இவர்களின் பேட்டிகள் ஒளி, ஒலி, எழுத்து வடிவங்களில் வெளியில் கொண்டு வரப்பட உள்ளன. எனவே புலம்பெயர் நாடுகளுக்கு திரும்பிச் செல்கின்றபோது இவர்கள் நடத்தக் கூடிய நாடகம் அப்பாவி மக்களிடம் எடுபட மாட்டாது. அத்துடன் இவர்கள் புலம்பெயர் நாடுகளில் இலங்கை தொடர்பாக நடந்து கொள்கின்ற விதமும் இதே நேரத்தில் கண்காணிக்கப்பட உள்ளது.

இதே நேரம் புலிகள் இயக்க செயற்பாட்டாளர்களாக அல்லது அனுதாபிகளாக அறியப்பட்ட புலம்பெயர் தமிழர்களில் பலர் நாட்டுக்கு வருகின்றபோது அரச தரப்பினருடன் சேர்ந்து செயற்படுகின்றனர். அரசுக்கு ஆதரவாக பிரசாரங்களையும் மேற்கொள்கின்றனர். இதனால் புலிச் சார்பு ஊடகங்களால் கடுமையாக விமர்சிக்கப்படுகின்றனர்.

ஆனால் இவர்களுக்கு கொள்கை ரீதியாகவேனும் நேர்ந்து இருக்க கூடிய மாற்றம் மக்களுக்கு தெரியாமல் உள்ளது. எனவே நேர்ந்து இருக்க கூடிய மாற்றம் குறித்து இப்படியானவர்கள் மக்களுக்கு அறிக்கைகள், செய்திக் குறிப்புக்கள் போன்றவற்றின் மூலம் தெரிவிக்க வேண்டும் என்று பாதுகாப்புத் தரப்பால் கோரப்பட உள்ளனர். அப்போதுதான் இப்படியானவர்கள் மீது மக்கள் நம்பிக்கை வைக்கின்றமையுடன், விழிப்பூட்டல் பெறவும் வாய்ப்பு உள்ளது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக