அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வியாழன், 23 ஜனவரி, 2014

இலங்கையருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

ஐக்கிய அரபு இராச்சியத்தில் 19 வயது இலங்கையர் ஒருவருக்கு படுகொலைக் குற்றத்துக்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது.



எமிரேட்காரர் ஒருவரை பாலைவன பகுதிக்கு கொண்டு சென்று, வாகனம் ஒன்றை ஏற்றி, படுகொலை செய்தார் என்கிற வழக்கில் மின்சார தொழிநுட்பவியலாளரான ரவிந்த கிருஷ்ண பிள்ளை குற்றவாளியாக காணப்பட்டார்.

மரண தண்டனை நிறைவேற்றப்படுகின்றமை ஐக்கிய அரபு இராச்சியத்தில் மிக குறைவான சம்பவம். ஆயினும் இரத்த பணம் பெற்றுக் கொள்ள கொல்லப்பட்டவரின் உறவினர்கள் மறுத்து விட்டார்கள். இளைஞனுக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்று அதிகாரிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் பயனற்று போயின.

கடந்த ஞாயிற்றுக்கிழமையே மரண தண்டனை நிறைவேற்றப்படுவதாக இருந்தது. ஆயினும் அன்று ஒரு தேசிய விடுமுறை என்பதால் தண்டனை ஒத்தி வைக்கப்பட்டது.

சார்ஜாவில் நேற்று காலை துப்பாக்கியால் சுடப்பட்டு இவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நேற்று ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு விஜயம் மேற்கொண்டார். இந்நிலையில் இம்மரண தண்டனை நிறைவேற்றம் குறித்து ஜனாதிபதி ஏன் மௌனம் சாதித்து இருந்தார்? என்று கேள்வி எழுப்பி உள்ளார் ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக