அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

இன்றுடன் பேஸ்புக் ஆரம்பித்து 10 வருடங்கள் ஆகின்றது...!

இன்றுடன் பேஸ்புக் ஆரம்பித்து சரியாக 10 வருடங்கள் ஆகின்றது அதாவது 2004 பிப்ரவரி 4 ல் இது ஆரம்பிக்கபட்டது ஆரம்பிக்கப்பட்ட புதியதில் இவ்வளவு கோடி ரசிகர்களை பெறும் என மார்க் கூட நினைத்திருக்க மாட்டார்.



ஆனால் இன்றோ 150 கோடிக்கும் அதிகமான அக்கவுன்டுடன் பேல்புக் நம்மை மிரள வைக்கிறது.

இன்றைக்கு அனைத்து வயதினரும் பயன்படுத்தும் பொது தளமாக பேஸ்புக் மாறிவிட்டது, முன்பெல்லாம் 18 முதல் 25 வயதுள்ளவர்களே அதிகம் இதை பயன்படுத்தி வந்தனர்.

ஆனால், இன்றோ நிலைமை அப்படியில்லை 18 வயது மகள் பேஸ்புக் அக்கவுன்ட் வைத்திருந்தால் அந்த பெண்ணின் அப்பாவும் பேஸ்புக்கில் இருக்கிறார், அம்மாவும் பேஸ்புக்கில் இருக்கிறார், மேலும் இன்று 30 வயது முதல் 50 வயது உடையவர்களும் அதிக அளவில் பேஸ்புக்கில் ஆக்டிவாக இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. இன்றுடன் பேஸ்புக் ஆரம்பித்து 10 வருடங்கள் ஆகின்றது...!

மேலும் சிலர் பெண்களை கவர்வதற்காகவே போலியான அக்கவுன்ட்களை ஆரம்பித்து தங்களது சித்து வேலைகளை காண்பித்துதான் வருகிறார்கள்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக