அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

சவுதி மன்னரின் உத்தரவின்பேரில் 610ல் இருந்து 290 கிலோவான வாலிபர் (படங்கள், காணொளி இணைப்பு)

சவுதி மன்னரின் உத்தரவின்பேரில் 610 கிலோ எடை கொண்ட வாலிபர் 320 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார்.
சவுதியின் ஜிசான் மாகாணத்தில் உள்ள ஜசான் நகரைச் சேர்ந்தவர் காலித் மொஹ்சன் அல்-ஷயேரி. 610 கிலோ எடை கொண்ட அவரது உடல் எடையை குறைக்குமாறு சவுதி மன்னர் அப்பதுல்லா உத்தரவிட்டார்.

இதையடுத்து அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் ரியாத்தில் உள்ள கிங் பஹத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை
நடக்க முடியாமல் இருந்த காலித்தை ஒரு வழியாக மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவருக்கு லேப்ரோஸ்கோபிக் அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

320 கிலோ
காலித் கடந்த 7 மாதங்களில் 320 கிலோ எடையை குறைத்து தற்போது 290 கிலோவாக உள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

முதல் 3 மாதம்
சிகிச்சை துவங்கிய முதல் 3 மாதங்களில் காலித் 150 கிலோ எடையை குறைத்துள்ளார். பின்னர் அவரது வயிற்றுப் பகுதியில் ஒரு அறுவை சிகிச்சை செய்த பிறகு மேலும் 170 கிலோ எடை குறைந்துள்ளது.

அமெரிக்க உணவு
உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ள காலிதிற்கு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உணவு மட்டும் தான் அளிக்கப்பட்டு வருகிறது.

இதயம்
காலிதின் இதயம், நுரையீரல் ஆகியவை நன்றாக இயங்குவதாக அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவக் குழு தெரிவித்துள்ளது. மேலும் தற்போது அவரால் அவரது காலை அசைக்க முடிகிறது.

வீல் சேர்
காலிதுக்காக பிரத்யேகமாக பெரிய சக்கர நாற்காலி ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இது தான் உலகின் மிகப்பெரிய மருத்துவ நாற்காலி என்பது குறிப்பிடத்தக்கது.

படுக்கை
ரியாத் மருத்துவமனைக்கு வரும் முன்பு காலித் மூன்று படுக்கைகளில் தூங்கினார். தற்போது அவர் ஒரு படுக்கையில் தான் தூங்குகிறார். மருத்துவமனையில் அவரை 21 டாக்டர்கள், 15 நர்ஸுகள் மற்றும் அவரது தாய் ஆகியோர் கவனித்து வருகிறார்கள்.







Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக