அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

சனி, 1 பிப்ரவரி, 2014

பிரபாகரன் மீண்டும் பிறக்கின்றார், தெற்கில் பரபரப்பு புத்தகம்!

பிரபாகரன் மீண்டும் பிறக்கின்றார் என்று பெயரிடப்பட்ட புத்தகத்தின் சுமார் பத்தாயிரம் பிரதிகள் கொழும்பு நுகேகொடவில் உள்ள அச்சகம் ஒன்றில் இருந்து கண்டு பிடிக்கப்பட்டு உள்ளன.

ஜனநாயக கட்சியின் பிக்கு முன்னணியின் பிரதம செயலாளர் பியகம சுசில தேரரும், இன்னும் சிலரும் இவற்றை கண்டு பிடித்து உள்ளனர்.

பிரபாகரன், சரத் பொன்சேகா ஆகியோரை ஒப்பிட்டு இந்நூலில் எழுதப்பட்டு உள்ளது.

தொடர்ந்து பிக்குச் செயலாளர் பொலிஸில் இந்நூல் தொடர்பாக முறையிட்டு உள்ளார். ஆயினும் முறைப்பாடு செய்யப்பட்டு பல மணித்தியாலங்கள் வரை பொலிஸார் அச்சகத்துக்கு செல்லவே இல்லை என்று ஜனநாயக கட்சி குற்றம் சுமத்தி உள்ளது.

முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று உரிய அதிகாரிகளிடம் கோரி உள்ளனர் என்றும் இப்புத்தகத்தை அச்சிட்டமையுடன் நோக்கம் கண்டு பிடிக்கப்பட்டு, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் பிக்குச் செயலாளர் தெரிவித்து உள்ளார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக