அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

இறந்த மகனின் உடலை துண்டுகளாக வெட்டி தெருவில் வீசிய தாய்

அமெரிக்காவில் இறந்த மகனின் உடலை பல துண்டுகளாக்கி அதை தெருவில் பல்வேறு இடங்களில் வீசிய தாய் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


அமெரிக்காவில் உள்ள மிஷிகன் மாநிலத்தைச் சேர்ந்தவர் டான்னா ஸ்கிரிவோ(59). நர்ஸ். அவரது மகன் ராம்சே ஸ்கிரிவோ(32) இறந்துவிட்டார். இதையடுத்து டான்னா தனது மகனின் உடலை சட்டவிரோதமாக மருத்துவமனையில் இருந்து எடுத்து அதை பல துண்டுகளாக வெட்டி சாலைகளில் வீசிவிட்டார்.

டெட்ராய்ட்டின் வடகிழக்கு பகுதியில் இருக்கும் சைனா டவுன்ஷிப்பில் உள்ள இரண்டு சாலைகளில் குப்பை போடும் பையில் மனித உடல் துண்டுகள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். உடல் துண்டுகள் சாலைகளில் கிடப்பதை அப்பகுதியில் வசிக்கும் ஒருவர் பார்த்து தான் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். குப்பை பை தவிர தெருவிலும் மனித உடல் உறுப்புகள் மற்றும் பை நிறைய துணி, கிழித்துப்போட்ட பேப்பர் ஆகியவையும் கிடந்ததை போலீசார் பார்த்தனர்.

இதையடுத்து அவர்கள் விசாரணை நடத்தி டான்னாவை கைது செய்தனர். முன்னதாக கடந்த 2013ம் ஆண்டு மன நோயால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்ளத் துடித்த ராம்சேவை கவனித்துக் கொள்ள டான்னா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து ராம்சேவை கவனித்துக் கொள்ள டான்னாவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

டான்னா இறந்த ராம்சேயின் உடலை வெட்டினாரா இல்லை கொலை செய்தாரா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக