சால்ட் லேக் சிட்டி: அமெரிக்க பேஸ்பால் போட்டியில் சீஹாக்ஸ் அணி தான் வெற்றி பெறும் என்ற குரங்கின் கணிப்பு பலித்துள்ளது. இவ்வாறு, பேஸ்பால் போட்டியின் வெற்றியை வாலில்லாத குரங்கு கணிப்பது இது ஏழாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் ஆண்டுதோறும் கால்பந்து விளையாட்டு அமைப்பின் சார்பில் பேஸ்பால் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். போட்டிகள் என்றாலே சூதாட்டம் மற்றும் கணிப்புகள் இருப்பது சகஜம் தானே.
அந்தவகையில், போட்டியில் வெற்றி பெறும் அணின் குறித்து அமெரிக்கச் சரணாலயத்தில் வசித்து வரும் வாலில்லாத குரங்கு ஒன்றின் கணிப்பு எழாவது முறையாக இம்முறையும் பலித்துள்ளது.
13 வயது ஈலி....
அமெரிக்காவின் சால்ட் லேக் சிட்டி பகுதியில் உள்ள ஹாகிள் என்ற வனவிலங்கு சரணாலயத்தில் உள்ளது ஈலி என்ற வாலில்லா குரங்கு. அதீத புத்திசாலியான ஈலிக்கி தற்போது 13 வயது ஆகிறது.
ஈலியின் கணிப்பு....
முதன்முறையாக கடந்த 2006ம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற பேஸ்பால் போட்டியில் யார் சாம்பியன் பட்டத்தை வெல்வார்கள் என்பது குறித்து ஈலியிடம் கணிப்பு கேட்கப்பட்டது. ஈலி கணித்த அணியே வெற்றியைத் தட்டிச் சென்றது. அது தொடங்கி தற்போது வரை ஈலியின் கணிப்பு ஏழு முறை வெற்றி பெற்றுள்ளதாம்.
பேப்பர் ஹெல்மெட்டுகள்....
இது குறித்து ஹாகிள் சரணாலயத்தை சேர்ந்த எரிக்கா ஹேன்சன் கூறும்போது, கடந்த வியாழக்கிழமை பேப்பரில் தயாரித்த ஹெல்மெட்டுகள் வரிசையாக வைக்கப்பட்டு இருந்த இடத்திற்கு ஈலி கொண்டு செல்லப்பட்டது. அங்கு சியாட்டில் சீஹாக்ஸ் என்ற பேஸ்பால் அணியின் சின்னம் கொண்ட பேப்பர் ஹெல்மெட்டும் இருந்தது.
சீஹாக்ஸ் அணி....
அதனை எவ்வித தயக்கமும் இல்லாமல் ஓடி சென்று கையில் எடுத்தது ஈலி. போட்டியில் சீஹாக்ஸ் அணி வெற்றி பெற்று ஈலியின் கணிப்பை சரியென்று உறுதிப்படுத்தியது. இதேபோன்று கடந்த வருடம் ரேவன்ஸ் அணியின் சின்னம் கொண்ட பேப்பர் கோல் கம்பம் ஒன்றை ஈலி எடுத்தது.
7வது முறை....
அந்த வருடம் நடந்த போட்டியில் ரேவன்ஸ் அணி 34-31 என்ற புள்ளி கணக்கில் எதிர் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. தொடர்ந்து 7வது முறையாக இந்த வருடமும் தனது கணிப்பில் தவறாமல் சரியான வெற்றியாளரை அது தேர்வு செய்து சாதனை படைத்துள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.
மனைவியும், மகளும்....
கணிப்புகள் மூலம் பிரபலமடைந்துள்ள ஈலிக்கு ஈவ் என்ற துணையும், அகாரா என்ற மகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக