அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 28 ஜூலை, 2014

சிலசரும நோய்கள்.....

அழகு தேமல் (Pityriasis alba), அழுக்குத் தேமல் (Pityriasis versicolor), வட்டக் கடி (Tinea Corpois)

அழகு தேமல் என்று நினைத்து பேசாமல் விட்­டிட்டன். நாவூறு பட்­ட­து­போல இப்ப கூடக் கூடவா வரு­கி­றது என்று அம்மா சொன்னாள்.

மாநி­ற­மான அந்தப் பையனின் சொக்­கை­களில் பவுடர் அப்­பி­யது போல சில அடை­யா­ளங்கள். அம்மா சொன்­னது உண்­மைதான். அழ­கான அந்தப் பையனின் முகம் அழகு குலைந்து கிடந்­தது. ஆனால் இந்த அழ­கென்­பதும் அழகு குலைந்­தது என்­பதும் எமது மன உணர்­வு­கள்தான்.



அழகு தேமல் (Pityriasis alba)

இந்த அழகு தேமலை Pityriasis alba என அழைப்­பார்கள். தெளி­வற்ற ஓரங்­க­ளை­யு­டைய தேமல் அடை­யா­ளங்­க­ளாக இருக்கும். நல்ல வெளிச்­சத்தில் உற்றுப் பார்த்தால் நுண்­ணிய செதில்கள் போல சற்று சொர சொரப்­பாக இருக்கும். சற்று செம்மை படர்ந்த அடை­யா­ளங்­க­ளாக ஆரம்­பிக்கும் இவை பின்னர் வெளி­றி­ய­வை­யாக மாறிவிடும். எனவே இவை செம்மை படர்ந்­த­வை­யா­கவோ, வெள்ளை நிற­மா­கவோ அல்­லது சில வேளை­களில் சரும நிறத்­த­வை­யா­கவோ இருக்கக் கூடும்.

முகத்தில் அதுவும் பெரும்­பாலும் கன்­னங்­க­ளி­லேயே இது தோன்றும். இருந்த போதும் தோள் மூட்டு, கைகளின் மேற்­ப­குதி, கழுத்து போன்ற இடங்­க­ளிலும் வரக்­கூடும். சில வேளை­களில் நெஞ்சு, முதுகுப் பகு­தி­க­ளிலும், தொடை­க­ளிலும் கூட தோன்றக் கூடும்.

மிகப் பெரிய அள­வா­ன­வை­யாக இருப்­ப­தில்லை. 1 முதல் 4 செ.மீ. அள­வில்தான் இருக்கும். பொது­வாக 4-5 அடை­யா­ளங்கள் இருக்கக் கூடும் என்ற போதும் அவற்றின் எண்­ணிக்கை 20 வரை அதி­க­மா­கவும் இருக்­கலாம். குளிர் காலத்தை விட வெயில் காலத்தில் கவ­னத்தை ஈர்க்கும் வண்ணம் தெரியும்.

இது ஏன் தோன்­று­கி­றது என்­பது பற்றி தெளி­வற்ற தன்­மையே நில­வு­கி­றது. பொது­வாக இது ஒரு வகை சரும அழற்சி என்றே கரு­தப்­ப­டு­கி­றது. அதா­வது ஒரு வகை எக்­ஸிமா எனலாம் என்­ற­ போதும் கடுமை அற்ற வகை­யா­னது என்றே சொல்ல வேண்டும்.

சிகிச்சை

இது ஒரு ஆபத்­தற்ற நோய். ஒரு­வ­ரி­லி­ருந்து மற்­ற­வ­ருக்குத் தொற்­று­வ­தில்லை. அத்­துடன் காலப்­போக்கில் தானா­கவே குண­ம­டைந்­து­விடும். சரு­மத்தை ஊறு­ப­டுத்­தாது கவ­ன­மாகப் பேணி வந்­தாலே போது­மா­னது. எந்­த­வித சிகிச்­சையும் தேவைப்­ப­டாது.

சொர­சொ­ரப்பு அல்­லது அரி ப்பு தொல்­லை­யாக இருந்தால் மருத்­து­வர்கள் சரு­மத்தை மிரு­து­வாக்கும் கிறீம் வகை­களை (Emollient cream) சிபாரிசு செய்­யலாம். அல்­லது சற்று வீரியம் குறைந்த ஸ்டிரொயிட் (Steroid) வகை கிறீம்­க­ளையும் கொடுப்­ப­துண்டு. ஹைரோ­கோட்­டிசோன் கிறீம் அத்­த­கை­யது. சற்று விலை உயர்ந்த Tacrolimus ointment ஓயின்மென்ட் உப­யோ­கிப்­பதும் உதவக் கூடும்.

அழுக்குத் தேமல் (Pityriasis versicolor)

அழகு தேமல் பற்றிப் பேசினோம். இனி அழுக்குத் தேமல் பற்றிப் பார்க்­க­லாமா?

இதுவும் ஏறத்­தாழ அழகு தேமல் போலவே பார்­வைக்கு இருக்கும். இருந்­த­போதும் இது தோல் அழற்சி நோயல்ல. கிரு­மியால் ஏற்­ப­டு­கி­றது. Pityrosporum என்ற ஈஸ்ட் வகைக் கிரு­மி­யால்தான் ஏற்­ப­டு­கி­றது. பெரும்­பா­லா­ன­வர்­களின் உடலில் இக் கிருமி இயற்­கை­யா­கவே இருக்­கி­றது. இருந்­த­போதும் சில­ரது உடலில் மட்டும் அவை பெருகி சரும நோயை ஏற்­ப­டுத்­து­கின்­றன.

ஏன் சிலரில் மாத்­திரம் பெரு­கு­கி­றது என்­ப­தற்­கான கார­ணங்கள் தெளி­வாக தெரி­ய­வில்லை. இருந்­த­போதும் கடு­மை­யான வெக்கை, வியர்வை போன்­றவை கார­ண­மாக இருக்­கலாம்.

அழகு தேமல் பெரும்­பாலும் முகத்தில் தோன்­று­வ­தாக இருக்க, இந்த அழுக்குத் தேம­லா­னது நெஞ்சு, கழுத்து மற்றும் மேற் புஜங்­க­ளி­லேயே பெரும்­பாலும் ஏற்­ப­டு­கி­றது. வயிறு, முதுகு, தொடை போன்ற இடங்­க­ளுக்கும் சிலரில் இது பர­வு­வ­துண்டு. அரு­க­ருகே இருக்கும் தேமல் புள்­ளிகள் ஒன்­றுடன் ஒன்று இணைந்து பெரி­தாக வரு­வ­துண்டு.

சரும நிறத்­தி­லேயே சற்று வெளி­ற­லா­கவும் சொர­சொ­ரப்­பா­கவும் இருப்­பதால் அழுக்குப் படர்ந்­தது போல தோன்­றலாம். என­வேதான் அழுக்குத் தேமல் என்றேன். வெண்­மை­யான தோலு­டை­ய­வர்­களில் பிரவுன் நிற­மாகத் தேமல் தூக்­க­லாகத் தெரியும்.

Ketoconazole அல்­லது Selenium சேர் ந்த சம்­போக்­களை வெளி ப்பூச்சு மருந்­தாக உப­யோ­கிக்­கலாம். தேமல் உள்ள இடங்­களில் மட்­டு­மின்றி அருகில் உள்ள சரு­மத்­திலும் பூசு­வது அவ­சியம். 5 முதல் 10 நிமி­டங்கள் கழிந்த பின்னர் உடலைக் கழு­வுங்கள்.

வாரம் ஒரு முறை­யாக நான்கு வாரங்கள் வரை பாவிக்க இந்நோய் மறைந்து விடும். ஒரு சிலரில் இது சில காலத்தின் பின்னர் மீண்டும் ஏற்­படக் கூடும். அவ்­வா­றெனில் மீண்டும் இந்த சம்போ வைத்­தி­யத்தை செய்ய வேண்­டி­யி­ருக்கும்.

பங்­க­சிற்கு எதி­ரான (Antifungal)- பங்கஸ் கொல்லி பூச்சு மருந்­து­களும் நல்ல பலனைக் கொடுக்­கி­ன்­றன. Clotrimazole, Miconazole, Ketoconazole போன்­றவை சில உதா­ர­ணங்­க­ளாகும். ஒயின்ட்மென்ட் அல்­லது கிறீ­மாக உப­யோ­கிக்­கலாம். பொது­வாக காலை மாலை என இரு­வே­ளைகள் பூச வேண்டும். இரு வாரங்கள் வரை தொடர்ந்து உப­யோ­கிக்க நேரிடும்.

உடலில் பல இடங்­களில் பர­வ­லாக இருந்தால் அல்­லது சம்போ மற்றும் பூச்சு மருந்­து­க­ளுக்கு போதிய பலன் கிட்­டா­விட்டால் பங்கஸ் கொல்லி மருந்­து­களை மாத்­தி­ரை­க­ளாக உட்­கொள்­ளவும் நேரலாம்.

வட்டக் கடி (Tinea Corpois)

இதுவும் ஒரு வகை பங்கஸ் தோல் நோய்தான். வட்டக் கடி (Ringworm)எனவும் சொல்­­வார்கள். பெரும்­பாலும் வட்ட வடிவில் இருக்­கலாம். ஆனால் இதன் முக்­கிய குண­மா­னது படர்ந்து செல்­வ­தாகும். முதலில் சிறி­ய­தாக இருந்து ஓரங்­களில் வெளிப் பரவிச் செல்லும்.

அவ்­வாறு பரந்து செல்லும் போது, முதலில் ஆரம்­பித்த நடுப்­ப­குதி குண­ம­டைந்து விடும். அரிப்பும் பெரும்­பாலும் ஓரங்­க­ளி­லேயே இருக்கும்.சிகிச்­சையைப் பொறுத்த வரையில் மேலே கூறிய அதே பங்கஸ் கொல்லி பூச்சு மருந்­துகள் பலன் அளிக்கும்.

Tinea rubrum என்ற கிரு­மி­யி­னா­லேயே இந்த நோய் ஏற்­ப­டு­கி­றது. சரு­மத்தில் மாத்­தி­ர­மின்றி நகங்­க­ளிலும் முடி­யிலும், கால் விரல் இடுக்­கு­க­ளிலும் கூட இக் கிரு­மியால் நோய்கள் ஏற்­ப­டு­வ­துண்டு.

சரும நோய்கள் பல. அவற்­றி­டையேயான வித்­தி­யா­சங்கள் நுணுக்­க­மா­னவை. உங்­களால் கண்டு பிடிப்­பது சிர­ம­மா­னது.

ஒரு சரும நோய்க்கு தந்த பூச்சு மருந்­து­களை அதே­போன்ற நோயா­கத்தான் இருக்­கி­றது என நினைத்து வேறு புதிய சரும நோய்களுக்கு உபயோகிப்பது ஆபத்தில் முடியலாம்.

பல­வி­த­மான பழைய பூச்சு மருந்­துகள் பல­ரிடம் சேர்ந்து கிடப்­பதை அவ­தா­னித்திருக்­கிறேன். எதை எதற்கு போடு­வது எனப் புரி­யாது திணறிக் கொண்­டி­ருப்­பார்கள்.

சில காலா­வ­தி­யான மருந்­து­க­ளா­கவும் இருப்­ப­துண்டு. மருந்­து­களை மாறிப் பூசி துன்பப்பட்டவர்கள் பலர்.

பழைய மருந்­து­களை ஒரு­போதும் சேமித்து வைக்­கா­­தீர்கள். குண­மா­கி­யதும் வீசி­வி­டுங்கள். அதுவே உங்­க­ளுக்கு பாதுகாப்பானது.

டொக்டர். எம்.கே.முருகானந்தன்


Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக